From anbudan ananth@... Sat Nov 17 17:43:04 2001
Return-Path:
X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 01:43:04 -0000
Received: (qmail 30365 invoked from network); 18 Nov 2001 01:43:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 01:43:03 -0000
Received: from unknown (HELO web20608.mail.yahoo.com) (216.136.226.166) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 01:43:03 -0000
Message-ID: <20011118014303.81819.qmail@...>
Received: from [64.230.97.179] by web20608.mail.yahoo.com via HTTP; Sat, 17 Nov 2001 17:43:03 PST
Date: Sat, 17 Nov 2001 17:43:03 -0800 (PST)
Subject: kandhar shashti kavacham
To: agathiyar
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: V Ananth
X-Yahoo-Message-Num: 13179

அன்பர்களே: கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கப்படு மிந்த வேளையில் நான்
சேமித்துவைத்திருந்த கீழ்க்கண்ட இiடுகை கண்ணில் பட்டது. அதை யின்று இiடல்
நன்றெனத்தோன்றியது. (திரு. பழனி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை
2000-ல் அவர் தந்த அவரது முழு இடுகையில் காணலாம்). அங்கு கூறப்படும்
கந்தர் சஷ்டி கவசத்தின் பொருள் விளக்கத்தை எங்கே காணலாம் எனத்
தெரிந்தோர் கூறினால் நன்றியுடையவனாவேன். பதிப்பாளரைப் பொறுத்து
அக்கவசத்தில் பாட வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொருள் பற்றிய எனக்குள்
எழும் சில ஐயங்களை ஜேபியும் பிறரும் தீர்த்துவைக்க வியலும்.
எடுத்துக்காட்டாக, முதலடியில், 'சஷ்டியை நோக்க' என்பது 'சஷ்டியை நோற்க'
என்று இருக்க வேண்டுமோ?....; சர*ஹ*ண பவ என்ற மந்திரச் சொல்லை
வேறெந்த நூலில் காணாலாம்?.. என்பதுபோன்ற ஐயங்கள்.
அன்புடன் அனந்தன்
பி.கு. 1. கந்தர் சஷ்டி கவசத்தைக் கௌமாரம் என்னும் இணையத்தளத்தில்
மயிலை எழுத்துருவில் காணலாம் (www.kaumaram.com)
2. திருப்புகழ் அன்பர்களால் குருஜி என்றழைக்கப்ப்டும் திரு.
ராகவன் அவர்கள் 'தலம் தோறும் தமிழ்க் கடவுள்" என்றதலைப்பில் முருகன்
பற்றி எழுதும் அருமையான கட்டுரைத்தொடர் அண்மையில் கல்கி வாரவிதழில்
வெளியாகிக் கொண்டிருக்கிறது.
http://www.kalkiweekly.com/page9.html
----------------------------------------------------------------------------
"From: Palaniappan A | Block
address
Date:Mon, 30 Oct 2000 00:07:49 +0800
அன்பு நண்பர்களுக்கு,
கந்தர் சஷ்டி தொடர்பாக தமிழில் டாக்டர் JB பல ஆண்டுகளுக்கு முன்னர்
எழுதிய தமிழ்க்கட்டுரையை இiந்த ஆண்டின் சிங்கப்பூர் இiந்து தீபாவளி
இதழில் ஒரு சில மாற்றம் செய்து அவரின் முன் அனுமதி பெற்று
வெளியிட்டேன். அன்புடன் பழனி"

கந்தர் ஷஷ்டி

தமிழகத்தில் உள்ள பல முருகன் ஆலயங்களில் மிகச் சிறப்பாக இவ்விழா
நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியுடன் பூரணமடையும். இiந்த விழா சிக்கல்
என்னும் ஸ்தலத்தில் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வமயம் முருகனுடைய
திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை படிந்திருக்கும் காட்சியைப் பலர்
கண்டிருக்கின்றனர். நம் நாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில், குறிப்பாகத்
தண்டாயுதபாணி திருக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற
முருகன், மற்றும் சைவக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன்
கொண்டாடப்படுகிறது.
கந்தர் ஷஷ்டி விழா முருகனின் திரு அவதாரச் சிறப்பை எடுத்துக்காட்டக்கூடியது.
சூரபன்மனை அழித்த விழா. தேவர்களை மகிழச் செய்த விழா. கந்தர் ஷஷ்டி
ஆறு நாள்கள் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்தவுடன் பிறக்கும்
பிரதமை திதி முதல் ஷஷ்டி திதி வரை நடைபெறும். விரதமிருந்து முருக
வழிபாடு செய்வார்கள். குறிப்பாக மக்கட்பேறு வேண்டுபவர்கள் கந்தர் ஷஷ்டிக்கு
விரதமிருப்பார்கள். 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்', என்னும்
பழமொழிக்கு கிருபானந்த வாரியார் வேறு விதமாகப் பொருள்
கூறுவார். "ஷஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில் கரு
உற்பத்தி) வரும்" என்று கூறுவார். தேவராய சுவாமிகள் என்னும் புலவர் ஒருவர்
இருந்தார். அவர் ஓர் அருளாளர். சிறந்த ஞானி. அதே சமயத்தில் மந்திர
சாஸ்திரம் கற்றவர். குண்டலினி யோகத்தையும் அறிந்தவர். இவ்வளவு
சிறப்புகள் இருந்தும்கூட அவருக்கு பழவினை காரணமாகத் தீராத வயிற்றுவலி
ஏற்பட்டது. ஆகவே அவர் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும்
நோக்கத்துடன் திருச்செந்தூர் சென்றார். அவ்வமயம் அங்கு கந்தர் ஷஷ்டி விழா
நடந்து கொண்டிருந்தது. தற்கொலை செய்து கொள்ளுமுன் முருகனைத் தரிசிக்கலாம்
என்று கோயிலுள் சென்றார். உடனேயே அவருடைய வயிற்றுவலி குறைந்தது.
முருகனின் பேரில் கவச நூல் இயுற்றினார். இவ்வாறு ஆறு நாட்களில் ஆறு நூல்கள்
இயற்றப்பட்டன. ஆறாவது நாளுடன் அவருடைய வயிற்றுவலி அறவே நீங்கியது.
அந்த ஆறு கவச நூல்களும் கந்தர் ஷஷ்டி கவசங்கள் எனறு பெயர் பெற்றன.
முருகனுக்குரியவை ஆறுபடை வீடுகள். ஒவ்வொரு படை வீட்டுக்கும் ஒவ்வொரு
கவச நூலைச் சமர்ப்பித்தார் தேவராய சுவாமிகள். அவற்றுள் பிரபலமாக
விளங்குவது இரண்டாவது கவச நூலாக விளங்கும் திருச்செந்தூர் கவசமே. இதுதான்
'ஷஷ்டியை நோக்க சரவண பவனார்' என்று ஆரம்பிக்கக் கூடியது. இந்தக்
கவசத்தை ஒருமைப்படுத்தப்பட்ட மனத்துடன் பக்தியுடன் காலையிலும் மாலையிலும்
படிக்கச்சொல்லியிருக்கிறார். அவ்வாறு படித்துப் பழக்கப்பட்டவர்கள் இந்தக்
கவசத்தைச் சில விஷேட காரணங்களுக்காக - ஒரே நாளில் முப்பத்தாறு முறை
ஜபிக்கலாம். ஜபித்து உட்கார்ந்து திருநீற்றை அணிய வேண்டும். அதற்குரிய
பலன் அவர்களுக்குக் கிடைக்கும். இந்தக் கந்தர் ஷஷ்டி கவசம் பலருக்கு பல
அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது. பில்லிசூனியம் பெரும்பகை
அகலவும், முனிகள் முதலியவைகளை ஓட்டவும், பொல்லா மிருகங்கள் விஷப்
பிராணிகள், வியாதிகள் முதலிய தொல்லைகள் நீங்கவும் இந்தக் கவசம்
பயன்படும். மற்றும் தனவசியம், ஜனவசியம் முதலியவைகளையும் இது செய்கிறது.
பக்தியுடன் முருகனை வழிபடுவதற்கும் இதனையே பயன்படுத்தலாம். 'சரஹணபவனே,
சைலொளிபவனே' என்னும் பகுதி அர்ச்சனைப் பகுதியாகும். முருகனுக்குரிய
நாமாவளியாக இதைப் பயன்படுத்தலாம். மந்திரப் பகுதிகள் இதில்
இருக்கின்றன. இவையெல்லாம் இரகசியமானவை. தகுதிவாய்ந்தவர்களிடம்
தகுதிபெற்றவர்கள் தகுந்தமுறையில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளத்
தக்கவை. சிறந்த வழிபாட்டு நூல்களாகிய ஆறு கவசங்களையும் கந்தர்
ஷஷ்டியின்போது படிக்கலாம். முடியாதவர்கள் இரண்டாவது கவசத்தை மட்டுமாவது
படித்து முருகனை வழிபடலாம். இது ஒரு சுலபமான முறை.
--------------------------------

_________________________________________
From: "era.murugan achwin"
Date: Sat Nov 17, 2001 1:26 pm
Subject: kanthar shashti kavacham

மன்ற மையத்தில் இந்த இழையைப் படித்தேன். நல்ல
கட்டுரைகள்.

எழுதி வரும் முருகதாசரை அடையாளம் தெரியுமா?


http://forumhub.com/tlit/15344.17.38.58.html

அன்புடன்,
இரா.முரு



__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com