From arull@... Sat Nov 17 13:38:38 2001
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 21:38:39 -0000
Received: (qmail 2064 invoked from network); 17 Nov 2001 21:38:39 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 21:38:39 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 21:38:38 -0000
Received: from tm.net.my (kmr-183-246.tm.net.my [202.188.183.246]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GMY00MBPS4AL9@...> for agathiyar@yahoogroups.com; Sun, 18 Nov 2001 05:38:37 +0800 (SGT)
Date: Sun, 18 Nov 2001 05:41:29 +0800
Subject: thevarappalan/தேவாரப்பலன் 2
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3BF6D989.DCED21AE@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13175
தேவாரம் கி.பி 7ஆம் நூற்றாண்டில் தோன்றியது, சம்பந்தர்,
அப்பர், சுந்தரர் எனும் மூவரால் அருளப்பட்டது. சைவ
இலக்கியங்களுள் முதன்மை பெறுவது. இதனை உணர்ந்து
ஓதினால் சிவனருள் எளிதாகும் என்பர். சம்பந்தர், தாம் பாடிய
பதிகங்களை ஓதுபவர் அடையும் பலனைக் கூறியுள்ளார்.
அப்பாடல் திருக்கடைக்காப்பு எனப்படும். இதற்கு,
எனும் பாடலைச் சான்று காட்டலாம். பலன் கூறும் மரபைக்
காரைக்காலம்மையாரே முதலில் ஏற்படுத்தினார்.
திருக்கடைக்காப்பில் இதுபோன்றே பலன் வெளிப்படையாகச்
சொல்லப்பட்டிருக்கும்.
குறியீடு
தேவாரப்பலன் மறைபொருளாகக் குறிப்பிடப்பட்ட நிலையும்
உண்டு. குதம்பைச்சித்தர் தேவாரத்தைஓதுவதனால் உண்டாகும்
பலனைக் கூறும் வகையில்,
குறியீட்டியல் நோக்கில் இச்செய்யுளை அமைத்துள்ளார்.
படுத்துறங்கத் தாவாரம் இல்லை. இருக்க வீடில்லை.
இந்நிலையில் தேவாரம் எதற்கு? என்பது இப்பாடலில்
அமைந்த நேரடியான பொருள். ஆனால், இதில் குறியீட்டுப்
பொருளும் அமைந்துள்ளது. தாவாரமில்லை உள்ளத்தில்
இரக்கம் இல்லை. வீடில்லை உலகப்பற்றை விடுவதற்கு
விரும்புவதில்லை. இப்படி இருக்கையில் தேவாரத்தை
ஓதுவதால் பலன் இல்லை என்பதே இதன் உள்ளுறைப்
பொருள். ஆகவே, தேவாரத்தை ஓதிப் பலன் பெற
விரும்புவோர், அருளுணர்ச்சியும், பாசவிடுதலை உணர்வும்
உடையவராக இருக்க வேண்டும் எனத்தெரிகிறது. இவ்வாறு
பாடியதால் குதம்பைச்சித்தர் குறியீட்டுப் புலவராகிறார்.
பாடலில் நேர்ப்பொருளும், நுணுகி ஆராய்கையில் பிறிதொரு
பொருளும் தோன்றுமாறு அமைந்திருப்பது குறியீட்டுச்
செய்யுளாகும். சம்பந்தர் வெளிப்படையாகவும், குதம்பைச்சித்தர்
உள்ளுறையாகவும் பாடியதற்குக் காலச் சூழலே காரணம்.
புறச்சமயத் தாக்கத்தினால் சம்பந்தர் உடனே பொருள் புரியும்
வகையில் பாடினார். தேவாரத்தின் தாக்கம் மிகுந்த காலத்தில்
சித்தர் வாழ்ந்ததால் அவர் இவ்வாறு பாடநேர்ந்தது.
நன்றி, செந்தமிழ்ச் செல்வி
திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.
[Non-text portions of this message have been removed]