From nkannan@... Sun Nov 18 23:46:47 2001
Return-Path: X-Sender: nkannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 07:46:46 -0000
Received: (qmail 33002 invoked from network); 19 Nov 2001 07:46:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 07:46:46 -0000
Received: from unknown (HELO mout1.freenet.de) (194.97.50.132) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 07:46:45 -0000
Received: from [194.97.50.138] (helo=mx0.freenet.de) by mout1.freenet.de with esmtp (Exim 3.33 #3) id 165j8f-0007ir-00; Mon, 19 Nov 2001 08:46:45 +0100
Received: from pd9519186.dip.t-dialin.net ([217.81.145.134] helo=freenet.de) by mx0.freenet.de with asmtp (ID nkannan@...) (Exim 3.33 #3) id 165j8f-0007xk-00; Mon, 19 Nov 2001 08:46:45 +0100
Message-ID: <3BFA0AA4.6F6A443F@...>
Date: Tue, 20 Nov 2001 08:47:48 +0100
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: "agathiyar@yahoogroups.com" , "tamil-ulagam@yahoogroups.com" Subject: Poem: Half naked Fakir
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
From: Kannan X-Yahoo-Profile: naakannan
X-Yahoo-Message-Num: 13205
பக்கிரி
(மடக்கிப் போடாத மனிதக் கவிதை)
நங்கா சாதுவைக் கண்டு நகைக்காதீர்.
கண் தெரிய மூக்குக் கண்ணாடி கொடுத்து அது இன்று
என்னுடன் ஒன்றாகி ஒன்றாகியே போச்சு.
கண்ணாடியுடன் முகம் கழுவி
கண்ணாடியுடன் தூங்குவது
வழக்கமாய் போச்சு.
நங்கா சாதுவை நீங்கள் நகை செய்யாதீர்.
ஆடை பற்றி வருவது நாகரீகம்.
ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
அதுமில்லாதவன் .....என்றெல்லாம் பேசி
ஆடை விலகுகிறதோ என்று
அடிக்கடி மாராப்பை இழுத்துவிட்டு
அதுவே ஒரு கவனக் குறியீடாய்
ஆகிப் போச்சு இந்த நாகரீக உலகில்
நங்கா சாதுவை நீங்கள் கேலி செய்யாதீர்.
அன்று ஆடை இல்லாமல்
குளித்த போது அவரொருவன்
பார்க்கப் போய்
அவசரமாய் போனதந்த
அழகுப் பெண்ணின் இளம் உயிர்.
உடலையும், அதன் உயிர் தன்னையும்
போர்வையாய் பூசிய தோல் என்ற
போர்வையை யாரும் இங்கு சட்டை செய்வதில்லை.
சட்டை என்பது பற்றி புராணமே உண்டு
சட்டையுடன் சட்டையாக இருந்த பாஞ்சாலி
அதுவல்ல இது என்று கை தூக்கிய போது
கை கொடுத்தான் பரந்தாமன் என்று.
அவள் மாத விலக்காய் இருந்தாள்
என்பது கூடுதல் செய்தி.
எனவே, நண்பரே! நங்கா சாதுவைக் கேலி செய்யாதீர்.
ஒரு புண் வந்ததால்
நேற்று ஜட்டி போட முடியவில்லை.
கனவில் வந்து மிரட்டிவிட்டது
காளி, கருப்பு முதலிய நாகரீகத் தெய்வங்கள்.
ஆயிரம் ஆன்மீகம் பேசினாலும்
ஆடைதான் நாம் என்று
இன்று உறுதி செய்வோம்.
ஆடை இல்லாத
அரை மனிதர்களுக்கு
பக்கிரிகள் என்று
பட்டமளிப்போம் -
காந்தியையும் சேர்த்து.