From poo@... Tue Nov 20 10:00:06 2001
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 18:00:06 -0000
Received: (qmail 71240 invoked from network); 20 Nov 2001 18:00:05 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 18:00:05 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 18:00:04 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Tue, 20 Nov 2001 20:57:31 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.48.137]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Tue, 20 Nov 2001 20:59:41 +0300
Message-Id: <4.3.0.20011120185914.00ca15d0@...>
X-Sender: poo/202.54.6.1@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 20 Nov 2001 21:13:01 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
In-Reply-To: <3.0.3.32.20011120173619.00724628@...>
References: <3.0.3.32.20011116081230.0072e880@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 13238

At 05:36 PM 11/20/2001 +0800, you wrote:

>அன்புள்ள இராமுருகன்,
>
>
>At 07:05 AM 11/16/01 +0530, you wrote:
> >இசைக்குடிமானம் ஒரு 'காண்ற்றாக்ட்' மாதிரியா?
> >
> >பிள்ளை, பெண் வம்சத்தின் பெருமைகளைச் சொல்லி (இசை - குடி),
> >
> >திருமணத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு விவரங்களை அறிவிக்கும்
> >
> >ஒப்பந்தமா அது?
> >
> >உங்களிடம் 'சாம்பிள்' இருக்கிறதாகச் சொன்னீர்களே..தந்தருள்க!
>
>
> அந்த சாம்ப்பிலை இன்ன லெக்கில கண்டுநோக்கிக்கொண்ட
>தாக்கலுஞ் சொல்லவும்.
>
>http://www.geocities.com/visva.geo/isaikupidimaanappaththiram1.jpg
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி.

அந்த லெக்கிலே பார்த்திட்டுத்தான் பெரியவுகளுக்கும் மத்தவுகளுக்கும் தாக்கல் சொல்றேன்; தப்புத்தவறு
இருந்தாப் பெரியவுக தான் திருத்தோணும்.
---------------------------------------------------------------
இந்தக் கேள்வி முதலில் வந்த போதும், இப்பொழுது இரா.முரு திருப்பி எழுதிய போதும் விடை எழுத
முற்பட்டுப் பின் தவிர்த்தேன். பெரியவர் எழுதுவார் தானே, அப்பொழுது சேர்ந்து கொள்ளலாம் என்று இருந்தேன்.

இருந்தாலும் முடியவில்லை; இப்பொழுது பொத்தகங்களை எல்லாம் ஊரில் வைத்துவிட்டு, கையொடிந்தவனாக
இருக்கும் நிலையில் நினைவில் இருப்பதை மட்டும் எழுதுகிறேன்.

நகரத்தார் வரலாறு தெரிந்து கொண்டால், இந்த இசைகொடு மானம் (ஆமாங்க, இசைகுடிமானம்ங்குறது பேச்சுத்
தமிழில் எழுந்த மாற்றம்) பற்றிய விளக்கத்தைப் புரிந்து கொள்ளுவது எளிதாகஇருக்கும்.

நகரத்தார் நெடுநாட்கள் காஞ்சியில் இருந்து பின் காவேரிப் பூம்பட்டினம் வந்து சேர்ந்ததாக பெரியவர்கள்
எல்லோரும் சொல்லுகிறார்கள். இது இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இவர்களுக்கு உள்ளூர இருக்கும் சமண, பின் சமயம் மாறியதால் ஏற்பட்ட சிவ நெறிப் பழக்கங்கள்,
பெயரிடும் முறைகள் நெடுங்காலம் பட்டதாகத் தோன்றுகிறது. இது ஒரு கர்ணபரம்பரைப் பட்ட செய்தியே
ஒழியே, கல்வெட்டு ஆதாரம் எல்லாம் அவ்வளவு பழைமைக்குக் கிடைக்கவில்லை. இவர்கள் நெடுகாலம்
சோழநாட்டிலே இருந்திருக்கிறார்கள். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காலத்தில் இவர்கள் சோழ
அரசனோடு தகராறு ஏற்பட்டு சோழநாட்டை விட்டுக் கிளம்ப நேரிடுகிறது. அது ஒரு தனிக் கதை

நகரத்தார் குலச் சிறுமிகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த பூவந்திச் சோழன்
(அப்போதைய அரசன்; குலோத்துங்கன் பெயரன் காலத்திற்கும் அப்புறம் இருந்தவனாய், தஞ்சைச் சோழர்களின்
உறவினனாய், சிறுஅளவில் அரசாண்டவனாய் இருந்திருக்க வேண்டும்.) மகன், அந்தச் சிறுமிகளில் மிக
அழகுடையவளாய் இருந்த முத்துமீனாள் என்னும் சிறுமியைத் தூக்கிக் கொண்டு போய் அந்தப் புரத்தில் வைத்துக்
கொள்ள, நகரத்தாரில் பெரியவர்கள் அரசனிடம் முறையிட, அரசன் செவி மடுக்காமல், இவர்களைக் கடிந்து
மீனாளை இளவரசனுக்கே கட்டிக் கொடுக்கும் படி சொல்ல, இவர்கள் மறுக்க, அவன் இவர்கள் மேல் தண்டனை
அளிக்க, இவர்கள் அதை ஏற்க மறுக்க, காவிரியில் வெள்ளம் வர, மற்றவர்கள் எல்லாம் உழைப்பால் மண்தடுப்பு
சேர்க்க, இவர்கள் தங்களிடம் இருந்த பஞ்சுப் பொதியால் வெள்ளத்தை நிறுத்த, இன்னும் இதுபோன்ற பல
செயல்கள் அரசனின் தன்னுமையைக் (ego) கிளற, அவன் இவ்ர்கள் மேல் படையை ஏவி விட, பட்டினப்பாக்கம்
முழுதும் எரிந்து போய், நகரம் அழகிழந்தது. இந்தக் கலவரத்தில் ஆண்கள் எல்லோரும் 1500 இளைஞர்களை
மட்டும் பிரித்து தங்களுக்கு மட்டும் தெரிந்த மறைவான சுருங்கை வழி தப்ப வைத்து, அவர்களைத் தங்களுடை
குருவான ஈசான சிவாச்சாரியாரிடம் ஒப்படைத்துக் காப்பாற்றுமாறு பொறுப்புக் கொடுத்து தாங்கள் போரைத்
தொடர்ந்து அதிலே எல்லோரும் உயிரைஇழந்தனர். இது நாட்டில் பெரும் கிளர்ச்சியை எழுப்பியது.

தப்பிய 1500 இளைஞர்களையும் கூட்டிக் கொண்டு (இன்றையப் புதுக் கோட்டைக்கு அருகில் உள்ள) வெள்ளாற்றைக்
க்டந்து பாண்டிய நாட்டிற்குள் ஈசான சிவாச்சாரியார் நுழைந்தார். இவர்கள் தப்பிவந்த செய்தியை அறிந்த
சுந்தர பாண்டியன் இவர்களை வெள்ளாற்றங்கரையிலேயே எதிர்கொள்ள ஈசான ஆச்சாரியார் பெண்கள் எல்லாம்
இறந்து போன செய்தியைச் சொல்லி இவர்களுக்குத் திருமணம் செய்து குடியேற்றுமாறு வேண்டிக் கொள்ள அரசன்
ஆணையின் பேரில் சிவநெறி சார்ந்த பிள்ளைமார் பெண் கொடுக்க, (இப்பப் புரிஞ்சிருக்கும் னு
நினைக்கிறேன்; ஏன் இவுங்க புதுக்கோட்டையை ஒட்டி சிவகங்கை வரைக்கும் பரவுனாங்கன்னு? பாண்டிய அரசன்
அறிவார்ந்தவன் அல்லவா? " சோழனோடெ சண்டை போட்டவங்க; அரசனைத் தங்கள் செல்வத்தால் மோதிப்
பார்த்தவன்கள்; இவன்களை தலைநகருக்குள்ளே விடாதே! அதே நேரத்தில் பயன்படுத்திக்கோ!"
திருநெல்வேலிப் பழக்கங்கள், ஆச்சி என்ற சொல்வழக்கு, அந்த சேலைக் கட்டுமுறை இன்னபிற வியக்கத் தக்க
ஒற்றுமைகள் உண்டு)

இந்தக் குடும்பங்கள் அரசனின் ஆணையின் பேரில் செம்மண் பூமியில் இளையாற்றங்குடியில் முதலில் வாழத்
தொடங்கினார்கள். அங்கே ஒரு சிவன் கோயிலைக் கட்டிக் கொண்டு வாழ்க்கை தொடர்ந்தது. மறுபடியும்
திரைகடல் ஓடியும், உள்நாட்டு வணிகமும் தொடர்ந்தன. இவ்ர்களுக்குத் தெரிந்ததெல்லாம் காவிரி ஆற்றங்கரைப்
பக்கத்து வீட்டு அமைப்புத் தான். ஆற்றில் வெள்ளம் வந்தால் விட்டிற்குள் வந்துவிடும்ஆதலால், உயரமான
ப்டிக்கட்டுக்களுடன் கூடிய வீடுகள் கட்டிப் பழக்கம் கொண்டவர்கள் அதே பழக்கத்தில் வீடுகளை உயர்த்தி வைத்து
இந்த வறண்ட பூமியிலும் கட்டிக் கொண்டார்கள்.

பட்டினப் பாக்கத்தில் ஏழு தெருவில் வாழ்ந்த காரணத்தால் இவர்கள் ஏழு பிரிவினராகத் தங்களைக்
கொண்டார்கள். காரைக்குடிக்கு அருகில் உள்ள கழனிவாசலுக்கு, ஏழகப் பெருந்தெரு என்று பெயர்.
(குன்றக்குடியும், காரைக்குடியும் தான் செட்டிநாட்டிற்கு நடுநாயகம் போல; காரைச்செடி மிகுத்ததால் அது
காரைக்குடி; குடி என்றாலே தமிழ்நாட்டில் அது அரசன் ஆணையின் பேரில் குடியேற்றப்பட்ட ஊர் என்பது பொருள்.
அதாவது இந்தக் காலத்து colony போல. ) பின்னாளில் பாண்டியனிடம், இவர்கள் வழிப்பட்ட
ஏழகப்பெரும்படையும் இருந்தது. இந்த ஆயிரத்தைஞ்ஞூற்றுவரின் சாத்து (chamber of commerce),
தென்கிழக்கு ஆசியா எங்கணும் பரவியது. இந்த 1500 பேரில், 500 பேர் குடியிருந்த அரியூர்ப் பட்டணம்
(இதுதான் நம் மருத்துவர் செயபாரதி மீண்டும் கண்டுபிடித்து வரலாற்றை உறுதி செய்த ஊர். அவர் முயற்சி
பெரிதும் பாராட்டத் தக்கது. நகரத்தார் அவருக்குக் கடமைப் பட்டவர்கள்.) அழிந்து போக அதிலிருந்து
சிலர் தப்பி தெற்கே நாகர்கோவில் போய்ச் சேர்ந்தனர். அவர்கள் இன்றைக்குத் தங்களைப்
பிள்ளைமார்களாகவே கொண்டு, பழக்கங்கள் மாறி ஆனால் தாங்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து கொண்டு
போன மரகதப் பிள்ளையாரை வ்ழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் நாகர்கோவிலின் நடுவில்
அந்தக் கோவில் இருக்கிறது.

இன்னும் ஒரு 500 பேர் அழிவில் இருந்து தப்பி சேரநாடு போய் அங்கு மக்களோடு கலந்ததாக
கதையிருக்கிறது. இவர்களின் பின்வழியினர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மீந்து போன ஏழுதெருக்காரர்களும் நாளடைவில் அரசனின் இசைவு பெற்று ஏழு கோயில்களை அமைத்துக் கொண்டு
வாழத் தொடங்கினார்கள். இளையாற்றங்குடி, மாற்றூர், வைரவன்பட்டி, சூரக்குடி, வேலங்குடி, நேமம்,
இலுப்பைக்குடி என்ற ஏழு கோயில்கள் முதலில் எழுந்தன. ஒரு கோயிலைச் சார்ந்தவர்கள் அவர்களுக்குள் தந்தை
வழி உறவு என்பதால் அவர்கள் கோயிற் பங்காளிகள்; எனவே தங்களுக்குள் பெண் எடுத்துக் கொள்ளக்
கூடாது என்று வைத்துக் கொண்டார்கள். அதனால் கோயில் விட்டுக் கோயிலில் தான் பெண் எடுப்பது. இந்தக்
கோயில் வழிந் தங்களை வகைப் படுத்திக் கொண்டது கிட்டத்தட்ட கோத்திரம்போல என்று கருதலாம்.

இந்த ஏழு கோயில்காரர்களுக்குள்ளும் சில உட்பிரிவுகள் உண்டு. அவற்றின் பெயர்கள் பெரும்பாலும் அந்தக்
காலக் காவிரிப்பூம் பட்டினத்தின் அண்மை ஊர்களாகவும் (satellite villaages), உறையூரை ஒட்டிய
பெயர்களாகவும் இருக்கும். மொத்தத்தில்சோழநாட்டு ஞாவகம் போகவில்லை.ரரும்பாக்கூர், மண்ணூர், மணலூர்,
இப்படிப் பெயர்கள் அமையும். இப்படி ஏழு கோயிலாக வாழ்ந்த் காலத்தில் இளையாற்றங்குடியின் ஒரு சிறு
பகுதியினர் பிரிந்து போக வேண்டி அரசனிடம் கேட்டு இரணி, பிள்ளையார்பட்டி என்ற இரண்டு ஊர்களைப்
பெற்றனர். இரணிக் கோயிலாரும், பிள்ளையார்பட்டியாரும் அண்ணன் தம்பி என்ற முறையில் இன்றும் தங்களுக்குள்
பெண் எடுத்துக் கொள்வது இல்லை.

(நகரம் என்றால் காவிரிப் பூம்பட்டினம் என்றும் பொருள் கோயில் என்றும் பொருள். விண்ணகரம் என்று
பெருமாள் கோயிலைச் சொல்வது இல்லையா?)

20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ, அதற்கு முன்னோ, இளையாற்றங்குடி, மாற்றூர்க் கோயிலார் அளவில்
மிகுந்து காணப்பட்டதால், அவர்களின் உட்பிரிவினர் ஒருவருக்கொருவர் ஒரே கோயிலாக இருந்தாலும் பெண்
எடுத்துக் கொள்ளலாம் என்ற வழமை வ்ந்தது. இந்த இரண்டு கோயிலுக்குள்ளும் உட்பிரிவுகளுக்குள்ளேயே மட்டுமே
பெண் எடுக்கக் கூடாது.

இந்த விளக்கத்தோடு, இசை கொடுமானத்தைப் பார்ப்போம்.

கல்வாச நாடு என்பது இந்தக் காலத்து வட்டம் போல; இது சுந்தர பாண்டியன் காலத்தில் இருந்து வழங்கிவந்த
பாண்டிநாட்டுப் பெயர்.
கேரளசிங்க வளநாடு என்பது இராசராசனின் பெயரால் ஏற்பட்டது. வளநாடுகள் இந்தக் காலத்து மாவட்டம்
போல. இராசராசனும், அவன் மகன் இராசேந்திரனும் வ்ல்லரசுகளை ஏற்படுத்தியவர்கள் அல்லவா? அவர்கள்
ஏற்படுத்திய நிர்வாகப் பிரிவுகள் பிற்காலப் பாண்டியர்களால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மாற்றப்படவில்லை.

குலசேகரபுரம், வீரபாண்டியபுரம் என்று ஏகப்பட்ட ஊர்கள் பாண்டிய நாட்டில் மறுபேர் இடப்பட்ட ஊர்களாக
இருக்கின்றன; கணக்கில.
இந்தக் காலத்து அண்ணா அகர், கருணாநிதி நகர்கள் போல. ஊருக்கொன்று இல்லையா?

ஒக்கூர் என்பது காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர். அந்த ஊரின் பெயரில் உள்ள பிரிவினரைக்
குறிக்கிறது. இந்தக் காலத்தில் சிவகங்கை, மானாமதுரைக்கு அருகில் இருக்கும் ஒக்கூர், பழைய ஒக்கூரின்
நினைவால் இடப்பட்டது. இந்த ஒக்கூர் இன்னும் பழைமையானது; இதில்தான் சங்ககால ஒக்கூர் மாசாத்தி
இருந்தார் என்றும் சொல்வார் உண்டு. (ஆனால் என்னால் இன்னும் ஒப்புக் கொள்ள முடியவில்லை)

இந்த இசைகொடுமானத்தில் நல்ல தமிழ், கொச்சைவழக்கு, சில வடமொழிச் சொற்கள் எல்லாம் கலந்து
வழங்குவதைப் பார்த்தால், இதன் மூலப்படி 13,14ம் நூறாண்டுகளில் எழுந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பூஷணம் பூட்டுவது, இன்றைக்கு நல்ல தமிழில் திருப்பூட்டுவது என்றே சொல்லப்படுகிறது.

மாப்பிள்ளையும் பெண்ணும் மாலை மாற்றிக் கொள்ளும் இடத்திற்கு அருகில் ஒரு வெள்ளைத் துணி , வானத்தை
மறைப்பது போல் சிறிய அளவில் கட்டப்பட்டிருக்கும். இந்தத் திருமணத்தில் வண்ணாத்திக்கு சில குறிப்பிட்ட
சடங்குகளும், அதற்கான பணமும் கொடுப்பது உண்டு. வெள்ளை ஆக்குகிற வண்ணாத்தி வெள்ளாட்டி என்று இங்கு
அழைக்கப்படுகிறாள்.

சீராட்டு என்ற ஒரு சடங்கு, பின்னால் வ்ரப் போகும் பிள்ளை பெறும் செய்லை நினைவுறுத்தி வரும்.

கழஞ்சு என்பது பொன்னிற்கான எடை. அதற்குச் சமமான இக்கால எடை எனக்குத் தெரியாது.

பதிமுக்கழஞ்சு என்பது பதின்மூன்று கழஞ்சு. வராகன் என்பது இரண்டுவகை.

பெரிய வராகன் ரூ.3500. சிறிய வராகன் ரூ.3.50. இது அந்தக்காலக் கழஞ்சுப் பொன்னில் எவ்வளவு
பெறும் என்று எனக்குத் தெரியாது.

சக்கரம் என்பதும் ஒருவகைப் பணமதிப்பாக இருக்க வேண்டும் என்ன மதிப்பு என்று தெரியவில்லை.

தெரிசனை என்பது on demand என்று பொருள். சென்ற நூற்றாண்டில் மலேயாவில் ஒரு கடையில் பணம் கட்டி,
இந்தியாவில் அந்தக் கடையின் கிளையில் பணம் கேட்பதற்கான ஓலை தெரிசனை உண்டியல் (demand
draft). ஒருத்தரை தரிசனை செய்தவுடன் கொடுக்க வேண்டிய உண்டியல். அதுபோல இங்கே தெரிசனையில்
கொடுக்கப்பட வேண்டிய பொன்னைக் குறிக்கிறது.

இந்த இசைகொடு மானம் எழுதுபவரின் கையெழுத்து முதலில் இட்டு பின் மாப்பிள்ளை வீட்டுக்காரரும், பெண்
வீட்டுக்காரரும் கையெழுத்து இடவேண்டும்.

இப்படிப் பொன்னும் பணமும் கொடுப்பது மூலம் திருமணம் நடப்பதை உறுதி செய்து கொள்ளுகிறார்கள்.
இவ்வகைப்படி செய்வோம் = Let us do it this way

இதுக்கு மேலே ஆழமாக் கேட்டீங்கன்னா அய்யா அம்பேல்!

அன்புடன்,
இராம.கி.