From nkannan@... Wed Nov 21 11:03:10 2001
Return-Path: X-Sender: nkannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 19:03:09 -0000
Received: (qmail 89348 invoked from network); 21 Nov 2001 19:03:08 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 19:03:08 -0000
Received: from unknown (HELO mout1.freenet.de) (194.97.50.132) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 19:03:09 -0000
Received: from [194.97.50.135] (helo=mx2.freenet.de) by mout1.freenet.de with esmtp (Exim 3.33 #3) id 166ceK-0001i8-00 for agathiyar@yahoogroups.com; Wed, 21 Nov 2001 20:03:08 +0100
Received: from pd9e61d3c.dip.t-dialin.net ([217.230.29.60] helo=freenet.de) by mx2.freenet.de with asmtp (ID nkannan@...) (Exim 3.33 #3) id 166ceK-0007kv-00 for agathiyar@yahoogroups.com; Wed, 21 Nov 2001 20:03:08 +0100
Message-ID: <3BFD4C33.C646FE10@...>
Date: Thu, 22 Nov 2001 20:04:19 +0100
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: "agathiyar@yahoogroups.com" Subject: Re: Bhavam
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
From: Kannan X-Yahoo-Profile: naakannan
X-Yahoo-Message-Num: 13271
மதிப்பிற்குரிய இராம.கி:
--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
>>>>
> குறிஞ்சியில் வெறும் வேட்டைக் கூட்டமாக அரசு என்று ஏற்படாத நிலையில் தலைவனாக
இருந்த நிலை மாறி,
> முல்லை நிலத்தில் தனிச் சொத்து, வீடு, அரசு, என்று முற்றி அரசன் என்ற நிலை
ஏற்படுகிறது. Private
> property and organized structures of society started most probably
with
> Mullai. The need for a king is also understood to have started with
Mullai.
> பெரிய ஆயன், கூடிய மந்தைகளுக்குச் சொந்தக்காரன் ஆகிறான். அவனை எல்லோரும்
மதிக்கத்
> தொடங்குகிறார்கள். அவன் இவ்ர்களை எல்லாம் தன் விறலால் புரக்கிற போது, அவன்
வைத்தது சட்டமாகிறது.
>>>>>>>
இது உங்களது விருப்பமான கோட்பாடு:-). எனக்கும் மனிதப் பரிணாமத்தில் ஆர்வமுண்டு.
உங்கள் கருத்துப்படி மனிதர்கள் பல்வேறு நாடுகளில் தனித்தனியாக உருவாகி இருப்பது
பின்குறிப்பாக வருகிறது. மனிதனின் ஆரம்பம் ஆப்பிரிக்க என்றால், அவன் முல்லை வாசியானது
ஈராக்கில் இருக்க வேண்டும் (இதைக் கூட ஆய்வாளர்கள் மறுப்பர், ஏனெனில் ஆப்பிரிக்க
புல்வெளிகளில்தான் நான்கு கால் விலங்கிலிருந்து, இரண்டுகால் மனிதனாக மாறுவதாக
பரிணாமவியல் சொல்கிறது.எனவே அவன் முல்லைவாசிதான் ஆரம்பத்திலிருந்தே) எனவே
தமிழனின் குறிஞ்சித் தோற்றம் நாம் உருவாக்கும் ஒரு
புதிய கோட்பாடாகவே அமையும். அது தவறு என்று சொல்லவில்லை. உங்கள் வாதத்திற்கு
பலம் தேட நாம் புதிய தடயங்களைச் சேர்க்க வேண்டும்.
> இனி நீங்கள் சொன்ன நாயகி பாவம் அதற்குப் பெரிய சான்று நாலாயிரப் பனுவலே. நாயக
பாவம் நான்
> கேள்விப் பட்டதில்லை. யாராவது சொல்லுகிறார்களா என்று பார்க்க எனக்கும் ஆவல்
தான்.
"ஒரு நாயகமாய் ஓட உலகுஉடன் ஆண்டவர் ...." என்று நம்மாழ்வார் பேசுகிறார்.
ஈடு, 'ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி
உலகத்தை ஆளுதல்' என்று சொல்கிறது.
இது உங்கள் விளக்கத்திற்கு உரம் சேர்க்கும்.
இரண்டாவது, நம்மாழ்வார் 'நாயகியாக தன்னைப் பாவித்துக் கொள்ளும் ஒரு நிலையில்
தன்னை நாயகி நிலையிலிருந்து 'நாயகனாக' பாவித்துப் பாடியிருக்கிறார். லட்டுப் போன்ற
பத்துப் பாடல்கள். 'கடல்ஞாலம் செய்தேனும் யானே' என்னும்' என்று தொடங்கும் ஐந்தாம் பத்துப்
பாடல்கள் (5-6-1).
ஆம்பளையா நினைச்சுப் பாடனும்னா அது ஆண்டாள் செய்தால்தான் உண்டு. அவ செய்தாலும்
செய்திருப்பா:-) பட்டர்பிரான் கோதை ஆச்சே! தேட வேண்டும்.