From venkat@... Sat Nov 10 21:59:37 2001
Return-Path:
X-Sender: venkat@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 05:59:37 -0000
Received: (qmail 14962 invoked from network); 11 Nov 2001 05:59:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 05:59:37 -0000
Received: from unknown (HELO n35.groups.yahoo.com) (216.115.96.85) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 05:59:36 -0000
X-eGroups-Return: venkat@...
Received: from [10.1.2.52] by n35.groups.yahoo.com with NNFMP; 11 Nov 2001 05:59:35 -0000
Date: Sun, 11 Nov 2001 05:59:32 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Definition of a Poet and a Definition of Poetry
Message-ID: <9sl444+10fih@eGroups.com>
In-Reply-To: <9skuk8+b9gt@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2170
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 24.253.156.90
From: venkat@...
X-Yahoo-Profile: vvenkataramanan
X-Yahoo-Message-Num: 12992

எச்சரிக்கை

இன்புளுயன்ஸா தடுப்பூசிக் குத்திக்கொண்டு உறக்கம் வராது தவித்த ஒரு பனிக்கால நள்ளிஇரவி
ல், வடதுருவக் குளிரில் -- கவிஞர்கள் சாவிற்குத் தமிழர்கள் வருவதில்லை எனும்
குற்றச்சாட்டை ஆராய முற்பட்டதில் ஏற்பட்ட தெளிவு. "கொள்வோர் கொள்க; குரைப்போர்
குரைக்க". ஞமலிகள் தெளியுமோ ஞானத்தின் மார்க்கம்.

வெங்கட்.
தொராண்டோ.
---------------------------------
(தலைப்பு என்று ஒன்றும் கிடையாது)
------
{{சரணம்}}

கவிஞன் யானோர் கால நிமித்தம்;
கருவெது மின்றி உருப்படி செய்வேன்.
புவியில் யானோர் புகழுடைத் தெய்வம்
பொற்கிழி தருவோர் பொன்னடி சரணம்

{{அனுபல்லவி}}

மரபெனக் கில்லை,
மதியிலார் மூதோர்
கரத்தினில் கோலும்
காகிதம் போதும்;

சந்தமென் வேதம்
சத்தமென் நாதம்
சந்தடி கிடைத்தால்
சந்ததம் கீதம்.

விற்பனைக் கவிஞன்
விலையினில் உயர்ந்தோன்
கற்பனை இன்றிக்
காகிதம் நிரப்பிச்
சொற்பனை வளர்ப்பேன்
சோதியில் உய்வீர்.

ஓடுங் குதிரை,
குளம்பொலி யிஇன்னிசை
ஏற்றிய ஏணி
எனக்கேன் தேவை;

நாயகர் வருவார்
நாளையே மறைவார்
நானென் செய்வேன்;
நாய் தருங்காசு;

கருப்பா யிஇருந்தால்
கண்ணனின் பிறப்பு
வெளுப்பா யிருப்பின்
வெறிகொள் அழகன்.

கோரை முடியும்
கோதல் அழகே
காறைப் பல்லும்
காசென் றறிவேன்.

கரிக்கோல் புருவம்
காமன் வில்லே
கையிலே காசு,
வாயிலே தோசை

காணாக் கனிகள்
கண்களுக் குவமை
கன்னிச் சிரிப்போ
கருந்தொலை பேசி

பேனோ சிடுக்கோ,
ஈறோ எஇழவோ
காணே னடியேன்;
காசென் தெய்வம்.

(யிதுவுமது)

இருபது நாட்பின்
இளவல் ஈந்தளிக்கும்
பொற்கிழி கொள்வேன்
போற்றிநீ
போற்றி போற்றி

மாற்றலர் மடிவார்
மன்னநீ வெல்வாய்
மறவாது அடியேன்
மறுபட மெல்லாம்
மன்னநின் கொற்றம்
மக்களுக் குரைக்க
மனங்கனிந் தருள்வாய்.

போற்றிநீ
போற்றி போற்றி
போட்டுக் கொடுப்பாய்
போற்றி போற்றி
போடா தொழிந்தால்
பாடா தழிவேன் போற்றி.

{{பல்லவி/பல்வலி}}

டமிலே போற்றி
டலைவா போற்றி
டக்கர் பேபி
டாவே போற்றி
டேக்கிட் ஈஸி
டேக்அட் எல்ஐசி.

--------------------
--- In agathiyar@y..., mmanivannan@e... wrote:
> கவிஞன் யானோர் காலக் கணிதம்
> கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

>....How many Tamils came to pay
> their final respects to Bharathi or Bharathidasan?