From poo@... Fri Nov 16 12:23:06 2001
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 20:23:06 -0000
Received: (qmail 41822 invoked from network); 16 Nov 2001 20:23:05 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 20:23:05 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 20:23:05 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Fri, 16 Nov 2001 23:20:35 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.51.93]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Fri, 16 Nov 2001 23:22:38 +0300
Message-Id: <4.3.0.20011116232651.00c7e100@...>
X-Sender: poo/202.54.6.1@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Fri, 16 Nov 2001 23:34:03 +0300
To: tamil-ulagam@yahoogroups.com
Subject: Re: [tamil-ulagam] sOkku
Cc: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011114185806.F19D9A739@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 13139
At 12:28 AM 11/15/2001 +0530, you wrote:
> >>Sulaiman wrote:
>
> >அதையே இப்படி கவிதை மாதிரி சோக்காக்கியிருக்கலாமில்லேப் பெருச்சு!;-)
> >
>
>அன்பின் முனைவர் இராம.கி,
>
>நண்பர் சுலைமான் வேறொரு அஞ்சலில் "சோக்கு" என்று எழுதியதும் ஒரு நினைவு வந்தது, வினாவும் வந்தது.
>
>எங்கள் கிராமப் பகுதிகளில் "அவன் ஒருசோக்குப் பேர்வழி",
>"சோக்கு பண்ணியே காசை விட்டான்" என்பது போன்ற அரட்டைகள் உண்டு.
>அவர்கள் பார்வையில் "மைனர் பேர்வழி = சோக்குப் பேர்வழி";
>ஆடம்பரம், பகட்டு செய்வோரைக் குறிப்பதாக அச்சொற்றொடர்
>இருக்கும்.
>
>(கோவை சரளா, joke என்பதை சோக்கு என்று படங்களில் சொல்வார் )
>
>இந்த சோக்குக்கும், joke என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் தொடர்பு
>இருக்க முடியுமா? அல்லது joke(r) என்ற ஆங்கிலம் தமிழில்
>வழக்கில் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா? என்று அறிய ஆவல்.
>
>அன்புடன்
>நாக.இளங்கோவன்
அன்பிற்குரிய இளங்கோ,
Joke என்ற சொல் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இதே கேள்வியை திரு. நா.கணேசன் 1999அக்டோபர்
திங்களில் தமிழ் இணையத்தில் கேட்டிருந்தார். அதற்குச் சொன்னகை என்ற சொல்லையும் புதிதாக
இட்டிருந்தார். பெரியவர் செயபாரதியும் கிறிமை, பகடி என்ற சொற்களை இதற்குப் பயன்படுத்தலாமா என்று
கேட்டிருந்தார். நான் நகையாடினேன் என்றே சொல்லலாம் என்று கூறியிருந்தேன்.
இப்பொழுது நீங்கள் அந்தச் செய்தியைத்திரும்பவும் கேட்டிருக்கிறீர்கள்.
போன முறை சொன்ன போது நகையாடுதலின் வேர்ப்பொருள் விளக்க வில்லை.
இப்பொழுது அந்த விளக்கத்திற்கு வருகிறேன்.
சிரிப்பு என்பது ஒருவித உணர்வு வெளிப்பாடு. கிளுக் என்று அந்த ஒலியை எழுப்புகிறோம். "அவர்
கிளுக்கென்று சிரித்தார்" என்று சொல்லுகிறோம். கிளுகிளுப்பு அடைகிறோம். கிளுக்கிற காரணத்தால் அது
கேளிக்கை ஆகிறது. களியாகிறது.
ஆங்கிலத்திலும் கிளுக் என்னும் ஒலியே laugh என்னும் சொல்லுக்கு மூலம் ஆகிறது.
The word laugh is ultimately onomatopoeic, imitative of the sound of
laughter. It goes back to Indo-European *klak-, *klok-, which also produced
Greek klossen, a veb denoting the clucking of hens, and Latin clangere
'sound' (source of English clangor). Its Germanic descendents were *khlakh,
*khlokh, from which come German nd Dutch lachen, Swedish and Danish, l, and
English laugh.
ஆனாலும், அந்தக் கிளுக்கு என்னும் களி உணர்வு விலங்காண்டி காலத்தில், சித்திர எழுத்துக்களில் தெரியப்
படுத்த வகையில்லாத போது, அதே ஒலி கொண்ட, படத்தால் விளக்கக் கூடிய மற்றொரு சொல் பகரச்
சொல்லாக (substitute)ப் பயனாகிறது. (இதற்கு மொழியியலார் ஒரு நுட்பச் சொல்லைக் கூறுவார்கள்.
அது எனக்குச் சட்டென ஞாவகத்திற்கு வரவில்லை. அசுகோ. பர்போலோ சிந்து வெளி எழுத்து பற்றி எழுதிய
பொத்தகத்தில் இந்த உத்தி பல பழமையான மொழிகளில் பயனாக்கப் பட்டதைவிளக்குவார்.)
தமிழில் கிளுக்கிற்குச் செய்த உத்தி இப்படி கீழே விழுத்தாட்டுவதாக இருக்கவேண்டும்.
கில்லுதல்>கெல்லுதல்= தோண்டுதல்
கெல்லு>கேலு = விளையாட்டு ( விளையில்ஆடுவது; விளை என்பது களத்து மேடு; நெல்லை மாவட்டத்திலும்,
குமரி மாவட்டத்திலும் விளை என்று முடியும் ஊர்கள் மிகுதி. விளை என்பது வயலைக் குறிக்கும். வயல்
பள்ளமானது தானே! கள்ளப் பட்டது (தோண்டப் பட்டது) களம். பள்ளத்தில் ஒருவரைத் தள்ளி மற்றவர்
கைகொட்டிச் சிரிப்பது தான் முதல் விளையாட்டோ? தெரியாது.); கேலாட்டுச் சுருங்கிக் கேலு என்று ஆனது
போலும். இந்தக் கேலு என்ற சொல் அப்படியே வட இந்திய மொழிகளில் பயில்கிறது. தமிழில்
தொல்காப்பியத்தில் கெடவரல் என்று பெண்களின் விளையாட்டைக் குறிக்கும். இரா. மதிவாணன் ஒருமுறை இதை
விளக்கியிருந்தார், Intamm வலைத்தளத்தில் உள்ள அவர் கட்டுரையில் படித்திருக்கிறேன்.
கேலு+இ = கேலி; ஒருவரை நகையாடித் தாழ்வு செய்து மற்றவர் மகிழ்வு கொள்வது.
கேலி>கேளிக்கை = நகையாடி மகிழ்வது.
கேலி, கிண்டல், கிறுமை, இளி, இகழ்ச்சி, இசிப்பு, இணுங்கு, எள்ளல், ஏளனம், ஏளிதம், ஏச்சு, நகை,
நக்கல், சிரிப்பு, பழி, பகுடி, பரிகாசம் எல்லாமே ஒருவர் மற்றொருவரை இறக்கிக் கீழாகச்
செய்வதுதான்; வீழ்த்துவதுதான். மதிப்பில் இறக்குவது தான். இது பூதாகச் (physical) செய்யாமல், அறிவு
பூர்வமாக, உணர்வு பூர்வமாகச் செய்வதைக் குறிக்கும்.
குல்>கில்>கிள்>கிண்டு
கிண்டுதல் என்பது பொருள்களைக் கிளைத்தல், குடைதல் என்ற பொருள் பெறும்.
கிள்>கெள்>கெண்டு எனக் கிண்டுதல் கெண்டுதலாகவும் மாறும்.
"இந்தக் கிண்டல் தானே வேண்டாம்கிறது!"என்னும் போது இன்னொருவர் செய்யும் கிண்டல் நம்மைக் குழியில்
விழவைப்பதாக உணர்கிறோம். நம் போட்டியாளர் (அவர் நண்பராகக் கூட இருக்கலாம்.) கீழே விழுவது,
அல்லது கீழே விழுவதாக உணர்வது, நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. (அற வழி பரப்புதலில் ஈடுபட்டுள்ள
நம்மில் சிலருக்கு இப்படி இன்னொருவன் தாழ்வில் மகிழ்ச்சி கொள்வது முறையற்றது என்று தோணலாம். ஆனால்
மேலே உள்ள எல்லாச் சொற்களுக்கும் அடிப்படை இன்னொருவரைத் தாழ்வு செய்வதே! மொழியியலில் நீதி
பார்ப்பது சரிவராது.)
கில்+து = கிறு = தோண்டு
கிறு>கீறு = தோண்டு
கிறு+மை = கிறுமை = பள்ள நிலை
கிறுமை>கிறிமை எனப் பேச்சு வழக்கில் மாறும்.
உழுதல் கூடக் கிண்டுதல் தான். உழுதல் என்பதே பள்ளம் பறிப்பதுதானே!
உழால் = உழுதல், கிண்டுதல்
உழைப்பவர் என்பது பள்ளம் பறிப்பவரையே முதலில் குறித்து இன்று அதன் பொருள் விரிந்துவிட்டது.
உழைப்போர் தான் labour. (இதை விடுத்து தொழிலாளர் என்று சொல்லப் பார்க்கிறோம். தொழில்
என்பதும் தொல்>தொழு>தொழில் என்னும் வழிப் பிறந்ததுதான். தோண்டுதலைக் குறிக்கும் இன்னொரு சொல்.)
உழை என்பது இடம் என்று கூடக் குறிக்கும். உழை, புழை, குழை எல்லாமே பள்ளமான, மக்கள் வாழ்கிற இடங்கள்.
உல்>உள் என்னும் வேரே, உழுவிற்கு அடிப்படை. உள் என்பது பள்ளம், மறை என்றும் பொருள் கொள்ளூம். உள்ளி
இருப்பதால் தான் நாம் மனதை உள்ளம் என்று சொல்லுகிறோம்.
மேலும் மேலும் உள்ளே சென்று ஒடுங்குவது உள்குவது என்று ஆகும்.
உள்குதல்>உட்குதல்>உக்குதல் = மெலிதல் என்றும் பொருள் கொள்ளூம்.
உள்>உள்கு>உகு; உகுதல் = உதிர்ந்து விழுதல், துளையில் இருந்து விழுதலைக் குறிக்கும். "கண்ணீர் உகுந்து
கொட்டுகிறது".
உள்>ஒள்>ஓழுகு = துளை வழியாகச் சிந்துதல்
ஒழுகுதல் = நீர்ப் பொருள் சொட்டுதல்
மேலே உள்ளவை எல்லாமே துளை ஏற்படுதலையும், அதில் இருந்து வீழ்தலையும் குறிக்கும் சொற்கள்.
உல்>இல் ஆக மாறித் துளை, பள்ளம் போன்றவற்றைக் குறிக்கும். மலைப் பகுதியில் கில்லி (=இல்லி)
உருவாக்கிய பள்ளங்களிலேயே விலங்குகளும் வாழ்ந்தன; மாந்தனும் வாழ்ந்தான். அந்த இல்லே இன்றைய வீடாக
வளர்ந்திருக்கிறது.
இல்லுதல் = தோண்டுதல்
இல்லம் = பெரிய இல்
இல்லப் பட்ட இடம் உள்ளீடு அற்ற நிலையானதால்,
இல்லு+ஐ= இல்லை என ஆயிற்று.
இல்லை = தோண்டப் பட்ட ஒன்றும் இல்லாத நிலை
இல்லு+இ (= இல்லி)>இலி>இளி>இழி = இறங்குதல், கீழாதல், தாள்தல்
இள்>எள்= இகழுதல்
எள்>எள்ளல்
எள்>எளிமை = இகழப் பட்ட நிலை
எள்>ஏளனம் = இகழ்ச்சி
ஏள்>ஏளிதம் = இகழ்ச்சி
ஏள்>ஏள்த்தல்>ஏள்ச்சல்>ஏச்சு
ஏள்>ஏழு>ஏழை = இகழப்பட்ட நிலை
உள்குதல்>(யுள்குதல்)>(ஞுள்குதல்)>நுள்குதல்= துளைக்குள் இறங்கிய நிலை
(இந்த யகரம்>ஞகரம்>நகரம் என்ற ஒலிமாற்றம் தமிழில் பலகாறும் ஏற்பட்டுள்ளது. வியக்க வைக்கும்
மாற்றங்கள் பல உண்டு.)
நுள்>நுழு>நுழை= துளைக்குள் புகுதல்
நுள்கு>நுகு>நுகம் = ஏரில் உள்ள துளைக்கும் முனை
நுகைத்தல் = துளைத்தல், பள்ளம் பறித்தல்
நகைத்தல் = ஒருவரைத் தாழ்வு செய்து மகிழ்வு கொள்ளல்
நகையாட்டு = தாழ்வு செய்யும் ஆட்டு.
நுக்குதல்>நக்குதல் = பள்ளத்தில் தள்ளும்படி உணர்வு கொள்ளல்
நக்கு>நக்கல்
இனிச் சிரிப்பு என்பது கூட இந்தக் கீழே விழுதலில் தொடங்கியதுதான்.
சரிதல் = நழுவுதல், கீழே விழுதல், பின்னிடுதல், சாய்தல்
சரிப்பு = சரிவு
சரிப்பு > சிரிப்பு
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இகு>இகை>யுகை>joke (யுகரம் ஜுகரமாக ஒலிப்பது இந்தையிரோப்பிய மொழிகளின் திரிவு முறைகளில் ஒன்று.
யுகை>நுகை>நகை
மேலே கூறியதில் நகை joke என்பதற்கு இணையாகச் சொல்லலாம் என்பது என் துணிவு.
கீழே பழைய மடல்களின் படியைக் கொடுத்துள்ளேன்.
அன்புடன்,
இராம.கி.
[tamil] Fw: Re: [tamil] Re: joke = connakai
--------------------------------------------------------------------------------
To "agathiyar@egroups.com" >From "RM.Krishnan" Date Sun, 24 Oct 1999 18:58:48 +0500
CC "tamil@..." Delivered-To mailing list tamil@...
Mailing-List contact tamil-help@...; run by ezmlm
Organization poosoft
>At 10/18/99 5:25:00 AM, you wrote:
>>
>>
>>>அன்பர்களே,
>>> "கிறிமை", "பகடி" என்னும் இரு பழஞ்சொற்கள்
>>> கிட்டத்தட்ட இதே குறிப்பை உணர்த்தப் பயன்பட்டன. அவை
>>> "Joke" க்குக்குப் பயன்படுமா? அன்புடன், ஜெயபாரதி
>>
>>தமிழ் லெக்சிகன் தருவது:
>>பகடி = 1) mockery, ridicule 2) jest, witty repartee 3) jester, buffoon
>>4) pretender, imposter. மேலும், பகடி, ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டவனைக்
>>குடி எழுப்பத் தரப்படும் தொகைக்கும் வழங்குகிறது.
>>
>>கிறி = falsehood, lie, deceit, fraud, .. (Tamil Lexicon)
>>கிறிமை என்னும் சொல் சைவத் திருமுறைகளில் "பொய்மை, ஏமாற்று"
>>என்னும் பொருள்களில் ஆளப்பட்டுள்ளது.
>>
>>எனவே, கிறிமை, பகடி jokeக்கு அவ்வளவு பொருந்தா என்று எண்ணுகிறேன்.
>>
>>இல்வாய், வாயில் என்றாவது போல, நகைச்சொல்-லைத் திருப்பிப்போட்டு,
>>சொன்னகை-யை அமைத்தேன். புன்னகை, பெருநகை உண்டாக்குவது
>>சொன்னகை (joke).
>>
>>அன்புடன்,
>>நா. கணேசன்
>>
>>
>>At 05:48 AM 10/16/99 PDT, N. Ganesan wrote:
>> >
>> >
>> >இந்த இணையத்தில் ஜோக் என்பதற்கு சொலவடை பயன்படுத்தப்படுவதாகப் படித்தேன்.
>> >சொலவடை = சொலவு(< சொல்) + அடை (<அடைத்தல்)??
>>>புன்னகை = சிறு நகை;
>> >அது போல, joke-கு "சொன்னகை" பயன்படுத்தலாமா?
>> >
>> >சொற்களால் (பேசியோ, எழுதியோ) நகைப்பை உண்டாக்குவது, சொன்னகை = joke.
>> >
>> >"சொன்னகை" = joke என்பது குறித்தும்,
>> >சொலவடை என்பதை விளக்கியும் எழுதுங்கள்.
>> >
>> >நன்றி பல,
>> >நா. கணேசன்
>> >
>> >______________________________________________________
>> >
>சொன்னகை என்பதில் 'சொல்' எனும் முன்னொட்டு வேண்டுமா? வெறும் 'நகைப்பு' என்பதே போதாதா? 'நான்
>அந்த
>நகைப்பைச் சொன்னேன்/எழுதினேன்/கூறினேன்' என்னும் பொழுது பொருள் விளங்கிவிடாதா? மேலும் வினையாகப்
>பயன்படுத்தும் போது 'He was just joking - அவன் சும்மா நகையாடினான்' என்றே
>சொல்லலாமே?அதுபோல, கேலிப்
>பொருள் வரும் போது 'எள்ளி நகையாடினான்' என்றே சொல்லலாம் அல்லவா? எந்தவாக்கியத்தில் 'சொல்'
>எனும்
>முன்னொட்டு தேவைப் படும்?
>
>உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.
>
>அன்புடன்,
>இராம.கி
To tamil@..., agathiyar@egroups.com
>From "Nagamanickam Ganesan" Date Sun, 24 Oct 1999 10:50:04 PDT
Delivered-To mailing list tamil@...
Mailing-List contact tamil-help@...; run by ezmlm
முனைவர் திரு. இராம. கி. கேட்டார்கள்;
>சொன்னகை என்பதில் 'சொல்' எனும் முன்னொட்டு வேண்டுமா? வெறும் 'நகைப்பு' என்பதே போதாதா?
>'நான் அந்த நகைப்பைச் சொன்னேன்/எழுதினேன்/கூறினேன்' என்னும் பொழுது பொருள் விளங்கிவிடாதா?
>மேலும் வினையாகப் பயன்படுத்தும் போது 'He was just joking -
>அவன் சும்மா நகையாடினான்' என்றே சொல்லலாமே?அதுபோல,
>கேலிப் பொருள் வரும் போது 'எள்ளி நகையாடினான்' என்றே சொல்லலாம் அல்லவா? எந்த வாக்கியத்தில்
>'சொல்' எனும் முன்னொட்டு தேவைப் படும்?
"joke" என்பது ஒரு மேனாட்டுக் கலை; இந்திய மொழிகளுக்கு, இதழியல் கலை பெருகி
உரைநடை மல்கியபோது வந்தது. உரைநடையில், குறுகிய சொல் அளவில் இயங்குவது.
நம் தமிழ் வழக்கில், " அவனது செய்கை நகைப்பை உண்டாக்கும்" அல்லது "நகைப்பை விளைப்பது"
எனிலோ, சிறிது எள்ளல் தொனிக்கிறது அல்லவா?; மேலும், நகைப்பு பல காரணங்களால் உருவாகும்,
பேச்சு ஒரு காரணம் மட்டுமே.- சொல்லால்ஆவது சொன்னகை. ஒரு பரிகாசக் கதையில்,
(திரு. எல். ஏ. சுவாமிநாதன் என்பதாக நினைவு) "சொலவடை சொல்லிச் சிரித்தார்"
என்று பார்த்தேன். மேல்நாட்டு "joke" ஒரு புதிய பரிமாணம் நமக்கு;
எனவே தான், "சொன்னகை" என்று சமைத்தேன். சொன்னகை பண்ணுவது நன்னகை :-)
கிறித்துவம் என்றால் பித்தலாட்டம் என்பதாக, 9-11 நூற்றாண்டு நூல்களில் கண்டிருக்கிறேன்.
Christianity என்னும் சமயத்தைக் கிறித்துவம் என்று சிலர் எழுதுகிறார்கள்;
அப்படி எழுதக்கூடாது என நான் கருதுகிறேன், பொருள் மாறிவிடும் அல்லவா?
Professor என்பதைப் பேராசிரியர் என்கிறோம்; நான் சிறுவனாக இருந்தபொழுதில் இருந்து
தெரிந்த தமிழ்ப் பண்டிதர் சொல்வார்: "பேராசிரியர் ஒரு நான்காம் வேற்றுமைஉருபு" என்று.
இதன் பொருள் தமிழ் அறிந்தோருக்குத் தெரியுமே :-)
அன்புடன்,
நா. கணேசன்
>
>>அன்பர்களே,
>> "கிறிமை", "பகடி" என்னும் இரு பழஞ்சொற்கள்
>> கிட்டத்தட்ட இதே குறிப்பை உணர்த்தப் பயன்பட்டன. அவை
>> "Joke" க்குக்குப் பயன்படுமா? அன்புடன், ஜெயபாரதி
>
>தமிழ் லெக்சிகன் தருவது:
>பகடி = 1) mockery, ridicule 2) jest, witty repartee 3) jester, buffoon
>4) pretender, imposter. மேலும், பகடி, ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டவனைக்
>குடி எழுப்பத் தரப்படும் தொகைக்கும் வழங்குகிறது.
>
>கிறி = falsehood, lie, deceit, fraud, .. (Tamil Lexicon)
>கிறிமை என்னும் சொல் சைவத் திருமுறைகளில் "பொய்மை, ஏமாற்று"
>என்னும் பொருள்களில் ஆளப்பட்டுள்ளது.
>
>எனவே, கிறிமை, பகடி jokeக்கு அவ்வளவு பொருந்தா என்று எண்ணுகிறேன்.
>
>இல்வாய், வாயில் என்றாவது போல, நகைச்சொல்-லைத் திருப்பிப்போட்டு,
>சொன்னகை-யை அமைத்தேன். புன்னகை, பெருநகை உண்டாக்குவது
>சொன்னகை (joke).
>
>அன்புடன்,
>நா. கணேசன்
>
>
>At 05:48 AM 10/16/99 PDT, N. Ganesan wrote:
> >
> >
> >இந்த இணையத்தில் ஜோக் என்பதற்கு சொலவடை பயன்படுத்தப்படுவதாகப் படித்தேன்.
> >சொலவடை = சொலவு(< சொல்) + அடை (< அடைத்தல்)??
>>புன்னகை = சிறு நகை;
> >அது போல, joke-கு "சொன்னகை" பயன்படுத்தலாமா?
> >
> >சொற்களால் (பேசியோ, எழுதியோ)நகைப்பை உண்டாக்குவது, சொன்னகை = joke.
> >
> >"சொன்னகை" = joke என்பது குறித்தும்,
> >சொலவடை என்பதை விளக்கியும் எழுதுங்கள்.
> >
> >நன்றி பல,
> >நா. கணேசன்
> >
> >______________________________________________________
> >