From jaybee@... Fri Nov 16 21:31:25 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 05:31:26 -0000
Received: (qmail 28786 invoked from network); 17 Nov 2001 05:31:26 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 05:31:26 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 05:31:23 -0000
Received: from user (sp-103-14.tm.net.my [210.186.103.14]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMX00BH0JC6ZD@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 13:31:20 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 13:31:03 +0800
Subject: Re: [agathiyar] Perisendraal Chummaavaa?
In-reply-to: <004701c16f0d$7af7c240$fd316acb@pavilion>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011117133103.0074b780@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <005401c16eaa$47fad0c0$7680d6d2@...> <3.0.3.32.20011117074819.00765a58@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13156

At 10:13 AM 11/17/01 +0800, you wrote:
>டாக்டர்,
>நீங்க "சும்மா" இருந்துதான் "சும்மா" எழுதியிருக்கக் கூடும். ஆழ்ந்து அனுபவித்து வாசிக்கமுடிந்தது. இ
>மிக்க நன்றி.
>-சிவஞானம்.


உண்மைதான்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒரு தமிழாராய்ச்சி மாநாடு
நடந்தது. அதற்கு சில வெள்ளைக்காரர்கள் வந்திருந்தனர். அதில் ஒருவர் சற்று
வேடிக்கையாகப் பேசக்கூடியவர். அவர் ஒரு ஸ்வீடிஷ்காரர். Ingvor Frickholm
என்ற பெயருடையவர். எழுதும்போது அப்படியேதான் பெயரை எழுதுவார்.
யாரோ இது சம்பந்தமாகக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கொஞ்சம்
நையாண்டியாக, "என்னுடைய பெயரை தமிழ்ப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு
யாராவது 'இங்கேவா பெரியகுளம்' என்று எதையாவது எழுதிவிடுவார்கள்",
என்று சொன்னார்.
அப்போது ஒரு வெள்ளைக்காரச் சாமியார் வந்திருந்தார். அவருடைய
பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் கையில், முழங்கைக்கும்
மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட சதைப்பிடிப்பான பகுதியில் 'சும்மா இரு'
என்று எழுதியிருந்தார். யாரும் பேட்டி அது இது என்று போய்க்கேட்பவர்களுக்கு
தன்னுடைய மேல்துண்டை ஏற்றி, கையைக்காட்டுவார்.
(நானும் அதையே செய்திருக்கவேண்டும். வீணாகச் சொல்லிழுக்குப்
பட்டு சோகாக்க வேண்டாமே).
'சும்மா'வைப்பற்றி 'Philosophy of Summaa', என்றோ
'சும்மா இருக்க சூத்திரம்' என்றோ ஏதோதலைப்பில் ஆராய்ச்சியொன்றைச்
செய்வதாகச் சொன்னார். தலைப்பு சரியாக நினைவில்லை.

இது ஒரு பழைய பொறியைக் கிண்டிவிட்டு விசிறிவிட்டது.

பின்னர் தமிழ்வாணன். அவர் இதைப்பற்றிச் சொன்னார்.

இவர்களுக்கெல்லாம் முன்னர், மதுரையில் ஒரு தையற்காரர்.

மூர்த்தி என்பது அவருடைய பெயர். மேலச்சித்திரை வீதியில்
எங்களுடைய கட்டடத்தில் 'மூர்த்தி டெய்லரிங் பேலஸ்' என்று ஒரு
ultra-modern தையற்கடையொன்றை நடத்திவந்தார். தையல் தொழிலுக்கே
ஒரு தனி கௌரவத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியதில் அவரே முதல் ஆள்.
நான் சொல்வது ஐம்பதாண்டுகளுக்கு முன்னர்.
தன்னுடைய இருக்கைக்குமேலே ஒரு எண்ணெய் வண்ண ஓவியம்.
அதில் உலகக்கோளம். அதன்முன்னணியில்ஒரு கத்தரிக்கோல். அந்தக்
கத்தரிக்கோல் வாய்திறந்திருக்கும். அதன் நடுவே நூல் கோர்த்த ஓர் ஊசி.
மேலே தலைப்பு.
'வாழ்க உலகெலாம் கத்தரிக்கோல்'.
உலகத்தின் கீழே, ஒரு நீண்ட வாசகம், "என் வாழ்வின் பிழைப்பூட்டும்
தலவனாகவும்....." என்று ஆரம்பிக்கும்.
கடைசியில் "என் அருமைக் கத்தரிக்கோலே" என்று முடித்திருப்பார்.
அடியில் கையெழுத்து. 'ந.க.ஆ.மூர்த்தி' என்று போட்டிருப்பார்.
அந்தப் படத்தின் பக்கவாட்டில் இன்னொரு பெரிய படம். என்னுடைய
அப்பா. அந்தப்படத்தின் கீழே ஒரு சிறிய ஷெல்ஃப். அதன்மீது படுத்திருக்கும்
ஒரு நாய். அல்சேஷன். இன்னொரு வாசகம். "என் வாழ்க்கையில் ...."
என்று ஏதோ வந்து, என் தந்தையாரின் பெயரைச்சொல்லி, "அவருக்கு நன்றி
மறவா நான் ஒரு நாய். இப்படிக்கு ந.க.ஆ. மூர்த்தி" என்று முடித்திருப்பார்.
ஒரு சிறிய அறையின் சுற்றுச்சுவற்றிலும் எண்ணெய்வண்ண சீனரிகளைத்
தீட்டி, ஏதோ ஒரு உத்தியான மண்டபத்தில் இருந்துகொண்டு சுற்றிலும் இருக்கும்
இயற்கைக்காட்சிகளை ரசிப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பார்.
அருமையான சோஃபா செட். நீலவண்ண ஃப்லாரசண்ட் விளக்கொளி.
மைசூர் அரசவம்சத்தினரிடமிருந்து ஒருபெரிய அலங்கார
நிலைக்கண்ணாடியையும் இரண்டு ஒரிஜினல் ரவிவர்மா ஓவியங்களையும் வாங்கி
அவர் வைத்திருந்தார்.
நான் மதுரையில் மருத்துவம் பயின்ற சமயத்தில் அவருடைய டெய்லரிங்க்
பேலஸுக்கு அடிக்கடி செல்வேன்.
என்னை அவர் 'கொழந்தேஎ', என்றுதான் அழைப்பார்.

அங்கு பல மாதிரியான ஆட்கள் வருவார்கள். ஒருமுறை, ஒரு பெரிய
செட்டு சமையற்காரர் வந்திருந்தார். அவர்தான் ஜாங்கிரிக்குள் ஜீராவை ஏற்றச்
செய்யும் நகாசு வித்தையைக் கற்றுக்கொடுத்தார்.

சில சித்தர்களும் அங்கு வருவதுண்டு.

ஒருமுறை மூர்த்தியின் அருகில் அமர்ந்துகொண்டிருந்தேன். மூர்த்தி
பேசாமல் துணியை வெட்டிக்கொண்டிருந்தார். நாகப்பட்டனம் நெய்மிட்டாய்க்
கடையின் காராச்சேவைம் மேலக்கோபுரத்தெருவின் முக்கிலிருந்த காப்பிக்கடை
காப்பியையும் தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

"என்ன, சும்மாவே இருக்கீங்களே?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், "கொழந்தேஎ....சும்மா இருக்குறதா? ரொம்ப
சுலபமாச் சொல்லிட்டீங்க... ரொம்ப ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க.
நம்மனாலயெல்லாம் ஆகுற காரியமா? சும்மா இருக்க முடியுமா?" என்றார்.
குனிந்த தலையை மேலே நிமிர்த்திப் பார்க்காமலேயே, துணியைக் கத்தரித்துக்
கொண்டே இதைச் சொன்னார்.
ஏன் அப்படி சொல்கிறார் என்று புரியவில்லை. விளக்கம் கேட்டேன்.
"கொழந்தேஎ...அதெல்லாம் எப்பிடி சொல்லிக்குடுக்குறது?
சொல்லிக்குடுத்து வராது".
"சொல்லிக்குடுக்காம எப்பிடி கத்துக்குறது?"
"ஒரு காலத்துல நீங்களே தெரிஞ்சுக்குவீங்க".
இது நடந்து நாற்பது ஆண்டுகள் இருக்கும்.
அப்போதுதான் 'சும்மா' என்பது சும்மா இல்லை என்பது லேசாகப்
பொறி தட்டியது.

அதன்பின்னர் அந்தச்சாமியார். அப்புறம் தமிழ்வாணன்.

அதற்கப்புறம் திருப்புத்தூரில் ஒரு ஸூஃபி பெரியவர். அவர்தான்
இதுபற்றி நிறையச் சொல்லலானார். அவர்மூலமே மஸ்தான் சாஹேபுடன்
அறிமுகம் ஏற்பட்டது.
மலேசியாவுக்கு வந்த பிறகு அத்துவானக்காட்டில் வேலை
செய்யும்போதுதான் மந்திர ஜபம், தியானம் என்று ஆரம்பித்தது. அப்படியே சில
ஆண்டுகள் சென்றன. சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள்,
மஸ்தான் சாஹேப், என்று அததுபாட்டுக்கு விரிவடைந்துகொண்டே வந்தது.
கோத்தாபாரு என்னும் ஊரில்தான் 'நிஷ்டையும் கைகூடி,
நிமரருள்' ஏற்பட்டது.
நீங்கள் படித்தீர்களே...அந்தக்கட்டுரையில், நான் கண்டவற்றில்
ஆயிரத்தில்...இல்லையில்லை...லட்சத்தில்...ஊஹூம்... ஒரு அணுவளவாவது
சொல்லியிருப்பேனா?

அன்புடன்

ஜெயபாரதி

============================>