From nswaminathan@... Tue Nov 20 13:36:04 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 21:36:04 -0000
Received: (qmail 926 invoked from network); 20 Nov 2001 21:36:03 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 21:36:03 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 21:36:03 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAKLa2U23312; Tue, 20 Nov 2001 13:36:03 -0800 (PST)
Message-ID: <022b01c1720b$232c5840$a1bd1b42@...>
To: Cc: , Subject: Osama - 4
Date: Tue, 20 Nov 2001 13:34:30 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Message-Num: 13244
காட்சி - 4
ரங்கண்ணா வீட்டுக்கு தங்கராஜன், சாந்தி, மணி - விரைகிறார்கள்.
மங்களம் மாமி வரவேற்கிறாள்.
மங்க: இவருக்கும் அமெரிக்க அதிபர் புச்ஷுக்கும் என்ன சம்பந்தம்?
சாந்தி: அய்யோ மாமி. இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே..சித்தி, அண்ணின்னு
சீரியல்பாத்து டிவி ந்யூஸ் பாக்காம இருக்கீங்களே..தலைமயிர் கொட்டுச்சுனு
எனக்கு தெரியாம சவுரி வாங்க மாத்திரம் சாமர்த்தியம் இருக்கு..
மங்க: சாந்தி யாரைப் பாத்து என்ன பேசறங்கறது நெனைவிருக்கட்டும்..
என் பின்னலை அவிழ்த்துவிட்டா தொடையில இடிக்கும், உன்னைபோல எலிவால்
இல்ல..
சாந்தி: இருக்கும்..நாலு சவுரி வெச்சா தொடையில மட்டுமில்ல தெருவிலயும்
பொரளும்..எனக்கு எலிவாலா இருக்கலாம். நான் சவுரி வெச்சு மறைக்கரதில்ல..
மங்க: அப்பவே நெனைச்சேன்..எங்களுக்கு பெரிய காசு வரப்போறது தெரிஞ்சு
பொறாமையில பேத்தரே..உன் கிட்ட எனக்கு என்ன பேச்சு. அடுப்பில கூட்டு
வேகரது..
தங்க: மாமி தப்பா நெனச்சுக்காதீங்க..ரங்கண்ணா 40 மீட்டர் வெள்ளைத்துணி
வாங்கினார்னு தெரிஞ்சு சாந்தி வருத்தப்பட்டா..தனக்கு உயிரே போயிடும்னு
தெரிஞ்சே ரங்கண்ணா இதை செய்யறார். உங்க மேல உள்ள கரிசனத்தால
நாங்க வந்தோம். தவிர எங்க பிரண்டு ரங்கண்ணாவை நாங்க இழக்க
தயாரில்ல..அவராலதான் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கெடச்சத மறக்கல.
மணி: ஆமா திரும்பி பத்திரமா வரணும்..தெரியாத்தனமா சாயபு வாயில நான்
வாங்கி கட்டிட்டு இருக்கேன்.. பின் லாடனால ரங்கண்ணாசெத்துரக்கூடாது.. அவர் வர
வரைக்கும் நாங்க இருக்கோம்..