From eramurug@... Wed Nov 21 08:55:34 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 16:55:33 -0000
Received: (qmail 25454 invoked from network); 21 Nov 2001 16:55:33 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 16:55:33 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 16:55:33 -0000
Message-ID: <20011121165533.47609.qmail@...>
Received: from [210.214.131.75] by web14801.mail.yahoo.com via HTTP; Wed, 21 Nov 2001 08:55:33 PST
Date: Wed, 21 Nov 2001 08:55:33 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Bhavam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9tg4k8+3lii@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13267
தமிழில் காமம் பாடிய பெண்பால் புலவர்கள் குறைவு இல்லையோ! சட்டென்று
நினைவு வருகிறவர் நாச்சியார் தான்.
உங்கள் கன்னட நாட்டில் அக்கம்மாதேவி போல் தமிழில் உண்டா என்று நண்பர்கள்
சொல்ல வேண்டும்.
நாயக பாவம் பெண்பாற்புலவர்கள் பாடாவிட்டாலும் பாரதி பாடியிருக்கிறானே
- கண்ணம்மா பாட்டுக்கள். அவன் இன்னும் ஒரு படி மேலே போய் கண்ணன் என்
சேவகன் என்று கூடப் பாடியிருக்கிறான் ("சொன்னபடி கேட்பான்..துணிமணிகள்
காத்திடுவான்..காதல் பெரிதெனக்கு..காசு பெரியதில்லை).
கடவுளைக் குழந்தையாக வரித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் நூல்கள் போல்,
'காந்தி பிள்ளைத் தமிழ்' இருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா லாவண்யா?
இப்போது இருக்கும் எந்தத் தலைவருக்குப் பிள்ளைத் தமிழ் பாடலாம்?
--- Nagasubramanian Chokkanathan
wrote:
> அன்பு அகத்தியர்களுக்கு,
>
> என் தோழியின் கேள்வி இது !
>
> ஒரு ஆண் புலவர், தன்னை பெண்ணாக நினைத்துப் பாடுவதற்கு 'நாயிகா
> பாவம்' / 'நாயகி பாவம்' என்று சொல்கிறோம், (முதலில் இது சரியா
> என்று தெரிய
> வேண்டும் ! பெரியாழ்வார் பாடியது இந்த வகைதானே ?)
>
> அடுத்து, பெண் புலவர்கள், தங்களை ஆணாக நினைத்துப் பாடினால், அதற்கு
> ஏதேனும் விசேஷப் பெயர் உண்டா ? 'நாயக பாவம்' ?
>
> ஒரு பேச்சுக்கு அப்படியே வைத்துக்கொண்டால், இந்த இரண்டு பெயர்களுமே
> வடநாட்டுப்
> பெயர்களாகத் தெரிகிறது, இவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் உண்டா ?
>
>
> தங்கள் பதிலுக்கு நன்றிகள் பல,
>
> என்றும் அன்புடன்,
> நாக சுப்ர மணியன். சொ.
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
http://geocities.yahoo.com/ps/info1