From eramurug@... Thu Nov 22 07:41:11 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 15:41:11 -0000
Received: (qmail 34134 invoked from network); 22 Nov 2001 15:41:11 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 15:41:11 -0000
Received: from unknown (HELO web14808.mail.yahoo.com) (216.136.224.224) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 15:41:11 -0000
Message-ID: <20011122154110.77319.qmail@...>
Received: from [210.214.128.203] by web14808.mail.yahoo.com via HTTP; Thu, 22 Nov 2001 07:41:10 PST
Date: Thu, 22 Nov 2001 07:41:10 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Bhavam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13294

பிரியமான கமலா சேச்சி,

நன்றி. நீங்கள் சொன்ன அத்தனை பெண்பால் புலவர்களையும் மதிக்கிறேன். என்
கேள்வி இதுதான் - காதல் பாடிய பெண்பாற் புலவர்கள் உண்டு. உடல் காதல்
(காமம்) பாடிய பெண் புலவர்? - 'திருப்பவளச் செவ்வாய் தான்
தித்தித்திருக்குமோ' பாடிய நாச்சியார் போல?

அண்மைக்கால எழுத்தாளர்களில் செல்வி லதா ராமகிருஷ்ணன் புதுக்கவிதை
எழுதும்போது 'ரிஷி' என்ற ஆண்பாற் புனைப் பெயர் புனைந்து எழுதுகிறார்.
அகவயமான கவிதைகள் பெரும்பாலும்.

சேச்சி, கமலம் தம்புராட்டியைப் பற்றி எழுதுங்கள். பாலாமணி அம்மா,
சுகதகுமாரி பற்றியெல்லாம் எழுதுங்கள். நாடகம் பற்றியும் நீங்கள் எழுத
வேண்டியது நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக
எழுத வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அன்புடன்,
இரா.முருகன்




--- Kamala Devi wrote:
> அன்பின் சகோதரர் முருகன்,
> முதலில் பெண்கள், அடடா, எத்தகு அருந்தவப்பெண்களை அற்புதமாய் அடையாளம்
> காட்டமுடியும்,
> நாயக நாயகி பாவம் பின்னர், ---
> சங்ககாலத்தில் மன்னர்களிடையே பூசலிருந்தாலும் கவிஞர்களிடையே எத்தகு
> ஒருமைப்பாடிருந்தது என்பதற்கு
> சான்றுண்டு.ஆணுக்கீடாக பெண்பாற்புலவர்கள் சிறந்த கவிதை யாத்திருப்பது
> அக்காலக்
> கல்விமுதிர்ச்சியையும்,பெண்ணின் பெருமையயும்
> காட்டுகிறது.உதாகரணத்திற்கு, --
> ஒளவை,ஆதிமந்தியார்,வெள்ளிவீதியார்,காக்கைபாடினயார்
> நச்செள்ளையார்,கச்சப்பேட்டுனன்னாகையார்,குறமகள் iளவெயினி,
> காமக்கன்னியார்,
> கீரன் எயிற்றியார்,ஒக்கூர் மாசாத்தியார்,அள்ளூர்
> நன்முல்லையார்,காவர்பெண்டு,னக்கண்ணையார்,
>
நப்பசலையார்,னல்வெளியார்,பாரிமகளிர்,பொன்முடியார்,பூங்கணுத்திரையார்,பூதப்பாண்டியந்தேவி,
> காரைக்கலம்மையார்,போன்ற புலவர்களின் மாண்பினை (ராஜாக்கள்
> நிரம்பிய சபையில்)
> கவனத்தில் கொண்டுவருகிறேன்.
> iனி நாயக நாயகிபாவத்தை சேரனாட்டின் அறிஞர் பெருந்தகை,
> குலசேகராழ்வார் திருவேங்கடத்தம்மான்
> மீது பாடியிருக்கும்திருமொழி,பக்தினலம் கெழுமிய பனுவல்கள் பல உண்டு.
> என்னை கவர்ந்த சிலவரிகள்------பெண்ணின் கற்புனெறிபோற்றி நாயகன்
> நாயகி பாவத்தை,
> விளக்கும் பாவத்தில் ஓர் உயரிய வாழ்வியல் மேற்கோளினை குலசேகரர்
> பாடல்வழி காண்போமே---
> கண்டார் iகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானையல்லால்
> அறியாகுலமகள்போல்
> விண்தோய் மதில்புடைசூழ வித்துவக் கோட்டம்மா நீ
> கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே'------
>
> பெண்புலவர்கள் தமிழில் மட்டும் தானா? 19 வயதில் உயிர் நீத்த கமலம்
> தம்புராட்டியின்(சூத்திரனை
> நேசித்த பாவத்திற்காக்) ஆற்றல்மிகு கானங்கள்--அவளின் iசைக்காகவே
> உயிரையும் த்ருணமாய் மதித்து,
> தம்புராட்டியை காணச்சென்று கதறக்கதற, கொலை செய்யப்பட்ட
> கோபிகுட்டனின் சாஹித்யம்
> எழுதமுடியுமா?எண்ணும்போதே பொங்கிபொங்கி வரும்
> கண்ணீர்,---------?
> uncle ஜே.பி. மலையாள iலக்கியவளங்களை தமிழில் அறிமுகம்
> செய்யக்கூறினீர்களே.?
> தொடங்கிவிட்டேன், ஆனால் எழுதும் வலிமை, நெஞ்சைப்பிழியும் அந்த
> சோகக்கதைகளை
> எழுதும் வலிமை---------------?
> கமலாதேவி.
>
>
>
> >From: "era.murugan achwin"
> >Reply-To: agathiyar@yahoogroups.com
> >To: agathiyar@yahoogroups.com
> >Subject: Re: [agathiyar] Bhavam
> >Date: Wed, 21 Nov 2001 08:55:33 -0800 (PST)
> >
> >தமிழில் காமம் பாடிய பெண்பால் புலவர்கள் குறைவு இல்லையோ! சட்டென்று
> >நினைவு வருகிறவர் நாச்சியார் தான்.
> >
> >உங்கள் கன்னட நாட்டில் அக்கம்மாதேவி போல் தமிழில் உண்டா என்று
> நண்பர்கள்
> >சொல்ல வேண்டும்.
> >
> >நாயக பாவம் பெண்பாற்புலவர்கள் பாடாவிட்டாலும் பாரதி
> பாடியிருக்கிறானே
> >- கண்ணம்மா பாட்டுக்கள். அவன் இன்னும் ஒரு படி மேலே போய் கண்ணன் என்
> >சேவகன் என்று கூடப் பாடியிருக்கிறான் ("சொன்னபடி
> கேட்பான்..துணிமணிகள்
> >காத்திடுவான்..காதல் பெரிதெனக்கு..காசு பெரியதில்லை).
> >
> >கடவுளைக் குழந்தையாக வரித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் நூல்கள் போல்,
> >'காந்தி பிள்ளைத் தமிழ்' இருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா லாவண்யா?
> >
> >இப்போது இருக்கும் எந்தத் தலைவருக்குப் பிள்ளைத் தமிழ் பாடலாம்?
> >
> >
> >--- Nagasubramanian Chokkanathan
> > wrote:
> > > அன்பு அகத்தியர்களுக்கு,
> > >
> > > என் தோழியின் கேள்வி இது !
> > >
> > > ஒரு ஆண் புலவர், தன்னை பெண்ணாக நினைத்துப் பாடுவதற்கு 'நாயிகா
> > > பாவம்' / 'நாயகி பாவம்' என்று சொல்கிறோம், (முதலில் இது
> சரியா
> > > என்று தெரிய
> > > வேண்டும் ! பெரியாழ்வார் பாடியது இந்த வகைதானே ?)
> > >
> > > அடுத்து, பெண் புலவர்கள், தங்களை ஆணாக நினைத்துப் பாடினால்,
> அதற்கு
> > > ஏதேனும் விசேஷப் பெயர் உண்டா ? 'நாயக பாவம்' ?
> > >
> > > ஒரு பேச்சுக்கு அப்படியே வைத்துக்கொண்டால், இந்த இரண்டு பெயர்களுமே
> > > வடநாட்டுப்
> > > பெயர்களாகத் தெரிகிறது, இவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்
> உண்டா ?
> > >
> > >
> > > தங்கள் பதிலுக்கு நன்றிகள் பல,
> > >
> > > என்றும் அன்புடன்,
> > > நாக சுப்ர மணியன். சொ.
> >
> >
> >__________________________________________________
> >Do You Yahoo!?
> >Yahoo! GeoCities - quick and easy web site hosting,
> just $8.95/month.
> >http://geocities.yahoo.com/ps/info1
> >
> >
> >
> >
> >Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
> >
> >
>
>
>
_________________________________________________________________
> Get your FREE download of MSN Explorer at
> http://explorer.msn.com/intl.asp
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
http://geocities.yahoo.com/ps/info1