From sadayan50@... Mon Nov 19 09:39:41 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 17:39:41 -0000
Received: (qmail 84731 invoked from network); 19 Nov 2001 17:39:40 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 17:39:40 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 17:39:40 -0000
Message-ID: <20011119173940.24132.qmail@...>
Received: from [194.170.1.132] by web13805.mail.yahoo.com via HTTP; Mon, 19 Nov 2001 09:39:40 PST
Date: Mon, 19 Nov 2001 09:39:40 -0800 (PST)
Subject: Kaviyaranga Kavidaigal 2
To: agathiyar@yahoogroups.com, uaetamilnetters@yahoogroups.com
Cc: tamil-ulagam@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13220


அமீரகத் தமிழிணைய நண்பர்களின் இலக்கிய விழா கவியரங்க கவிதையின்
இரண்டாவது கவிதை
மறைமலையடிகளின் பெயர்த்தி திருமதி. மலர் நடராசனின் கவிதை. பேசுவது
தோழியிடம்

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தாய் மொழியாம் தமிழ் மொழி
தனிப் பெரும் மொழி
தரணி எங்கும் வியாபித்து
தழைத்து உயிர்த்து இருக்கும்
என் உயிருனும் மேலான
தாய் மொழிக்கு தமிழ் மொழிக்கு
என் முதல் வணக்கம்

இணைய நண்பர்களின் அருகிலே
இனியகவி வடிக்கும் அரங்கிலே
இன்பமான பாடல் பகிர்விலே
இளம் பருவ தோழிக்கு
இக்கவி வழி மடலிலே
பாலைவனச் சோகப் பகிர்வு

அன்னை தேசத்து
அகதிகள் நாங்கள்
எண்ணை தேசத்தில்
விட்டு விட்டும்
விடாமலும்
எரிந்து கொண்டிருக்கிறோம்

இறந்த காலத்தின்
வேலையின்மைக் கோடுகளால்
தேசம் கடத்தப்பட்ட
உயிருள்ள
இயந்திரங்கள் நாங்கள்
மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தெரிந்திராத
திசைகளில் தொடர்கிறது
எங்கள் பயணம்

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்ற மடலுக்கு
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது
எங்களுக்கு மட்டும் ஏன்
பணம் வழங்கா
பந்த பாசங்கள்
ஒட்டு மொத்தமும்
சமாதியாகி விட்டன

ஒரு தொலைபேசி உரையாடலிலும்
ஒரு படம் பார்த்ததிலும்
ஒரு வேளை முழுச் சாப்பாட்டிலும்
முற்றுப் பெற்று விடுகிறது
எங்கள் வார இறுதி ஒவ்வொன்றும்
ஒன்றான உணர்வோடு கலந்த
பாசத்தால் ஒத்தடம் தந்த
உன் தோழமை பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள் ?
இந்த தொலைதுர வாழ்க்கை

கலவரத்தில் தொலைந்தது போல்
பயம் பதற்றம் சோகம்
என்றும் விடாமல்
ஒவ்வொரு நாளும் உணர்கிறோம்
உள்ளுக்குள் தாய் நாட்டின் பிரிவு
பலமாடி கண்ணாடி கட்டிடங்கள்
பணச் செழிப்பை பறைச் சாற்றும்
எங்களுக்கோ இப்
பாலைவன மண்ணின்
தொடர்பற்ற பெருமைகள்

நம் ஆற்றங் கரையில்
உன் கைகோர்த்து
நடந்து வாங்கிய
ஈரக்காற்று தந்த சுகம்கூட
இந்த உயரக குளிர் காற்று
தருவதில்லை
விடுமுறை நாட்களில்
பார்க்க பயணப்பட்ட
செயற்கை புல்வெளிகள்
உணர்த்துகிறது
செவ்வந்தி தோட்டத்தின் உயர்வு

நாடு திரும்பும் வழி தொலைந்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
தொடரந்து உழைக்கும் தினங்கள்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்தப் பாலைவனப் பிரதேசத்தில்
இக்கட்டான நிலைகளில்
ஆறுதலோடு அரவணைத்து வருடி
வலுதரும் உன் நட்பு
எழுத்தில் மட்டுமே எண்ணங்கள்
பரிமாறிக் கொள்ள முடிகிறது

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா ?
நம் நட்பின் நெருக்கம்
அன்பின் ஆழம்
பாசத்தின் பரிவு
ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
உன் அருகாமையைத் தவிர

காலத்தின் இந்த பசை தடவல்கள்
எம்மைக் கட்டிப்போட்டது
தொலைவில் தள்ளிவிட்டது
வெறும் கடிதம் போடத்தானா ?
பாலைவன மண்
கையில் மட்டுமல்ல
எண்ணத்தில் கூட ஒட்ட மறுக்கிறது
வெறுமையோடு காத்திருக்கிறோம்
விடியலுக்காக

வாழ்க்கையின் பாதி
காலம் கடந்து போய்
பிரிவிலும் இயலாமை
தீயலும் எரிந்து போகும் உணர்வுகள்
இங்கே சாம்பலாகி விட்டன.

என்ன சொல்லி என்ன பயன்
கண்ணுக்கு தெரியாத கால மாற்றம்
கட்டி இழுத்துக் கொண்டு போகிறது
எங்கோ எதற்கோ எப்படியோ
வாழ்க்கை கரைந்து கொண்டே இருக்கிறது
விமான நிலையத்தில் எட்டிப்பார்க்கும்
உறவுகளின் கண்கள் எடை போடுகிறது
பெட்டியின் எண்ணிக்கையை
எத்தனை கொடுத்தும் ஏமாற்றம்தான்
திரும்புகையில் நம் கையில் பழசுகளே

எனதருமை தோழியே
உனக்காவது புரிகிறதா
பாலைவனச் சோகச்சுமை

தமிழுக்கு நன்றி
தமிழ் உணர்வுக்கு நன்றி


மலர் நடராசன்


=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com