From nswaminathan@... Tue Nov 20 13:27:01 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 21:27:01 -0000
Received: (qmail 34741 invoked from network); 20 Nov 2001 21:27:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 21:27:01 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 21:27:00 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAKLQwU20535; Tue, 20 Nov 2001 13:26:58 -0800 (PST)
Message-ID: <021e01c17209$de9ba920$a1bd1b42@...>
To:
Cc: ,
Subject: Osama - 1
Date: Tue, 20 Nov 2001 13:25:24 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 13241

காட்சி -1

மணி: ஒரு டிராமா போடலாம்னா ரங்கண்ணாவக் காணோம்.
அண்ணாமலையோ கார்த்திகை தீபத்துக்கு போயிருக்காரு.

தங்கராஜன்: சாந்தி பிரியாணி பண்ரதுல மும்மரமா இருக்கா..
வர மாட்டா. நேத்து ரங்கண்ணாவத் துணிக்கடையில பார்த்தாளாம்..

மணி: தீபாவளி முடிஞ்சிடுத்து. எதுக்கு இவருக்கு துணி. ஓரு வேளை
அடுத்த தீபாவளிக்கு வாங்கி வெக்கறாரோ மலிவு வெலையில ?

தங்க: தெரியல. வெள்ளைத்துணி 40 மீட்டராமே. சாந்தி கேட்டதுக்கு
பதிலே சொல்லலயாமே.

மணி: அய்யய்யோ. இவரு உயிரோட இருக்கறச்சே மாமிக்கி வெள்ளைப்
புடவையா?

தங்க: ஒண்ணும் புரியல. என்ன சாந்தி? ஏன் ஓடி வர?

சாந்தி: ஏங்க மலிவா கெடச்சுதுன்னு உயிரோட வாங்கிவந்தீங்களே
அந்த வான் கோழி...

மணி: உங்கள் ஆட்டம் கண்டு தானும் தன் பொல்லாச் சிறகை
விரித்தாடுகிறதோ?

சாந்தி: வெறுப்பேத்தாதே.. பரந்து போய் பரண்ல ஏறி ஒட்கார்ந்திடுத்து..
பிடிக்கணும்..

மணி: ரங்கண்ணாவப் பாத்தீங்களாமே துணிக்கடையில..

சாந்தி: அவரு செய்யறது எனக்கு புரியல.. மங்களம் மாமியை நேத்திக்கு கடையில
பார்த்தேன் , நாலு சவுரி வாங்கிட்ருந்தாங்க.. என்னைப்பார்த்ததும்
சவுரிய மடியில கட்டிட்டு போயிட்டாங்க..தலைமயிர் கொட்டிபோச்சுன்னு
எனக்கு தெரிஞ்சிடும்னு பயம் போல...

மணி : எல்லாம் மர்மமா இருக்கே..இன்னிக்கி ரங்கண்ணாவை பிடிக்காம
வீட்டுக்கு போககூடாது. அவரு வீட்டு வாசல்ல டேரா போடப்போறேன்.

சாந்தி: அது கெடக்கு நீங்க வந்து வான்கோழியப் புடிங்க.. அது கூரையில
ஓட்டை போட்டு பறந்திறப்போவுது.. காசு செலவானாலும் வெட்டின கோழியா
வாங்கிட்டு வந்திருக்கலாமில்ல.

(தொடரும்)