From poo@... Wed Nov 21 09:07:48 2001
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 17:07:48 -0000
Received: (qmail 9560 invoked from network); 21 Nov 2001 17:07:47 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 17:07:47 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 17:07:44 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Wed, 21 Nov 2001 20:05:10 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.48.100]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Wed, 21 Nov 2001 20:07:18 +0300
Message-Id: <4.3.0.20011121201856.00ca2100@...>
X-Sender: poo/202.54.6.1@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Wed, 21 Nov 2001 20:21:24 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Bhavam
In-Reply-To: <9tg4k8+3lii@eGroups.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 13269
At 11:53 AM 11/21/2001 +0000, you wrote:
>அன்பு அகத்தியர்களுக்கு, என் தோழியின் கேள்வி இது ! ஒரு ஆண் புலவர், தன்னை பெண்ணாக நினைத்துப்
>பாடுவதற்கு 'நாயிகா பாவம்' / 'நாயகிபாவம்' என்று சொல்கிறோம், (முதலில் இது சரியா என்று
>தெரிய வேண்டும் ! பெரியாழ்வார் பாடியது இந்த வகைதானே ?) அடுத்து, பெண் புலவர்கள், தங்களை ஆணாக
>நினைத்துப் பாடினால், அதற்கு ஏதேனும் விசேஷப் பெயர் உண்டா ? 'நாயக பாவம்' ? ஒரு பேச்சுக்கு
>அப்படியே வைத்துக்கொண்டால், இந்த இரண்டு பெயர்களுமே வடநாட்டுப் பெயர்களாகத் தெரிகிறது, இவற்றுக்கு
>இணையான தமிழ்ச்சொற்கள் உண்டா ? தங்கள் பதிலுக்கு நன்றிகள் பல, என்றும் அன்புடன், நாக சுப்ர
>மணியன். சொ. ------------------------ Yahoo! Groups Sponsor
>---------------------~--> Universal Inkjet Refill Kit $29.95 Refill any
>ink cartridge for less! Includes black and color ink.
>http://us.click.yahoo.com/Vv.L9D/MkNDAA/ySSFAA/XUWolB/TM
>---------------------------------------------------------------------~->
அன்பிற்குரிய நண்பருக்கு,
நாயகன் என்ற சொல்லை வடநாட்டுப் பெயரென்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அய்யன் என்ற சொல் தமிழ் தானே! அய்யன்என்பது தந்தையாரையும் அகவையில் பெரியவரையும் குறிக்கும்.
இதே போல ஆயி என்பது தாயையையும் அகவையில் பெரிய மூதாட்டியையும் குறிக்கும். நிலவுடைமைக்
குமுகாயத்தில் ஆண்டையையும், அவன் மனைவியையும் கூட இவை முறையே குறிக்கும்.
ஆயம் என்பது மக்கள் தொகுதி. அதனால் தான் கும்மிய/குமுகிய ஆயம் குமுகாயமாகப் புணர்ந்து society யைக்
குறித்தது.
ஆயம் என்பது மேய்க்கிற ஆடு, மாடு (குறிப்பாகப் பசு) ஆகியவற்றின் திரளையும் குறிக்கும். ஏனெனில் ஆ
என்பது பசு தானே! ஆக்களின் கூட்டத்தை மேய்ப்பவன் ஆயன்.
குறிஞ்சியில் வெறும் வேட்டைக் கூட்டமாக அரசு என்று ஏற்படாத நிலையில் தலைவனாக இருந்த நிலை மாறி,
முல்லை நிலத்தில் தனிச் சொத்து, வீடு,அரசு, என்று முற்றி அரசன் என்ற நிலை ஏற்படுகிறது. Private
property and organized structures of society started most probably with
Mullai. The need for a king is also understood to have started with Mullai.
பெரிய ஆயன், கூடிய மந்தைகளுக்குச் சொந்தக்காரன் ஆகிறான். அவனை எல்லோரும் மதிக்கத்
தொடங்குகிறார்கள். அவன் இவ்ர்களை எல்லாம் தன் விறலால் புரக்கிற போது, அவன் வைத்தது சட்டமாகிறது.
இப்பொழுது, பலுக்கல் திரிவு பற்றிய ஒரு வழக்கை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தமிழில் அகரம்
(யகரம்) >ஞகரம்>நகரம் என்ற பலுக்க மாற்றம் விரிவாக நடந்திருக்கிறது.
"என்னடா, ஒங்கொப்பா என்ன சொல்றாரு?"
"என்னடா, ஒங்க ஞொப்பா என்ன சொல்றாரு?
"என்னடா, ஒங்க நொப்பா என்ன சொல்றாரு?
"ஒங்க நோத்தா அப்படிச் சொன்னாளாக்கும்!"
"ஆமா, எங்க நாத்தா சொன்னாக் கேட்டிருவீங்களோ?"
இங்கே உன் அப்பன், உன் ஆத்தா என்ற பொருள் வருவதைக் காணுவீர்கள். அதே பொழுது முன்மை நிலை மாறி
தன்மை நிலைக்கும், படர்க்கைக்கும் பயன்படுத்துவதும் உண்டு.
"யாயும் ஞாயும் யாராகியரோ?"
யான்>ஞான்>நான்
யாவல்>ஞாவல்>நாவல் (இந்தக் காலத்து நவ்வாப் பழம்)
யாயிறு (யாய் +இறு = இருட்டை முடித்தது)>ஞாயிறு>நாயிறு
மய்யை>மஞ்ஞை = மயில்
ஆலுதல்>ஞாலுதல்>நாலுதல் = தொங்குதல் (ஆலமரம் ஞாவகம் இருக்குங்களா?)
யா+அகம் = யாவகம்>ஞாவகம்>நாவகம் = நினைவுக்குள் கொண்டுவருதல்
யாகம்>*ஞாகம்>நாகம் = கரிய நிறத்தைஉடைய விலங்கு
யா>யால்>ஞால்>ஞாள்>நாள்; மாலைக் காலம் நாளின் தொடக்கம்
யாம்>ஞாம்>நாம்>நாமம் = அச்சப் பொருள்
குடியை>குடிஞை = ஆந்தையின் ஒருவகை
யன் என்று விகுதி பெறும் பல சொற்கள் ஞன் என்ற விகுதியும் பெறும். அதுவும் இந்தமாற்றத்தால் தான்.
ஈர்>ஞீர்>நீர் = கரிய முகிலின் நின்றுபொழிவுற்ற மழை நீர்
யமன்>ஞமன்>நமன்
யா>ஞா= கண் (ஞானம் என்ற சொல்லுக்கும், இன்னும் கீழே உள்ள சில சொற்களுக்கும் அடிப்படை)
ஞாட்டம்>நாட்டம்
ஞாடு>ஞோடு>நோடு
ஞோக்கு>நோக்கு
யார்>ஞார்>நார் (கட்டுதல், திணித்தல்)
யாண்>ஞாண்>நாண் = கட்டுதல்
யாழ்>ஞாழ்
இப்படி ஒரு 30 சொற்களையாவது என்னால் எடுத்துக் காட்ட முடியும். நீங்களே இந்த ஒப்புமையை ஒரு தமிழ்
அகரமுதலியை வைத்துக் கொண்டு காணமுடியும்.
அப்படி வந்த சொல் தான் நாயன்
ஆயன்>ஞாயன்>நாயன்
ஞாயன் கொடுக்கிற தீர்ப்புத்தான், வழிமுறைதான் ஞாயம். அது நாயம் ஆகி வடமொழி
வழக்கப்படி இன்னொரு ய் சேர்ந்து ந்யாயம் ஆகும். நாம் மறுபடியும் தமிழாக்குகிறேன் என்று சொல்லி
நியாயம் என்று ஆக்கிவைப்போம். இத்தகைய மாற்றச் சொற்களும் இக்காலத் தமிழில் மிகுதி.
நாயன் என்ற சொல் பொருள் நீண்டு தலைவன், அரசன், கடவுள், தந்தை ஆகிய எல்லோரையும் குறிக்கும்.
நாயன் மதிப்புக் கூடி நாயனார் ஆகும். சிவ நாயனார்க்ள் பற்றி உங்களுக்குத் தெரியும். நாயனார் என்ற
பொருள் தந்தையைக் குறித்து சீவக சிந்தாமணியில் வ்ரும்.
நாயன்>நாயர் : சேர நாட்டுப் படைத்தலைவர். இன்றைக்கு இது மலையாள நாட்டில் ஒருசாதிப் பெயர். இது
போலத்தான் சோழ நாட்டில் படை முதலி என்ற தலைவர் வழி வந்தவர்கள் இன்று சாதியாகிப் போனார்கள்.
பாண்டிய நாட்டில் படைத் தலைவர்கள் தேவர்கள் ஆனார்கள். சோழநாட்டில் படையாட்களாய் இருந்தவர்கள்
படையாட்சிகள் ஆனார்கள். பாண்டிய நாட்டில் படையில் தலைவர்களுக்குக் கீழ் மறவர்கள் இருந்தார்கள்.
மொத்தத்தில் சாதிகள் எதற்கும் பொருள் இல்லை சாமி! அவையெல்லாம் ஒரு இடைக்காலக் குமுகாயத்தின்
பதவி நிலைகள்.
நாயனார் >நயினார் = சமண மதத்தில் தலைமை நிலையில் உள்ள ஒரு வகுப்பார். திருவண்ணாமலைக்குப்
பக்கத்தில் இன்றைக்கும் தமிழச் சமணர் பல ஊர்களில் இருக்கிறார்கள். அவர்களின் குரு பீடமும் அந்த
மாவட்டத்தில் தான் இருக்கிறது.
நாயன்>நாயகன்>நாயகம் எல்லாம் மேலும் உள்ள விரிவுகள்.
சோழப் பேரரசுகள் காலத்தில் ஒவ்வொரு படைத்தலைவனுக்கும் நாயகம் என்ற பெயரிலேயே பட்டம் கொடுக்கப்
பட்டது.
நாயகன்>நாயக்கன் = தெலுங்கர்களில் படைத்தலைவன்
நாயக்கன்>நாயக் = மராட்டியரில் படைத் தலைவன் மராட்டமும் கூர்ச்சரமும் பஞ்ச திராவிடங்களில்
சேர்ந்தவைதான். இந்தக் காலத்தில் அவற்றைப் பிரித்து வடக்கே சேர்த்துக் கொண்டு வரலாற்றை மாற்றிக்
கொண்டு இருக்கிறார்கள்.
நாயன்>நாயுடு = தெலுங்கில் நாயக்கனுக்கு உள்ள மற்றொரு சொல். இதுவும் தலைவனைத் தான் குறிக்கும்.
இதே போல கன்னடத்திலும் ஒரு சொல் உண்டு.
பாவாணர் சொல்லுவார்:
நாயன் என்னும் பெயர் தந்தை பெயராகவும், குலப் பட்டப் பெயராகவும் வழங்கும் வழக்கு வடமொழியில் இல்லை.
தலைவன், கணவன் என்ற பொருளிலேயே அவை அங்கு வழங்குவன. மேலும் தமிழில் வழங்கும் பல்வேறு வடிவங்களும்
வடமொழியில் இல்லை. நாய நாயக என்ற இரு வடிவங்களே அங்கு உள.
நாயகன் என்ற சொல்லுக்கு வட மொழி அகராதியில் காட்டப்படும் வேர் நீ என்பது. அது செலுத்துதலை அல்லது
நடத்துதலைக் குறிக்கும். அச்சொல்லும் நூ என்பதன் திரிபான நீ என்பதே. நீத்தல் = செலுத்துதல். நீயான்
= கலம் செலுத்துவோன்.
இனி நீங்கள் சொன்ன நாயகி பாவம் அதற்குப் பெரிய சான்று நாலாயிரப் பனுவலே. நாயக பாவம் நான்
கேள்விப் பட்டதில்லை. யாராவது சொல்லுகிறார்களா என்று பார்க்க எனக்கும் ஆவல் தான்.