From aj@... Thu Nov 22 06:52:15 2001
Return-Path: X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 14:52:17 -0000
Received: (qmail 88604 invoked from network); 22 Nov 2001 14:52:17 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 14:52:17 -0000
Received: from unknown (HELO omail2.emirates.net.ae) (194.170.168.4) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 14:52:13 -0000
Received: from pmail3.emirates.net.ae by omail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GN700974IMAW3@...>; Thu, 22 Nov 2001 18:51:46 +0400 (GST)
Received: from asif (ndd114.emirates.net.ae [217.165.144.114]) by pmail3.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GN700EIFIM5HD@...>; Thu, 22 Nov 2001 18:51:44 +0400 (GST)
Date: Thu, 22 Nov 2001 18:36:53 +0400
Subject: aRivuathi vizaa-1
X-Sender: aj@... (Unverified)
To: tamil@...
Cc: tamil-ulagam@egroups.com, agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20011122143653.0068bc50@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 13287
அறிவுமதி விழா
=============
நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி.. வெள்ளிக்கிழமை. குளிர் கலந்த தென்றல் தாலாட்டும்
இனிய மாலைப் பொழுது.. அமீரகத்தில் வெம்மை குறைந்து இதமான காலநிலை பரவி
வருவதன் அறிகுறிகள்.
இந்திய விளையாட்டு மன்ற வளாகத்திற்கு மாலை 7:25க்குச் சென்றபோது
சாபு அண்ணன் பதட்டத்தோடு வாசலில் நின்று கொண்டிருந்தார். இறங்கியதும்
"உள்ளே அரங்கத்தில் வண்ணங்களை மாற்றி விட்டார்கள். முன்பு நாம் ஆண்டு
விழாவிற்கு காட்சிகளைத் திரையிட உபயோகித்த சுவரில் இப்போது பழுப்புவண்ணம்
பூசியிருக்கிறார்கள். பழுப்பு வண்ண பின்புலத்தில் நாது கணினி வழி காட்சிகள்
சரியாகத் தெரியுமா?" என்று கேள்வி எழுப்பினார். ஃபயீச் வந்து விட்டானா என
அவரிட கேட்டபோது இன்னமு வரவில்லைஎன்று பதில் வந்தது. எட்டு மணிக்கு
அறிவுமதி தலைமையில் இலக்கிய விழா.. 7:30க்கு இந்தக் குழப்பம்.
விழாவை ஏழரைக்கேத் துவங்குவதாகத்தான் திட்டமிட்டிருந்தோம்..ஆனால், அன்றைய தினம்
வேறொரு நிகழ்ச்சிக்காகவும் அரங்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால் ஏழரைக்குத்தான் அரங்கு
எமக்குக் கிடைக்குமென்றும்,அரங்கத்தைச் சுத்தம் செய்வதற்காகவும், நாற்காலிகள்இடுவதற்காகவும்
அரை மணி நேரம் அவகாச கேட்டிருந்தார்கள்..எனவே விழா எட்டு மணிக்கு என்று தீர்மானித்திருந்தோம்.
என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் ஃபயீச் வந்துவிட, பழுப்பு வண்ணப் பின்னணியில்
சோதனை செய்து விட்டு அது தேறாது என முடிவு செய்ததும் அன்வர்,பாரத் உள்ளிட்ட நண்பர்கள்
மேசை விரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த துணியை எடுத்து திரை விரிப்பாக உருமாற்ற செய்யும்
முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.. ஒரு புறம் இந்த வேலை நடந்து கொண்டிருக்க மறுபுறம்
கணினியை நிறுவும் வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.
இம்முறை எவ்வளவு விருந்தினர்கள் வருவார்கள் என்பது பற்றி நாங்கள் ஒரு கணக்கு வைத்திருந்த
போதும், 'சித்தி' தொடரின் இறுதி நாள் என்பதாலும், வெள்ளிக்கிழமை நடத்தபடும் விழா என்பதாலும்
100 பேர்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எம் கணக்குகளுக்கு மாறாக
7:45க்கே நூறு நாற்காலிகளும் நிறைந்து விட அரங்க ஊழியர்களிடம் சொல்லி அதிக நாற்காலிகள்
கொண்டு வரச் சொல்லி அரசு,சாபு அண்ணன்,போஸ் ஆகியோர் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
எதிர்பார்த்ததை விட அதிகமானோர் வந்து விட்டதால் நாற்காலிகள் வந்து சேர கொஞ்சம் தாமதாகிவிட,
விழா நேரம் நெருங்கி விட்டதைக் காரணம் காட்டி உரித்த நேரத்தில் விழாவைத் துவங்கி விடலாம்
என்று தலைவர் பசீர் சொல்லிக் கொண்டிருந்தார்.ஆனால், வந்திருப்பவர்களுக்குப்போதுமான இருக்கைகள்
கிடைப்பதற்கு முன்னர் விழாவைத் துவங்குவது முறையெனப்படாததால் சற்றுக் காத்திருந்து விழாவைத்
துவக்கியபோது மணி 8:10.
மேடையேறி நான் மாலை வணக்கம் சொன்னபோது நிறைந்த அரங்கையும், இருக்கைகள் போதாமல்
20 அமீரக நண்பர்கள் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது.. ஆட்டம்,
பாட்டம்,கொண்டாட்டங்களுக்கு இடமில்லாமல் இலக்கியம் கேட்பதற்கும் நம்மவர்கள் ஆதரவு தருகிறார்கள்
என்பது நிறைவாக இருந்தது.. அம்மாதிரி விழாக்களை அமீரகத்தில் அரங்கு நிறைய ஆட்களுடன் நடத்த
இயலும் என்பதனை அமீரக நண்பர்கள் மீண்டும் நிறுவியிருக்கிறோம் என்பதும் பெருமையாக இருந்தது.
எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து வரைதான்.
நண்பர் இண்டி ராம் சமீபத்தில் வலையில் இட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் MP3 ஒலி வடிவத்தைத்தான்
நிகழ்ச்சியில் வழங்க எண்ணியிருந்தோம்..ஆனால் என்ன காரணத்தாலோ, அது சரிவர இயங்காமல்
போய் விட, மேடையில் ஒலிவாங்க்கிக்கு முன்னால் நின்று கொண்டிருந்த நான் வாழ்த்தைப் பாடத்துவங்க
எல்லோரும் சேர்ந்து உதடசைத்தனர்.. ஒருபுறம் அது உணர்ச்சிபூர்வமாக இருந்தாலும்,இன்னொரு புறம்
முதற்கோணல் முற்றும் கோணலோ என்று ஐயம் எழும்பியது.