From harikris@... Sun Nov 11 02:38:38 2001
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 10:38:38 -0000
Received: (qmail 6162 invoked from network); 11 Nov 2001 10:38:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 10:38:38 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 10:38:37 -0000
Received: from harikris ([203.199.240.137]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GMMTK900.W78 for ; Sun, 11 Nov 2001 16:08:33 +0530
Message-ID: <002801c16acb$bd3bc200$89f0c7cb@...>
To:
References: <20011111065942.41745.qmail@...>
Subject: Re: [agathiyar] chumma oru kivithai
Date: Sun, 11 Nov 2001 16:08:20 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Message-Num: 12995

தலைப்பா? அது எதற்கு?
========================

இங்கேயும் அப்படித்தான் எலக்ட்ரானிக் வாத்தியத்தில்
மங்கலமாய்க் காலையிலே மணியடிக்க அனுமனுக்கு

முதல்பூசை நடக்கையிலே முன்னூறு பேர்கூடி
சதசதக்கும் தெருவழியே சக்களக்க சளபுளன்னு

கடகடக்கும் வாகனங்கள் கடக்கின்ற ஒலிகேட்டும்
நடக்கின்ற ஒலிகேட்டும் நான்கண்ணை விழிக்கின்றேன்.

எதிர்த்தெருவில் ராகவேந்த்ரா iடப்பக்கம் குருவாயூர்
அதைத்தாண்டி மேற்காலே ஆனைமுகன் கோவிலுண்டு

மின்சார மத்தளங்கள் விட்டுவிட்டுக் குரலெழுப்பும்
தன்னார்வ எக்ஸ்னோரா சார்குப்பை என்றலறும்

சோகைபிடித் திருக்கின்ற சுவரொட்டி மிச்சத்தில்
நாகைமுகுந் தன்வதனம், நற்செய்திக் கூட்டங்கள்,

பச்சைநிறப் பிறைச்சந்த்ரன், பாசிசத்தை எதிர்க்கின்ற
மிச்சமீதத் துணுக்கெழுத்து, வெற்றியிலே என்னபடம்,

பாதாளச் சாக்கடைக்காய்ப் பாதாளம் வரைதோண்டி
ஆதாயம் பார்த்ததென ஆரெஸ்ஸு பாரதிக்குப்

பேர்கெ()டுத்து எழுதிவைத்தும் பின்னடைவு கொடுக்காத
தாரெழுத்துக் கோலங்கள், தளராத கெளன்சிலர்கள்,

'iந்தத்தரம் நல்லமழை iருந்தாலும் iருக்கட்டும்
சுந்தரத்தைப் பாத்துடுப்பா துட்டானும் ஒழிச்சுடலாம்

பாலாறு தண்ணிக்குப் பஞ்சத்தை ஏற்படுத்திக்
கோளாறு பண்ணாமல் கொஞ்சம்நீ பாத்துடப்பா'

என்றுபல வகையாக எதிரடுக்கு மாடியிலே
நின்றுபல குரல்கிளம்பும் நிமிஷங்கள் கரைந்தோடும்.

'ஏந்தாச்சா' என்றபடி என்னறைக்குள் காபியுடன்
பாந்தமுடன் வருகின்ற பத்மாவதி யம்மா(பா)ளின் -

அத்தாங்கஇ நம்மாத்து அடடாவோ நம்மூட்டு
வித்தாரக் குலதெய்வம் மேலிடமாம் 'நம்மேடம்' -

குரல்கொடுக்க என்தலையோ கொஞ்சமட்டும் அசைந்தாடும்
விரல்நுனியோ எப்போதும் விசைப்பலகை மேய்ந்தபடி....


ஹரி கிருஷ்ணன்.



----- Original Message -----
From: "era.murugan achwin"
To:
Sent: Sunday, November 11, 2001 6:59 AM
Subject: [agathiyar] chumma oru kivithai


| சும்மா ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலைப் பாட்டு
| --------------------------------------------
|
| முச்சந்திப் பிள்ளையாரே மூணாம் தெருமுனையில்
| வச்சகல்லில் தாடியோடு வளம்சேர்க்கும் பெரியாரே
| வக்கணையாய் கவிபொழிய வார்த்தை தாரும் - இன்றேல்
| பாட்டெழுதத் தமிழ்சினிமா போயிடுவேன் சாக்கிரதை.
|
| பக்கத்து ஓட்டலில் தம்ளர் டபரா
| கரண்டிச் சத்தமும் காசெட் வேதமும்
| மொசைக் தரையில் கோலக் குழலும்
| அருகில் கேட்கப் பொழுது புலர்ந்தது
|
|
|