From aysh@... Mon Nov 19 08:05:32 2001
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 16:05:30 -0000
Received: (qmail 23065 invoked from network); 19 Nov 2001 16:05:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 16:05:30 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 16:05:29 -0000
Received: (qmail 29844 invoked from network); 19 Nov 2001 21:35:08 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.66) by 0 with SMTP; 19 Nov 2001 21:35:08 +0530
To:
Subject: RE: [agathiyar] Re: Dhoosi Chuzhal
Date: Mon, 19 Nov 2001 21:37:07 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <9tb0fl+3r2p@eGroups.com>
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin"
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13212

காலை ஏழு மணிக்கு ஊரோடு

எல்லோரும் கர்மசிரத்தையாக

சௌசௌபாத்தை, அதுதாங்க,

பாதி தட்டில் நெய் வடியும்

ரவாகேசரியும் மீதி இடத்தில்

ரவா உப்புமாவும்

(எதெதற்கோ தடை போடுகிறார்களே..

ரவா உப்புமாவுக்கு

ஒரு நாடு தழுவிய தடை போடக் கூடாதா!)

வைத்துக் கொண்டு

ரசித்துச் சாப்பிடும் பெங்களூரில்,

எம்.டி.ஆரில்

'குடிக்க வேண்டாம்..அப்படியே கடித்துச் சாப்பிடலாம்'

டிக்ரி காப்பியை

கடுக்கன் போட்ட வெய்ட்டர்கள்

வாஞ்சையோடு கொண்டு வந்து வைக்கும் பெங்களூரில்,

மல்லேசுவரம் கடையில் இலையில் தருகிற

குல்கந்தைச் சாப்பிட க்யூ நிற்கும் பெங்களூரில்,

ரசத்தில் வெல்லம் போட்டு மேலே சீனியும் போட்டு

தித்திப்பாகச் சுவைக்கும் பெங்களூரில்

உங்களுக்கு பாதி மைசூர்பாகு தான் கிடைத்ததா?

யாருக்கு ஊட்டி விட்டது போகப் பாதி?

anbudan,
EraMurukan

-----Original Message-----
From: Nagasubramanian Chokkanathan [mailto:nagas_baan@...]
Sent: Monday, November 19, 2001 6:42 PM
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Re: Dhoosi Chuzhal


தீபாவளித் தேர்வு முடிந்தது ... இந்த வாரக்கடைசியில் இன்னெர்ன்று பாக்கி !

கல்யாணம் - கெமிஸ்ட்ரியா ... வைரமுத்து காதில் போட்டுவிடாதீர்கள், காதலுக்கும்
கெமிஸ்ட்ரிக்கும் கவிதை பாடவந்தேன் என்று சினிமாவில் எழுதித் தள்ளிவிடுவார்!

என் விஷயத்தில் காலையில் எட்டரைக்கு எழுந்து கங்கா ஸ்நானம் (??) பண்ணிவிட்டு,
பன்னாட்டு வர்த்தகப் பரீட்சை எழுதப் போனேன், மாலை திரும்பிவந்து அரை
மைசூர்பாகு கடையில் வாங்கி உண்டதோடு தீபாவளி முடிந்தது !

வாரக்கடைசியில் ஊருக்குப்போனால், 'பாவம் பிள்ளை, தீவாளிக்குக்கூட
வரமுடியலை' என்று அங்கலாய்த்துக்கொண்டே ஒவ்வொரு வீட்டிலும் அள்ளிக்கொடுத்த இ
னிப்புகள் இருக்கிறதே ... அந்த கஷ்டத்தை ஏன் கேட்கிறீர் ஸ்வாமி !

என்றும் அன்புடன்,
லாவண்யா ...


--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> என்ன தீபாவளியன்று தேர்வு எல்லாம் எழுதி முடித்தாகிவிட்டதா லாவண்யா?
>
> எங்கள் உறவுக்காரப் பெண் ஒருத்தி சுப முகூர்த்த நேரத்தில் தாலி கட்டிக்
> கொண்டு மத்தியானம் இன்-ஆர்கானிக் கெமிஸ்ற்றி பரீட்சை எழுதப் போனதை
> விட இது பரவாயில்லை :-)
>
>
>
>
> --- Nagasubramanian Chokkanathan
> wrote:
> > முருகரே,
> >
> > > ஏதாவது விட்டுப் போய்விட்டதா?
> >
> > விட்டுப்போனது வேறொன்றுமில்லை -உம்ம கவிதைதான் :-)
> >
> >
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Find the one for you at Yahoo! Personals
> http://personals.yahoo.com
Yahoo! Groups Sponsor





Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]