From nswaminathan@... Tue Nov 20 13:29:25 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 21:29:25 -0000
Received: (qmail 43003 invoked from network); 20 Nov 2001 21:29:24 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 21:29:24 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 21:29:24 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAKLTNU21230; Tue, 20 Nov 2001 13:29:23 -0800 (PST)
Message-ID: <022101c1720a$3553ac40$a1bd1b42@...>
To:
Cc: ,
Subject: Osama - 2
Date: Tue, 20 Nov 2001 13:27:51 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 13242

காட்சி - 2
ரங்கண்ணா வீட்டு வாசல்.

இரவு. இருட்டு.
வாசலில் படுத்திருக்கும் மணி மீது தடுக்கி விழுகிறது ஒரு உருவம்.

மணி திடுக்கிட்டு எழுகிறான்.

ரங்க: மணி நீயா? ஜாக்கிரதை..கோந்து பாட்டில் உடைய இருந்துது..
நல்ல வேளை..

மணி : ஆ, ஆ ரங்கண்ணா, எங்க போயிட்டீர்? தமிழ் நெட்டுல உம்மைக் காணோமே..

ரங்க: போய்யா பொல்லாத தமிழ்நெட்டு. அவனவன் அசத்தறான் ஒவ்வொரு சைட்டுல.
இங்க என்னடான்னா ஈ, எறும்பு, தமில்டம், அப்பளம், பப்படம்னு...

மணி : இதுக்கு போயி கோவிச்சுக்கலாமா? நீங்க வந்து அசத்த வேண்டியதுதானே?

ரங்க: எங்கய்யா வாய்ப்பு கொடுக்கறானுக? யார் யாரெல்லாமோ மட்டுனர்ன்னான்.
என்னைக் கண்டுண்டாங்களா?

மணி: கட்டுண்டோம். காலம் வரும். காத்திருப்போம்..

ரங்க: கிழிச்சோம்..மாமியும் சாந்தியும் கூட வருத்தப்பட்டாங்க. பெண்களுக்கு
33% வாண்டாம், 3% ஆவது எடம் குடுன்னு.. ஒரு சமயல் குறிப்பு, புள்ளிக்கோலம்..
ஒரு எழவுமில்ல..

மணி: கோவிச்சுக்காதீங்க ரங்கண்ணா.. உங்களுக்கு தெரியாததா? எல்லாம்
4% செய்யற வேலை..மத்தவனுக்கு வாய்ப்பு கொடுக்காமலே கொன்னுடுவாங்க
பாவிங்க..

ரங்க: ஆமாண்டா, வந்துருவீங்கே, ஊருக்கு எளச்சவன் புள்ளையார் கோயில்
ஆண்டிதான்னு.. எனக்கு வேலை இருக்கு. நான் தமிழ்னெட்டுக்கு வரதா இல்ல..
வழியவிடு..

மணி : நீங்க துணி வாங்கினீங்களாமே..சாந்தி...சொல்லிச்சி..

ரங்க: உங்களுக்கு வேற வேல இல்லைடா..எவன் என்ன செய்யறான்னு..
நீ வீட்டுக்கு போ. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.

உள்ளே போய் கதவை தாழிடுகிறார்..

மணி தன் வீட்டுக்கு போகிறான்..


(தொடரும்)