From poo@... Sat Nov 10 21:11:53 2001
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 05:11:53 -0000
Received: (qmail 74567 invoked from network); 11 Nov 2001 05:11:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 05:11:52 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 05:11:51 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sun, 11 Nov 2001 08:08:19 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.62.196]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sun, 11 Nov 2001 08:10:19 +0300
Message-Id: <4.3.0.20011111071754.00c57870@...>
X-Sender: poo/202.54.6.1@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sun, 11 Nov 2001 08:22:14 +0300
To: Nasir Haniffa
Subject: Re: [tamil] Speakers [Re: (Stereo Effect -1)]
Cc: tamil@...,tamil-ulagam@yahoogroups.com,agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3BEDD370.964DE8F0@...>
References: <20011111005618.58828.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 12991

At 10:25 AM 11/11/2001 +0900, you wrote:
>சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
>
>உண்மையில் அந்த "இரட்டைக் கூம்புக் குழாய்"( முன்னைய மடலுக்கு
>தேடிய சொல் இதுதான்.. நன்றி) தான் ஒலிபெருக்கி. எனவே, அதனுடன் கூடிய
>loudspeaker இற்கு ஒலி பெருக்கி எனும் சொல்சரிதான். மாற்றம் தேவையில்லை.
>
>ஆனால், இப்போது, பல வடிவங்களில், பல நோக்கங்களுக்காக ஸ்பீக்கர் வந்து
>விட்டது. பல ஒலி எழுப்புகின்றன. ஒலி பெருக்குவதில்லை. அவற்றிற்கு இப்பெயர்
>
>பொருந்தாது என்றே எண்ணுகிறேன்.
>
>உதாரணங்களும், சாத்திய தமிழாகக்ங்களும்
>
>
>Loudspeaker - ஒலிபெருக்கி
>Speaker - ஒலிப்பான்.
>bass (speaker) - அடியொலிப்பான்.
>Earphone - காதொலிப்பன் அல்லது நுண்ணொலிப்பான்.
> ( முன்னொரு முறை இதற்கு "நுண்ணொலி பெருக்கி" என்று தமிழாக்கினேன்.
>சங்கடமாயிருந்தது. )
>
>வேறு அபிப்பிராயங்கள்?
>
>அன்புடன்..
>நாஸிர்
>
>
>
>"r.-" wrote:
>
> > இந்த ஒலிவாங்கி என்பது mic/receiver என்று சந்தர்ப்பங்களிலே
> > பயன்படுகின்றது. ஒலிபெருக்கி என்பது amplifier என்றதற்குப் பொருத்தமாக
> > இருக்கும். ஒலிப்பான் என்பது acustic சம்பந்தமாக எங்கும் பயன்படக்கூடுமோ?
> > audio என்பதற்கு ஒலியம் என்பது பயன்படுகின்றது. ஒலிபெருக்கி என்பது
> > நன்றாக பயன்பாட்டிலே வந்துவிட்டது; எல்லோருக்கும் இதுதான் என்று புரியும்
>
> > அளவுக்கும் இருக்கின்றது (பொதுவாக, அநேகருக்கு, அந்தச்செவ்வரத்தம்பூ
> > வடிவிலேயிருக்கும் 'இரட்டைக்'கூம்புக்குழாய் மட்டும்தான் ஒலிபெருக்கி)
> > அந்தக்குழாய்க்கு ஒலிப்பான் என்பது நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால்,
> > ஆழமாகப் பழகிப்போனதை மீளச்சென்று மாற்றமுடியுமா, மாற்றத்தான் வேண்டுமா
> > என்பதே கேள்விகளாக எழுகின்றன. [இந்த அடிப்படையிலேயே எனக்குக் கண்ணாடி
> > என்பதற்கான சொல்லமைவிலே குழப்பம் வந்தது].
> >
> > வேறு சொற்கள் பயன்பாட்டிலே இருக்கக்கூடும்.
> >
> > மற்றோர் கருத்துக்களையும் அறிய அவா.
> >
> > -/.
>

அன்பிற்குரிய இணையத்தாருக்கு,

மேலே உள்ள ஆக்கங்களில் எதுவொன்று உங்களுக்குச் சரியென்று படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்வதில் எனக்கும்
உடன்பாடே!
இருந்தாலும் சில முரண்களைச் சொல்லுவதுபயனுள்ளது என்று எண்ணுகிறேன்

தமிழில், பேசுதல் என்ற வினை "ஆற்றொழுக்குப் போல தொடர்ச்சியாக பெய்தல்" என்ற பொருளிலேயே
எழுந்தது. மழை பெய்வதுபோல சொற்களையும் கருத்துக்களையும் பெய்வது பேய்ச்சு>பேச்சு. இது வெறும் பொருள்
விளங்காது எழும் ஒலியல்ல. ஒழுங்கு இல்லாவிட்டால் அது குழறல்; பேச்சு அல்ல. பெய்தல் என்ற வினை
பேச்சாக மாறியது எப்படி? இதற்கு ஆதாரம் "மழை நல்லாப் பேஞ்சுதா" என்ற வழக்கே.
பெய்ந்தது>பெய்ஞ்சது>பேஞ்சது. அதே போல பெய்து>பெய்சு>பேச்சு. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அதே
சொல், மூலம் தெரியாது மேலை மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் speech/speak என்று
கிடக்கிறது. இந்தையிரோப்பிய மொழிகளில் ஸ் என்ற ஒலி முன்னொட்டு அந்த மொழிகளின் இயல்பால்
சேர்வது இயற்கைதான்.

இதே போல ஒலி என்ற சொல் "ஓ"வென்று தொடர்ச்சியாக மாந்தன் தொண்டையில் இருந்து எழுவது. இது
வெறும் அதிர்வு. இதற்கு ஒழுங்கு தேவையில்லை; பொருள் தேவையில்லை; ஏன் சொல்கூடத்
தேவையில்லை. ஒலி என்பது அடிப்படை. பேச்சு என்பது ஒலிகளால் ஆனது. ஒலி இந்தையிரோப்பிய
மொழிகளில் phone என்று வரும்.

இதே போல ஒரு கம்பியை இழுத்துக் கட்டி அதைச் சுண்டித் தெறிக்க எழுவதும் ஒலிதான். ஆனால் இது தொண்டைக்
குரல்வளையில் இருந்து எழும் அதிர்வலையைப் போன்று அதே பொழுது இன்னொரு நரம்பின் (மாழையாக
இருக்கலாம்) அதிர்வால் எழுவது. இந்த்ச் சுண்டு இந்தையிரோப்பிய மொழிகளில் sound என மாறும்.
பூதிகம் பௌதிகம் ஆனது போல, குரவம் கௌரவம் ஆனது போல. இததகைய ஒலிமாற்றம் பல சொற்களில்
ஏற்பட்டிருக்கிறது. நரம்பைத் தெறிப்பதால் தான் அது தெறிங்கு (string). சுண்டு என்ற சொல் மாந்தன்
விலங்கின் நரம்பை வில்லில் பொருத்திக் காட்டியபின் தான் எழுந்திருக்க முடியும்; மேலும் மாழையை அல்லது
உலோகத்தைக் கண்டுபிடித்தபின் தான் விரிவாகப் பரவியிருக்க முடியும்.

எனவே ஒலி என்பது சுண்டிற்கும் முந்திய சொல்.

அடுகு என்ற தெலுங்குச் சொல் தமிழின் மறு உருவம் தான். கேள் என்று பொருள். அடுகும் audio வும் ஒன்றுதான்.

கேள்வி என்பது querry ஆகும். கேட்டம் question ஆகும்.

வேடிக்கையைப் பார்த்தால், தொலை ஒலியம் (telephone) இக்காலத் தமிழில் தொலைபேசி
எனப்படுகிறது. பேசி என்ற பெயர் பேசுகிறவனுக்கு எற்பட முடியுமே தவிர, ஊடாடுகிற கருவிக்கு வராது;
ஆனால் அப்படி முரணாகச் சொல்லுகிறோம். எல்லாம் ஒரு பழக்கம் தான். பேசிக்கு (speaker) ஒலிப்பான்
என்று சொல்ல முற்படுகிறோம். அது சரியே என்று அமைதி கொள்ளுகிறோம்.

மொழி இப்படிப் பல முரண்களைக் கொண்டதுதான். இதுதான் சரியென்று ஒன்றும் கிடையாது. ஆனாலும் செந்தரம்
என்று ஒரு கூட்டத்தினர் முயன்று கொண்டு தான் இருக்கிறோம், அதிகாரி வரும்வரை.

ஒரு மா.கோ.இரா. வந்து தான் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அடுத்த
மா.கோ.இரா எப்பொழுது வருவார்? :-)

மொத்தத்தில் வல்லான் வகுத்ததே வாய்க்கால். நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோட புல்லுக்கும்
ஆங்கே பொசியுமாம்.

ஏழரைக் கோடி மக்கள் என்றால் சும்மாவா இருக்கிறது?

அன்புடன்,
இராம.கி.