From arull@... Fri Nov 16 16:33:07 2001
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 00:33:06 -0000
Received: (qmail 49139 invoked from network); 17 Nov 2001 00:33:05 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 00:33:05 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 00:33:06 -0000
Received: from tm.net.my (sja-179-72.tm.net.my [202.188.179.72]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GMX00JIT5J457@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 08:33:05 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 08:36:05 +0800
Subject: thevaram/தேவாரம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3BF5B0F4.D73C7EF7@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Message-Num: 13149

திருச்சிற்றம்பலம்
அகத்தியர்களுக்கு வணக்கம்
இதோ ஒரு தேவாரம்

திருஞானசம்பந்தர் தேவாரம்

42.திருச்சிற்றேமம் : பண் - கொல்லிக்கௌவாணம்

3 - ம் திருமுறை.

திருச்சிற்றம்பலம்

3244.நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலா மேத்தநின்ற பெருமானே. 1

3245.மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்
ஆகத்தேர்கொ ளாமையைப் பூண்ட அண்ண லல்லனே. 2

3246.நெடுவேண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவேண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவு ளல்லனே. 3

3247.கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்க ணேறுடை யாதிமூர்த்தி யல்லனே. 4

3248.வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே. 5

3249.பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையான் புள்ளினத் தாமஞ்சூல்சிற் றேமத்தான்
முனிவுமூப்பு நீக்கிய முக்கண்மூர்த்தி யல்லனே. 6

3250.கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளா னல்லனே. 7

3251.சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்தஅரக்க னொல்கஅன் றடர்த்தஅண்ண லல்லனே. 8

3252.தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கல் சூடியோ ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே. 9

3253.வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தா னல்லனே.10

3254.கல்லிலோத மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்தமிழ் நவிலுஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவா ரல்லலின்றி வாழ்வாரே.11

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.