From nswaminathan@... Tue Nov 20 13:32:45 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 21:32:44 -0000
Received: (qmail 81867 invoked from network); 20 Nov 2001 21:32:43 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 21:32:43 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 21:32:45 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAKLWiU22243; Tue, 20 Nov 2001 13:32:44 -0800 (PST)
Message-ID: <022801c1720a$ace34720$a1bd1b42@...>
To: Cc: , Subject: Osama - 3
Date: Tue, 20 Nov 2001 13:31:11 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Message-Num: 13243
காட்சி -3
மணியின் வீடு. சாந்தி வருகிறாள்.
சாந்தி: மணி, ஒன் ஒதவி கொஞ்சம் வேணும்..வீட்டுக்கு வா..
மணி: எதுக்கு? பிரியாணி ருசி பார்க்கணுமா?
சாந்தி : கெடந்து அலையாத.. கோழியை இன்னும் புடிக்க முடியல..
அவரு நாற்காலி மேல ஏறி பரணைப் பார்த்துகிட்டு நிக்கிறாரு.. நீயும் வந்தா..
மணி: இதுக்கெல்லாம் ஏணி வெணும்.. ரங்கண்ணா வீட்டுல போய் ஏணி
வாங்கிட்டு வருவோம்.. நேத்திக்கு அவருக்கு கோபம்..கதவை சாத்திக்கிட்டாரு.
கையில பெரிய கோந்து பாட்டில் வேற..
சாந்தி: வீட்டுல ஏதாவது விசேஷமோ? நெறயப் பத்திரிக்கை அனுப்பப்போறாரோ?
அவங்க செய்யறதே விளங்கல..
உள்ளே போய் கதவைத் தட்ட ... அது திறக்கப்படவில்லை.
சன்னல் வழியே பார்க்க சாந்தி பயத்தில்..... வாயைபொத்திக் கொள்கிறாள்.
சன்னல் மூடப்படுகிறது. சாந்தி சைகை காட்டி மணியை அழைத்துகொண்டு
தன் வீட்டுக்கு போகிறாள்.
தங்கராஜன் ஒரு நாற்காலிமேல ஏறி நின்று தன் மூக்கை ஒரு கையால் பொத்தி
இன்னொரு கையில் வடையை பரணுக்கு காட்டியவாறு நிற்கிறார்.
தங்க: சாந்தி எங்க தொலைஞ்சிட்ட. இதுசரியா வரும்னு தோணல. இந்த ஊச
வடை நாத்தம் எனக்கே தாங்கல. வான்கோழிக்கு தாங்குமா? வெளிய வர
பயப்படுது..
சாந்தி : ரொம்பத்தான்..உங்களுக்கு வடைய திங்கணும்னு ஆசை. அதானே
இது மாதிரி சொல்றீங்க..
மணி (மூக்கைப் பொத்தியவாறூ): தங்கராஜன் பொய் சொல்றாருன்னு தோணல.
இப்படி பிடிச்சிட்டு இருந்தா வான் கோழி மயக்கம் அடிச்சி விழும். பிடிச்சுடலாம்.
தங்க: அதுக்குள்ள நாம் செத்துருவம் போல இருக்கு.. ஆமா..ரங்கண்ணா வீட்ல
ஏணி இருக்குமே..
சான்தி : அதாங்க போனொம்..நீங்க நம்பமாட்டீங்க உள்ள யாரு இருந்தாங்கன்னு
தெரிஞ்சா..
தங்க: யாராம்..
மணி: எனக்கும் தெரியணும் சொல்லுங்க..
சாந்தி : ஒசாமா பின் லேடன்..
தங்கராஜன் கை வடை கீழே விழுகிறது. நாற்காலியில்
திகைத்து அமர்கிறார்.. மேலிருந்து வான் கோழி எட்டி பார்க்கிறது..
மணி : வாட்..
தங்க: நீ பார்த்தது சர்தார்ஜியா இருக்கும்..மாமிகிட்ட உப்புமா கிண்ட
பக்குவம் கேக்க வந்திருப்பான்..