From harikris@... Mon Nov 19 09:33:33 2001
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 17:33:33 -0000
Received: (qmail 40097 invoked from network); 19 Nov 2001 17:33:32 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 17:33:32 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 17:33:31 -0000
Received: (qmail 10043 invoked from network); 19 Nov 2001 23:02:01 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.96) by 0 with SMTP; 19 Nov 2001 23:02:01 +0530
Message-ID: <004d01c1714f$1c50d8a0$6083d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" References: <20011119164242.88133.qmail@...>
Subject: Re: [agathiyar] Who searches for what in the "Google" - interesting--"" site""
Date: Mon, 19 Nov 2001 23:00:32 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" X-Yahoo-Message-Num: 13218
அலமரல் தெருமரல் இரண்டும் மிக அரிய ஆட்சிகளாகக் கருதப்படுபவை என்று என் ஆசிரியர் சொன்னதுண்டு. இந்தத் தெருமரல் பாரதியால் ஆளப்படுகிறது. கம்பனிலும் உண்டு. அலமரல் என்பதுதான் அலமந்துபோதல் என்ற சொல்லின் அடியா என்பதைச் சொல்லறிஞர்கள்தாம் சொல்ல வேண்டும். துருவப் பிரதேசத்தில் ஐஸ்வண்டிக்காரனுக்கு என்ன வேலை! பாரதி பாடலில் ஏராளமான திருநெல்வேலிப் பிரயோகங்கள் உண்டு. போத்திரி, "ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்" என்பதில் கொடி, தாழ்மரம் என்ற பிரயோகங்கள், இன்ன பிற. போத்திரி என்பது பன்றியைக் குறிக்கும் சொல், இல்லையா சாபண்ணே?
அன்பன்
ஹரி கிருஷ்ணன்.
அது கிடக்கட்டும். ஒரு ரகசியம். கவியோகியார் சிலுக்காம்பாளின் ஒரு புகைப்படத்துக்குப் பாட்டெழுதச் சொல்லி இதயம் பேசுகிறது அந்தக் காலத்தில் நடத்திய ஒரு போட்டியில் முதற்பரிசு வென்றவர். (அது இருக்கும் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்.) அண்ணனுக்கு நினைவிருக்கிறதா தெரியாது. ;-)
----- Original Message -----
From: "Shaboo" To: Sent: Monday, November 19, 2001 4:42 PM
Subject: Re: [agathiyar] Who searches for what in the "Google" - interesting--"" site""
|
| --- kaviyogivedham wrote:
| > அன்பர் முருகரே!,
| > யிதற்கே யிப்படி அலமந்து(தி.லி.மொழி)-போகிறீரே!
| > யான் 20 வருடத்திற்குமுன்பு 'சில்க்'பற்றி எழுதிய
|
|
| யோகியாரே..
|
| உங்கள் கையைக் கொடுங்கள்.
|
| இந்த 'அலமந்து' என்ற சொல் எப்படி வந்தது என்ற ரொம்ப நாட்களாக
| 'அலமந்து' போயிருந்த வேளையில், உங்கள் மடலில் இதை பாவித்திருப்பது
| ஆச்சரியம். இது எங்கள் பக்கத்து வட்டாரச் சொல். யாராவது இதற்கு வேர்ச்
| சொல் விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பபேன்.
|
| =====
| அன்புடன்
|
| சாபு