From nswaminathan@... Tue Nov 20 13:45:30 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 21:45:29 -0000
Received: (qmail 41238 invoked from network); 20 Nov 2001 21:45:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 21:45:29 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 21:45:29 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id fAKLjGU26123; Tue, 20 Nov 2001 13:45:16 -0800 (PST)
Message-ID: <023001c1720c$6d344280$a1bd1b42@...>
To: Cc: , Subject: Osama - 5
Date: Tue, 20 Nov 2001 13:43:43 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Message-Num: 13245
காட்சி -5
ரங்கண்ணா வீடு.
தங்க: சாந்தி ரெண்டு மணி நேரம் ஆச்சே...இப்ப கோழி கீழ எறங்கி இருக்குமோ..
பார்த்துட்டு வரவா..
மணி: அதோ டாக்சி..அதுல பின் லேடன்..
தங்க: அப்பவே சொன்னேன்..சாயபு பத்திபேசாதடான்னு கேட்டியா..
எதையெல்லாம் எப்படி வெட்டப் போறானோ?
சாந்தி : மொகத்துல பாதி தாடியக் காணோமே..ரங்கண்ணா சாடை இருக்கு..
ரங்கண்ணா பின் லேடன் உடையில் பாதி தாடி, உடலெங்கும் ரத்தக் கரையோடு..
ரங்கா: மொகமெல்லாம் அரிக்குது..
தங்க: ரங்கா ஒன் புத்தி ஏன் இப்படி போச்சு..எவ்வளவு காசு கிடைச்சாலும்
ஆந்திராக்ஸ் தடவின லெட்டரை அனுப்பலாமா? அது உனக்கே ஒட்டி
தன்வினை தன்னைச்சுடும்னு ஆயிடுச்சே.அதான் அரிக்குது.. இனிம வீங்கும்..
மூச்சு முட்டி சாகப் போறீங்க..
ரங்க: நீ என்ன சொல்ற.. நான் எதுக்கு ஆந்திராக்ஸ் தடவணும்..
தாடியில ஒட்டுன கோந்தில்ல அரிக்குதுன்னு சொன்னேன்..
சாந்தி : உங்க வாயால கேப்பமே.. எதுக்குத் துணி வாங்கினீங்க..
ரங்க: பின் லேடன் வேசம் போட..
மணி : எதுக்கு?
ரங்க: பின் லாடன் இருக்கிற இடம் தெரிஞ்சா 25 மில்லியன் தரேன்னு
அமெரிக்க அதிபர் புஷ் சொன்னாரு. 'அதுஎனக்கு தெரியும் அவரு
ஆப்கன் எம்பசியில இருக்காரு'ன்னு எழுதிட்டு போஸ்ட் பன்ணிட்டு
'நாந்தான் பின் லேடன்'னு சரணடைஞ்சிடலாம்..னு இருந்தேன்.
போஸ்ட் ஆபீஸ்ல ஸ்ரைக்காம். தவிர ஒட்டின லெட்டரை இனிமே
வாங்க மாட்டானாம். இனிமே எல்லாமே கார்டுலதானாம்.
சரியின்னு எம்பசக்கி போனா அங்க பெரிய லைன் நிக்குது.
எல்லாரும் பின் லேடன் மாதிரி வேஷம் போட்டு நாந்தான் பின்
லேடன்கிறான். இப்படியே பாக்கிஸ்தான், ஈரான், ஈராக்,
ரசியா, லண்டன்னு எங்க பாத்தாலும் அமெரிக்க எம்பசியில
கூட்டமாம். சரி நமக்கு தோதுப்படாதுன்னு திரும்பிட்டேன்..
தங்க: எந்த உடையில என்ன பண்ரதுன்னு ஒனக்கு வெவஸ்த இல்ல..
அது சரி ரங்கண்ணா.. உன்னை பின் லேடன்னு நம்பிருந்தாங்கன்னா
ஒன்னைக் கொன்னுருப்பாங்களே..
ரங்க: ஆமா.. தமிழ்நெட்டுல எழுதி என்ன கண்டோம்? காசா, பணமா?
எப்படியும் பேச்சுப்படி புஷ் 25 மில்லியன் தரணுமே.. மாமிக்கு
இதுவரையில ஒண்ணும் சேத்து வெச்சதில்ல..இப்படியாவது அவளுக்கு..
மங்க: அய்யோ..உங்க உசிருக்கு ஆபத்துன்னுஎனக்கு சொல்லலியே..
அப்படி ஒரு பணம் எனக்கு வாண்டாம்..ஒங்க வேசத்துக்கு சவுரி வாங்கினதுக்கே
என் மண்டை இங்கே உருளறது..
சாந்தி: தப்பா நெனச்சுக்காதீங்க மாமி..
மங்களம்: எல்லாரும் அப்படியே இருங்க. உப்புமா கொண்டுவரேன். சாப்டுட்டு
போகலாம்.
சன்னல் வழியே வான்கோழி பறக்கிறது...
மணி: சொல்லறுத்து சும்மா போகிறதே பாருங்க அங்க.
சாந்தி: பட்சி பறந்து போனதே..
பாவி என்னை மறந்து போனதே..
பந்தம் அறுந்து போனதே....
சொந்தம் என்றிருந்ததும் சொல்லாமல் போனதே..
சன்னலை மூட மறந்தேனே....
இனிம மாமியோட உப்புமா தான்..
அமெரிக்காக்காரன் 500 பவுண்டு குண்டு எல்லாம்போடாம ஒரு பக்கட்
மாமி உப்புமாவைப் போட்டிருந்தா, ஒசாமா வாழ்க்கய வெறுத்து வெளிய
வந்திருப்பானே..
ரங்கண்ணா டிவிக்கு இணைப்பு கொடுக்க குரல் ஒலிக்கிறது..
செய்தி அறிவிப்பு : இதுவரை உலகெங்கும் 100 மில்லியன் பேர்கள் தாம்தான் ஒசாமா பின்லேடன்
என்று மனு செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில்
அதிகம் உயரலாம் என்று நம்பப்படுகிறது. இதில் யார் உண்மையான ஒசாமா பின்லேடன் என்று
கண்டுபிடிக்க பின்லேடன் வாரியம் அமைக்க 500 மில்லியன் ஆகும்
என்று தெரிகிறது. இதனால் பின் லேடனை இனித்தேட வேண்டாம் என்று
அதிபர் புஷ் அறிவித்து விட்டார். பின்னணியில் புஷ் படம் தெரிகிறது.
அவர் கையில் ஒரு பலகையில் "Osama Bin Laden NOTWanted"
என்று எழுதியிருக்கிறது.