From jaybee@... Fri Nov 16 06:20:41 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 14:20:41 -0000
Received: (qmail 45548 invoked from network); 16 Nov 2001 14:20:40 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 14:20:40 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 14:20:34 -0000
Received: from user (sp-103-73.tm.net.my [210.186.103.73]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMW007H9D60XQ@...> for agathiyar@yahoogroups.com; Fri, 16 Nov 2001 22:20:28 +0800 (SGT)
Date: Fri, 16 Nov 2001 22:20:07 +0800
Subject: Re: [agathiyar] POttiyum pirArththanaiyum
In-reply-to: <002e01c16db2$df22f160$92316acb@pavilion>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "M.Sivagnanam" Message-id: <3.0.3.32.20011116222007.006ac88c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011114193156.0072a698@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13130
At 04:52 PM 11/15/01 +0800, Sivagnanam wrote:
>அன்பர்களே,
>iது மலேசியாவில் இன்றுள்ள சமூக அவலம். இந்த சாமி லாட்டரி சீட்டுக்கு ரொம்ப மவுசு. எப்படியாவது
நம்பிக்கை தழைக்காதா எனத் தவிக்கும்பெரும்பாலோரின் எதிர்பார்ப்பில் தழைப்பார்கள் முனியாடியும்,
முனீஸ்வரரும்.
>
>
>இது பற்றி இதற்குமுன் படைப்பு ஏதேனும் வந்துள்ளதா என்று தெரியவில்லை. டாக்டர் சொல்லுங்கள்.
தெரியவில்லை. பொதுவாகக் கோயில்களைத் தொட்டு
எழுதமாட்டார்கள். இந்தமாதிரியான கதை அமைப்பில் முனீஸ்வரரைச்
சம்பந்தப்படுத்தி யாரும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே.
ஒன்று, முனீஸ்வரரிடம் உள்ள பயமாக இருக்கலாம்;
அல்லது முனீஸ்வரர் கோயில் கமிட்டியிடம் இருக்கும் பயமாகவும்
இருக்கலாம்.
அதாவது அந்த லாட்டரி நம்பர் கேட்பதுபற்றிக் குறிப்பிடுகிறீர்களா?
மாய்மாலங்கள் என்று நினைக்கமாட்டார்கள். அவரவர் வீடுகளுக்குப்
பக்கத்திலேயே ஏதாவது கோயிலில் இதெல்லாம் நடந்துகொண்டுதானிருக்கும்.
அந்த அளவுக்கா பிரக்ஞையற்று இருக்கப்போகிறார்கள்?
அவர்களேகூட இதை எங்காவது செய்திருக்கலாம். ஆசை,
யாருக்குத்தான் இல்லை? நான்கூட அடுத்தமுறை பத்துக்காவான் எஸ்ட்டேட்டில்
உள்ள சீனரொருவர் நடத்தும் கோயிலில் நம்பர் கேட்கலாமா என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன். இதுவரை கேட்டதில்லை. எல்லாம் ஒரு சபலம்தான்.
அன்புடன்
ஜெயபாரதி
>----- Original Message -----
>From: "jaybee" >To: >Sent: Wednesday, 14 November 2001 7:31
>Subject: [agathiyar] POttiyum pirArththanaiyum
>
>
>
>அன்பர்களே,
>
>"எங்கே சுங்கைப்பட்டாணியின் பங்கு?" என்று இராமுருகன்
>கேட்டிருந்தார் அல்லவா?
>இதோ இருக்கிறது.
>மண்வாசனை கமகமவென்று கமழ எழுதியது.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>போட்டியும் பிரார்த்தனையும்
>
>அந்த ஊர் ஒரு பெரிய ஊர். ஒருகாலத்தில் ஊர் சிறியதாகத்தானிருந்தது.
>அதைச் சுற்றிலும் அந்த இடத்தில் ரப்பர் தோட்டங்கள் பல இருந்தன. ஆங்காங்கு
>அந்தந்த தோட்டத்தின் லைன்வீடுகளில்குடியிருந்த ரப்பர் பால் வெட்டும்
>தொழிலாளர்கள் குடியிருந்தனர். ஒவ்வொரு தோட்டத்திலும் சில கோயில்கள்
>வைத்துக்கொண்டு அந்த மக்கள் வழிபாடு செய்துவந்தனர்.
>
>ஒரு நகரமைப்புத் திட்டத்தைப் பின்பற்றி அந்த சிற்றூரைச் சுற்றிலும் பல
>தொழிற்சாலைகளைக் கட்டினார்கள். அந்த நகரமும் பல குடியிருப்புத்
>தாமான்களை(காலனிகள்) உள்ளடக்கிக்கொண்டு பேரூராக விளங்கியது.
>முன்பிருந்த தோட்டத்தில் அமைந்திருந்த கோயில்களில் சில, அந்த
>ஊரின் பல்வேறு பகுதிகளில் விளங்கலாயின.
>அந்த ஊரிலிருந்து மேற்கில் செல்லும் பெருஞ்சாலையொன்றின் ஓரத்தில்
>சற்று மேட்டுப்புறமாக ஒரு கோயில் விளங்கியது.
>அது ஒரு முனியாண்டி கோயில்.
>அந்த வட்டார மக்கள் அந்த முனியின்மீது மிகுந்த பக்தியும் பயமும்
>கொண்டவர்கள். அந்த முனியாண்டி கோயிலில் ஒரு சாமியாடி இருந்தார்.
>அவருக்கு அருள் வரும். மக்கள் சென்று அவரிடம் தங்கள் குறைகளைச்
>சொல்லிக்கொள்வார்கள். அந்த சாமியாடி அவர்களுக்கேற்ற பரிகாரங்களைச்
>சொல்வார். பலர் குறைகேட்பதற்காக வருவதில்லை. லாட்டரி டிக்கெட்டுக்கு
>நம்பர் கேட்பார்கள். அந்தச் சாமியாடி கொடுத்த சில நம்பர்கள் விழுந்ததன்பேரில்
>அந்த சாமியாடிக்கும் மவுசு அதிகமாயிற்று. அத்துடன் அந்த முனியாண்டி கோயிலும்
>மிகவும் பிரபலமாயிற்று.
>மிகவும் வரதையான தெய்வமாக மக்களால் கருதப்பட்டு விளங்கினார்,
>அந்த முனியாண்டி சாமி. அங்கு வரும் பக்தர்கள் நிறையச் செலவிட்டு, அந்தக்
>கோயிலில் மோசேய்க், பளிங்கு எல்லாம் போட்டு கோயிலைப் பிரகாசப்படுத்தி
>வைத்தனர். லட்சக்கணக்கான ரீங்கிட்டுக்களைச் செலவிட்டு தமிழ்நாட்டிலிருந்து
>ஸ்தபதிகளை வரவழைத்துக் கோயிலுக்குத் திருப்பணி செய்வித்து, அதைவிட
>இன்னும் நிறையச் செலவிட்டு தமிழகத்தின் சிறந்த சிவாச்சாரியார்கள் என்று
>பெயர்பெற்றவர்களைக் கொண்டு கும்பாபிஷேகமும் செய்துவைத்தார்கள்.
>முனியாண்டி சாமியை 'முனீஸ்வரர்' என்றும் அழைக்கலாயினர்.
>அந்தக் கோயிலில் பல பரிவார தெய்வங்களை - முருகன், விநாயகர்
>உட்பட - நிறுவினர். முனீஸ்வரர் என்னும் போது அவருக்கு ஈஸ்வர அந்தஸ்து
>ஏற்பட்டுவிட்டதல்லவா? ஆகவேதான் முருகன், பிள்ளயார் எல்லாருமே பரிவார
>ந்தஸ்தை அந்தக் கோயிலில் பெற்றனர். முனீஸ்வரரின் சன்னிதியின் முன்னால்
>'முன்னோடி' என்னும் காவல் தெய்வம் ஒருவர் இருந்தார்.
>மிகவும் வரதையான தெய்வமாகக் கருதப்பட்ட முனீஸ்வரருக்கு முக்கிய
>நாட்களிலும் ஞாயிறு சனிக்கிழமைகளிலும் பல கிடாய்கள் வெட்டப்பட்டன.
>இப்படிப்பட்ட கியாதிகளுடன் விளங்கிய அந்த முனீஸ்வரர் கோயிலுக்கு
>ஒருநாள் ஒரு பஸ் வந்து நின்றது. ஏர் கண்டிஷன் போடப்பட்ட லக்சரி கோச், அது. 'ஃப்ஸ்ஸ்ஸ்ஸ்க்க்க்.....'
>என்ற ஒலியுடன் அதன் கதவுகள் திறந்துகொள்ள
>அதனுள்ளிருந்து தடதடவென்று ஒரு கூட்டம் இறங்கியது. அது ஒரு கால்பந்து
>விளையாட்டுக்குழு. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள்.
>ஏற்கனவே அந்தக் கூட்டத்தினரைச் சேர்ந்த ஒருவர் அன்று அந்தக்
>கோயிலில் ஒரு சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஏற்பாட்டின்படி
>ஒரு கறுப்பு ஆடு வெட்டப்பட்டது. பின்பு படையல் வகையறா. சிறப்பு வழிபாடு.
>அந்தக் கூட்டத்தின் தலைக்கட்டு போன்ற ஒருவர் முனீஸ்வரரிடம்
>பிரார்த்தனை செய்துகொண்டார்.
>
>"அய்யனே! இந்த முறை எங்க டீம் பேராக் மாநில டீமோடு மோதுகிறது.
>எப்படியாவது எங்க டீம ஜெயிக்க வச்சுறுங்க. வச்சுட்டா மூணு கறுப்பு ஆடு வெட்டி,
>படையல்போட்டு, ஐந்நூறு ஆட்களுக்கு அன்னதானம் போடுறோம்".
>
>இரண்டுநாட்கள் கழித்து இன்னொரு பஸ். அதுவும் லக்சரி கோச்.
>மறுபடியும் 'ஃப்ஸ்ஸ்ஸ்க்க்க்...' மறுபடியும் தடதடவென்று ஆட்கள். மறுபடியும்
>கிடாய் வெட்டு. கறுப்பு ஆடுதான். அதே மாதிரி படையல்.
>தலைக்கட்டு ஆசாமி ஒருவரின் வேண்டுதல்.
>"அய்யனே! இந்த முறை எங்க டீம் பாஹாங் மாநில டீமோடு மோதுகிறது.
>எப்படியாவது எங்க டீம ஜெயிக்க வச்சுறுங்க. வச்சுட்டா மூணு கறுப்பு ஆடு வெட்டி,
>படையல் போட்டு ஐந்நூறு ஆட்களுக்கு அன்னதானம் போடுறோம்".
>
>கால்பந்தாட்டப்போட்டி நடைபெறும் நாள். நேரம்.
>கோயில் சன்னிதி.
>முன்னோடியும் முனீஸ்வரரும் முன்னால் பார்த்தபடி இருந்தார்கள்.
>அவர்களின் முன்னாலிருந்த கோயில் கட்டட சமாசாரம், ரோடு எல்லாம்
>மறைந்தன. அவற்றிற்குப் பதில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்று தெரிந்தது.
>அதில் பேராக், பாஹாங் மாநில டீம்கள்இடம்பெற்றிருந்தன. பந்துவிளையாட்டு
>ஆரம்பமாகியது.
>
>முன்னோடி முனீஸ்வரரைப் பார்த்துக்கேட்கிறார்....
>"என்ன சாமி? ரெண்டு டீமுமே ஒரே மாதிரியான பக்தி உள்ளவுங்க.
>ரெண்டு டீமுமே ஒரே மாதிரியா வேண்டுதல் பண்ணியிருக்காங்களே?
>நீங்க யாரை ஜெயிக்க வைக்கப்போறீங்க?"
>
>முனீஸ்வரின் முகத்தில் மென்சிரிப்பு ஒன்று தோன்றியது. அந்தச்
>சிரிப்பில் அவருடைய முகம் பிரகாசித்தது. புஸ்தி மீசையின் கறுமைக்கு
>மெருகூட்டும்வண்ணம் அவருடைய குறுநகையில் சற்றே வெளித் தெரிந்த
>அந்த கோரைப்பற்கள் மின்னின.
>தன்னுடைய இருக்கையின்மீது நன்றாகச் சாய்ந்துகொண்டார்.
>ஏற்கனவே போட்டிருந்த அட்டணைக்காலைமாற்றிப் போட்டுக்கொண்டார்.
>தம்மேல் பிரியப்பட்டு யாரோ பக்தன் ஒருவன் வைத்துவிட்டுப்போன
>சாராயத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.
>மெதுவாக உறிஞ்சிக்கொண்டே.....
>ரொம்ப ரொம்ப சாவதானமாக.....
>தம் முன்னால் நடைபெறும் விறுவிறுப்பான கால்ப்பந்துப்
>போட்டியைக்கண்டு ரசிக்கலானார்.
>
>==================================================