From arull@... Sat Nov 17 05:57:49 2001
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 13:57:48 -0000
Received: (qmail 28456 invoked from network); 17 Nov 2001 13:57:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 13:57:46 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 13:57:47 -0000
Received: from tm.net.my (sja-81-198.tm.net.my [203.106.81.198]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GMY00FF86S0FW@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 21:57:38 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 22:00:35 +0800
Subject: thevarappalan/தேவாரப்பலன் 1
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3BF66D83.77C241EB@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13166

திருச்சிற்றம்பலம்

அகத்தியர்களுக்கு வணக்கம்.
படித்த ஒன்று.

தேவாரப்பலன் -
ஒரு குறியீட்டியல் நோக்கு

முனைவர். பா.சிவநேசன்
தமிழ்விரிவுரையாளர்,அரசுகல்லூரி - கும்பகோணம்.

குறியீடு என்பது வெளிப்பாட்டு உத்தி முறைகளுள் ஒன்று.
இது ஒரு பொருளை, மற்றொன்றால் குறிப்பால் உணர்த்துவது.
பழங்காலம் முதலே குறியீட்டினால் ஒன்றைப் புலப்படுத்தும்
போக்கு இருந்துள்ளது. குறியீடுகள் வரையறையற்ற குறிப்புப்
பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, கருத்துக்களைத் தூண்ட
வல்லது என்பர் அறிஞர் காசிதரர். குறியீடு என்ற சொல்லை
அடிப்படையாகக் கொண்டே குறியீட்டியல் (Symbolism)என்பது
உருவாகியிருக்கிறது. மேலைநாடுகள் கி.பி. 19, 20 ஆம்
நூற்றாண்டுகளில் இலக்கிய இயக்கங்கள் பல தோன்றின.
அவற்றுள் ஒன்று குறியீட்டியல் இயக்கம். தொல்காப்பியர்
குறிப்பிட்டுள்ள உள்ளுறை, இறைச்சி பற்றிய கோட்பாடுகளே
குறியீட்டியலாக மலர்ந்துள்ளது என்பர் பிரெஞ்சு அறிஞர்
மல்லார்மே (Mallarme). ஆகவே உள்ளுறை அமைந்த
படைப்புக்களைக் குறியீட்டியல் நோக்கில் ஆராய்வது
பொருத்தமேயாகும்.

ஆன்மீகமும் குறியீட்டியலும்

சமயச் சின்னங்கள் குறியீட்டின் அடிப்படையில்
அமைந்தவை. இலக்கியங்களிலும் ஆன்மீகக் கொள்கைகள்
இவ்வமைப்பில் சுட்டப்பட்டுள்ளன. இதற்கு மரபு வழிக்குறியீட்டு
முறை (Traditional Symbolism) என்று பெயர். ஆன்மீக
உணர்வுகளைச் சுட்டும் குறியீடுகளை ஆழ்நிலைக் குறியீடுகள்,
தூயகுறியீடுகள் என உரைப்பர் சாட்விக்(Chadwick).

தொடரும்,

திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.


[Non-text portions of this message have been removed]