From harikris@... Fri Nov 16 00:52:43 2001
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 08:52:42 -0000
Received: (qmail 77742 invoked from network); 16 Nov 2001 08:52:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 08:52:42 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 08:52:42 -0000
Received: (qmail 9493 invoked from network); 16 Nov 2001 14:22:32 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.128.118) by 0 with SMTP; 16 Nov 2001 14:22:32 +0530
Message-ID: <005601c16eaa$4a019d40$7680d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <3.0.3.32.20011027082314.0074d008@...> <3.0.3.32.20011027114138.0074ea20@...> <3.0.3.32.20011028000844.0078f83c@...>
Subject: Re: [agathiyar] Bhuvaneswari Navaratna Manimalai
Date: Fri, 16 Nov 2001 14:23:35 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
X-Yahoo-Message-Num: 13122

நண்பர்களே,

அண்மையில் புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை பெரிசு சொற்படி எழுதியிருந்தேன். முதல் பாட்டில் ஒரு சிக்கலான யாப்பு முறையைக் கையாண்டிருந்தேன். (நான் கையாளவில்லை. அப்படி அமைந்தது. முதல் இரண்டு அடிகள் அப்படி அமைந்ததைப் பார்த்து அதன்பின் அதே போலத் தொடர்ந்தேன்.)

இரண்டாவது சீரின் மூன்றாவது அசை (சரி. தமிழ்ல சொல்லிடறேன். Third syllable of second foot.) முதல் சீரோடு எதுகை போல ஒலிக்கும். அதே இரண்டாவது சீரின் முதல் அசை நான்காவது சீரோடு எதுகைபோல்ஒலிக்கும். அந்தப் பாடலில் ஒரு மணியில் பெயரைச் சொல்ல வேண்டும். பெரிசுசொன்ன மந்திராட்சரத்தைச் சேர்க்க வேண்டும் என்ற தேவையும் இருந்தது. அதனால்தான் அப்படிப் பட்டவற்றை, முற்றிலும் மற்ற சீர்களைச் சாராது இருக்கும் மூன்றாவது சீரில் வைத்தேன்.

அப்படிச் செய்ததில் ஒரு சிறிய பிழை நேர்ந்துவிட்டது.

படர்பொற்கொடி சுடர்விட்டெரி பதந்தொட்டனன் டரால்
படுவெந்துயர் கணமேபட திடமாயிருமனனே. (1)

என்ற கடைசி அடியில் வேறொரு எதிர்மறைப் பொருளும் வந்தவிட்டது. பெரிசு உடனே "அப்ஜக்ஷன்டா மடையா" சொல்லிவிட்டது. மிக நாசூக்காய் சொல்லியிருந்தார். எனக்குப் புரியவே இல்லை. அப்புறம் கேட்டார்: 'இடரால் படு வெந்துயரைஉடனே (நான்) பட (படுவதற்காக) படர்பொற்கொடி பதந்தொட்டனன். என்ன வேண்டுமானாலும் நடக்கும். திடமாயிரு மனமே" என்றொரு பொருள் அதில் தொனிக்கிறதல்லவா? இப்படி மறைமுகப் பொருள் வருவது அறம்பாடுதலில் ஒரு வகையல்லவா?' எனக்கு அப்போதுதான் உறைத்தது. எப்போதும் வாழ்த்து எழுதும்போதும் தெய்வங்கள் மீது எழுதும்போதும் சர்வ ஜாக்கிரதையாக செய்வேன். தவற விட்டிருக்கிறேன். நான்கைந்து விதமாகத் திருத்தி அனுப்பி"ரைட்டா" கேட்டால் எல்லாவற்றுக்கும் "கொய்ட்டு" சொல்லி அலுத்துப் போன பெரிசு, தானே திருத்தத்தையும் செய்து அனுப்பியது.

படர்பொற்கொடி பதந்தொட்டிட இடர்கெட்டுயர் தினமே
பரைதொட்டிட வினைகெட்டிடும் திடமேயிது நிஜமே -
அல்லது திடமாயிரு மனனே

மேலேயிருப்பது 'நாட்டாம மாத்திச் சொன்ன தீர்ப்பு'. மற்ற அடிகளோடு யாப்பில் ஒத்துப் போவதற்காக, சிறிய மாற்றம் செய்திருக்கிறேன்.

படர்பொற்கொடி பதந்தொட்டிட iடர்கெட்டுயர் நிதமே
படருங்களி; வினைகெட்டிடும் திடமாயிரு மனனே.

அவர் உடனே அனுப்பிவிட்டார். திருத்தத்தைப் பொருத்தமாகச் செய்ய எனக்குத்தான் நாள்பிடித்தது. அன்பர்கள் மாற்றிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பிழை பொறுக்க வேண்டும்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "jaybee"
To: "Hari Krishnan"
Sent: Saturday, October 27, 2001 4:08 PM
Subject: Re: [agathiyar] Bhuvaneswari Navaraatna Manimalai



அன்புள்ள ஹரி,

At 01:21 PM 10/27/01 +0000, you wrote:
>குருஜி,
>
>அது தவறுதான். அறம் விழுந்திருக்கிறது. கவனிக்காமல் விட்டிருக்கிறேன். திருத்தியிருப்பது சரியாக
இருக்கிறதா சொல்லுங்கள்.


அந்த 'படுவெந்துயரை' மாற்றமுடியுமா, பாருங்களேன்.


அன்புடன்

ஜெயபாரதி