From naga ganesan@... Sun Nov 18 04:41:59 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 12:41:59 -0000
Received: (qmail 18467 invoked from network); 18 Nov 2001 12:41:59 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 12:41:59 -0000
Received: from unknown (HELO n6.groups.yahoo.com) (216.115.96.56) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 12:41:59 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.2.11] by n6.groups.yahoo.com with NNFMP; 18 Nov 2001 12:41:59 -0000
Date: Sun, 18 Nov 2001 12:41:59 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kanRum kunjum
Message-ID: <9t8aan+56oi@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3657
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.226.238
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13189

கன்று
-------

விலங்குகள் ஈனும் குட்டிகளைக் கன்று என்கிறோம்.
கன்று என்பது எதனால்? என் எண்ணம்:
கன்று < கல் என்பதிலிருந்து வந்திருக்கும்.

உதாரணம்:
1)தொன்றுதொட்டு < தொல் (தொல்லியல் = archaeology)
2) பன்றி < பல் (teeth) தந்தம் உடைய தந்தி = யானை;
யானை, பன்றி ஒரேகுடும்பம் என்கிறது உயிரியல்.
பன்றிகளுக்கு பல்முளைத்து வெளியே நீண்டிருக்கும்.
3) தென்றல் < தெல் (இiது பருவக்காற்று குறித்தது.
தமிழில் திசைப் பெயர்கள்:
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/6773
4) நன்று < நல்-

இiவை போலவே, கன்று என்னும் வார்த்தைக்குக் "கல்"
என்பதே அடிப்படை.
கல்லுதல் என்றால் தோண்டுதல், துளைத்தல்.
தாய் வயிற்றைத் துளைத்து வெளிவருவதால்
கன்று என்றானது. இiதற்குப் பிள்ளை என்னும்
சொல்லையும் ஒப்பிடலாம். பிளந்து வருதல்.
(பெண், பிணா, ...)

குஞ்சு
--------

பறவை முட்டைகளில் iஇருந்து பிறப்பது குஞ்சு.
இiது குந்து என்பதன் மறுவடிவம் என்று நினைக்கிறேன்.
மிருகக் கன்று வெளியேவந்ததும் விளையாடும், நடக்கும்.
ஆனால் பறவைக் கூடுகளில் குஞ்சு குந்தியிருக்கும்,
முட்டைக்குள்ளேயும் ஒடுங்கி, குந்தியிருந்து தான்
பிறக்கிறது.

குந்து > குஞ்சு
காட்டுகள்:
1)உந்து > ஊஞ்சல்
2)ஈந்து > ஈஞ்ச (மரம் date palm)
(இiதுவே ஈழம் என்ற சொல்)
3)ஐந்து > அஞ்சு
பிய்ந்துபோனது > பிஞ்சுபோனது
4)சந்த்யா(வந்தனம்) > சஞ்சை
5) விந்த்யா > விஞ்சை
6) பந்தம் > பஞ்சை (கன்னடம்)
மேலும், பந்தை (தெலுங்கு) > பஞ்சை (ஏழை, மலடி)

கன்று, குஞ்சு இiந்தச் சொற்களின் மூலம்
பற்றி மேலும் நீங்கள் சொன்னால் தெரிந்துகொள்ள வாய்ப்பு.

நன்றி,
நா. கணேசன்


--- In agathiyar@y..., naga_ganesan@h... wrote:
>
> பஞ்சு: சொல்லாராய்ச்சி
> ------------------------------
>
> பஞ்சு என்ற சொல்லுக்குத் திரி, இiழை என்றபொருள்கள் உண்டு.
> விதை நீக்கிய பருத்தியை பந்தாகச் செய்து திரி, நூல், iஇழை
> போன்றன செய்யப்படும்.
>
> பந்து என்ற சொல் பஞ்சு என்பதோடு நெருங்கிய தொடர்புடையது.
> F. கிட்டெல் என்னும் பாதிரியாரின் கன்னடப் பேரகராதியைப்
> பார்த்துக்கொண்டிருந்தபோது கிடைத்தன:
>
> கன்னடத்தில், 1) பஞ்சு = A torch (பந்தம் என்னும் தமிழ்ப்பதத்தை ஒப்பிடுக.)
> 2)பஞ்சிகெ = The ball or roll of cotton from
> which the thread is spun. (தமிழின் பந்து என்பதுடன் ஒப்பிடுக).
>
> தமிழில் பந்து -> பஞ்சு என்றாவதற்கு மேலும் சில சான்று
> தரலாம். விந்தம் (விந்தியமலை) தமிழில் விஞ்சை என்று
> வரும் (பெருங்கதை), ஸந்த்யா என்னும் வடசொல் ஸஞ்ஜெ
> என்று கன்னடத்தில் ஆகும். iஇதுபோலவே பந்து -> பஞ்சு
> என்றானதாகத் தெரிகிறது. பந்தி என்றால் இiழைபோல
> வரிசையான அணி. பந்திப்பாய் = மிகக் குறுகலான,
> ஆனால் மிக நீண்ட பாய்.
>
> iஇந்த பந்து <-> பஞ்சு தொடர்பை வேறொரு சொல்மூலமும்
> காணலாம்.
> பஞ்சம் = வரட்சி, வறுமை. கன்னடத்தில் பஞ்ஜெ என்றால்
> மலடி/வறடி. சமற்கிருதத்தில் வந்த்யா என்றால் மலடி.
>
> பூமியைப் பெண்ணாக உருவகம் செய்தல் மரபு.
> நிலமகள் அழுத காஞ்சி - புறம்; நிலம் என்னும் நல்லாள் - குறள்.
> பஞ்சம் பூமி கொள்ளும்போது, "நிலமகள் மலடுபட்டாள்" என்றல்
> பொருத்தமே. பஞ்சம், (வரட்சி), பஞ்ஜெ (மலடி) போன்ற சொற்கள்
> *பந்து என்பதுடன் தொடர்புடையது என்று திருத்தமாகக் காட்டுவது
> வடமொழிச் சொல்லாகிய வந்த்யா (இiது *பந்த்யா என்னும் திராவிடச் சொல்லிலிருந்து
> வந்திருக்கவேண்டும்). வந்தி என்னும் வறுமைக் கிழவி
> பிட்டு விற்றதை மதுரைத் திருவிளையாடல் பேசும்.
> பந்திலிருந்து இஇiழைத்தெடுப்பது திரி, நூல்; கன்னடம்
> துணிவெளுப்போர் திருமணங்களில் பிடிக்கும் பந்தத்தைக்
> பஞ்சி என்றும், நூல்திரிக்கும் பந்தைப் பஞ்சிகெ என்றும்
> சொல்வர்.
>
> பஞ்சம்(< *பந்தம்) கொண்டு இiளைப்பதை வந்தி/பஞ்சை என்ற
> சொற்கள் காட்டும். குழந்தையில்லாமல் iஇளைக்கும் தாய்
> தான் பஞ்ஜெ (மலடி) என்பர் கன்னடியர்.
>
> இபஞ்சு சொல் பற்றி உங்கள் கருத்தென்ன? அறிய ஆவல்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்