From aysh@... Tue Nov 20 15:59:02 2001
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 23:59:01 -0000
Received: (qmail 40525 invoked from network); 20 Nov 2001 23:59:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 23:59:01 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 23:59:00 -0000
Received: (qmail 7958 invoked from network); 21 Nov 2001 05:27:20 +0530
Received: from unknown (HELO User) (210.214.133.219) by 0 with SMTP; 21 Nov 2001 05:27:20 +0530
To: Subject: RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
Date: Wed, 21 Nov 2001 05:30:34 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-Reply-To: <4.3.0.20011120185914.00ca15d0@...>
Importance: Normal
From: "era.murugan achwin" Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13246
திரு.ஜேய்பி, திரு.ராம.கி,
அரிய தகவல்களை அளித்த இரு பெரியார்க்கும் நன்றி.
கேரளத்தில் பாலக்காட்டுப் பக்கத்தில் இன்னும் செட்டியார்கள் உண்டு.
இவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசுகிறவர்கள்.
கர்நாடகத்து ஷெட்டிகள் இவர்கள் வம்சம் கிளை பிரிந்து ஏற்பட்டிருக்கலாமோ?
(கர்நாடகத்தில் மாண்டியாவில் - மைசூருக்கு அருகே - தமிழ் வைணவர்கள் உண்டு.
மாண்டிய அய்யங்கார்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் ராமானுசர்
அனபாய சோழன் காலத்தில் கர்நாடகத்துக்குப் போக வேண்டிய சூழ்நிலை
அந்த லெக்கிலே பார்த்திட்டுத்தான் பெரியவுகளுக்கும் மத்தவுகளுக்கும் தாக்கல் சொல்றேன்; தப்புத்தவறு
இருந்தாப் பெரியவுக தான் திருத்தோணும்.
---------------------------------------------------------------
இந்தக் குடும்பங்கள் அரசனின் ஆணையின் பேரில் செம்மண் பூமியில் இளையாற்றங்குடியில் முதலில் வாழத்
தொடங்கினார்கள். அங்கே ஒரு சிவன் கோயிலைக் கட்டிக் கொண்டு வாழ்க்கை தொடர்ந்தது. மறுபடியும்
திரைகடல் ஓடியும், உள்நாட்டு வணிகமும்தொடர்ந்தன. இவ்ர்களுக்குத் தெரிந்ததெல்லாம் காவிரி
ஆற்றங்கரைப்
பக்கத்து வீட்டு அமைப்புத் தான். ஆற்றில் வெள்ளம் வந்தால் விட்டிற்குள் வந்துவிடும் ஆதலால், உயரமான
ப்டிக்கட்டுக்களுடன் கூடிய வீடுகள் கட்டிப் பழக்கம் கொண்டவர்கள் அதே பழக்கத்தில் வீடுகளை உயர்த்தி வைத்து
இந்த வறண்ட பூமியிலும் கட்டிக் கொண்டார்கள்.
ஒக்கூர் என்பது காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர். அந்த ஊரின் பெயரில் உள்ள
பிரிவினரைக்
குறிக்கிறது. இந்தக் காலத்தில் சிவகங்கை, மானாமதுரைக்கு அருகில் இருக்கும் ஒக்கூர், பழைய ஒக்கூரின்
நினைவால் இடப்பட்டது. இந்த ஒக்கூர் இன்னும் பழைமையானது; இதில்தான் சங்ககால ஒக்கூர் மாசாத்தி
இருந்தார் என்றும் சொல்வார் உண்டு. (ஆனால் என்னால் இன்னும் ஒப்புக் கொள்ள முடியவில்லை)
இந்த இசைகொடுமானத்தில் நல்ல தமிழ், கொச்சைவழக்கு, சில வடமொழிச் சொற்கள் எல்லாம் கலந்து
வழங்குவதைப் பார்த்தால், இதன் மூலப்படி13,14ம் நூறாண்டுகளில் எழுந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பூஷணம் பூட்டுவது, இன்றைக்கு நல்ல தமிழில் திருப்பூட்டுவது என்றே சொல்லப்படுகிறது.
[Non-text portions of this message have been removed]