From nagas baan@... Fri Nov 16 03:59:42 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 11:59:42 -0000
Received: (qmail 8113 invoked from network); 16 Nov 2001 11:59:42 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 11:59:42 -0000
Received: from unknown (HELO n6.groups.yahoo.com) (216.115.96.56) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 11:59:40 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.95] by n6.groups.yahoo.com with NNFMP; 16 Nov 2001 11:59:40 -0000
Date: Fri, 16 Nov 2001 11:59:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Deepavali releases
Message-ID: <9t2v39+ilsk@eGroups.com>
In-Reply-To: <002701c16d5a$76406360$a1bd1b42@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1306
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan" X-Yahoo-Message-Num: 13125
--- In agathiyar@y..., "Narayan Swaminathan" wrote:
> தீபாவளிக்கு என்ன படம் வெளியாச்சு?
> எது தேறும், தேறாது..
> சொல்லுங்கய்யா சீக்கிரம்.
> புதுத் தமிழ்ப்படம் இல்லாத தீபாவளி ஒரு தீபாவளியா?
ஆளவந்தான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு திரையரங்கத்தை ஆளவந்திருக்கி
றார் - இரண்டுமுறை எட்டிப்பார்த்துவிட்டு ஓடியே வந்துவிட்டோம் - அவ்வளவு கூட்டம்.
ஆனால் படம் அத்தனை சிலாக்கியமாய் இல்லை என்று கேள்வி ! பாலச்சந்தரின் நூறாவது
படம் பார்த்தாலே பரவசமும் அதே மாதிரிதானாம் ! விஜயகாந்தின் படத்தைப்பற்றி
கேட்கவே வேண்டியதில்லை.
நந்தா வந்தால், பார்க்கவேணும் !
'காற்றுக்கென்ன வேலி' என்று ஒரு நல்ல படம் வந்திருப்பதாய் சொல்கிறார்கள்,
சென்னையின் மூலையில் எங்கோ இரண்டு தியேட்டர்களில் காலைக்காட்சியாக மட்டும்
ஓடுகிறதாம். பாரதியார் பாடல்களுக்கு இளையராஜா இசை. இலங்கைப் பிரச்சனையை
லேசாகத் தொடுகிற காதல் கதை என்பதால், தணிக்கைக்குழுவில் ரொம்பவும் கஷ்டப்படுத்தி
விட்டார்களாம், ஒரு வழியாய் படம் வெளியானபிறகும் விட்டேனா பார் என்று ஒரு கோஷ்
டி படத்தைத் தடைசெய்ய கோர்ட் படியேறியிருக்கிறது. படம் தியேட்டரைவிட்டு
தானாகவோ, சட்டப்படியோ தூக்கப்படுவதற்குள் பார்த்துவிட ஆசை ... பெங்களூரில்
உட்கார்ந்துகொண்டு ஆசைப்பட மட்டும்தான் முடியும் :-(