From cbose@... Tue Nov 27 00:36:39 2001
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Nov 2001 08:36:38 -0000
Received: (qmail 97149 invoked from network); 27 Nov 2001 08:36:38 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 27 Nov 2001 08:36:38 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Nov 2001 08:36:37 -0000
Received: from vsnl (unknown [203.199.242.62]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 05700E646 for ; Tue, 27 Nov 2001 14:09:49 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011127141054.007acc10@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 27 Nov 2001 14:10:54 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] ayyaa---?aaththaa--?
In-Reply-To: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 13505
அன்புச் சகோதரி கமலா தேவி அவர்களுக்கு,
தங்களுக்கு விருது வழங்கிய நிகழ்ச்சி குறித்து தாங்கள் எழுதியதனைப் படிக்கும்போது என் கண்களும்
குளமாயின. இது போன்ற நிகழ்வுகள் தான் நம் வாழ்வின் பொருளுரைக்கும் மைல்கற்கள் ஆகும். இன்னும் பல
மைல்கற்களைத் தாங்கள் பயணப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
அடி ஆத்தா என்று பெண் கடவுளை அழைப்பது அல்லது ஒருமையில் அழைப்பது எல்லாம் அன்பின் வெளிப்பாடுகளே.
உரிமை எடுத்து பக்தன் அழைப்பதாகும்.
நம் வீடுகளில் கூட பெண் குழந்தைகளை டேய், இங்க வாடா, இல்லடா என்று ஒரு பையனை அழைப்பது போல
அழைப்பது ஒரு அன்பின் வெளிப்பாடே.
============================================
>வைரமுத்துவின் நூல் மட்டுமல்ல, மேலாண்மைபொன்னுச்சாமி, பூமணி,னாஞ்சில்னாடன்,
>பொன்னீலன் போன்றோரின் நடை மிகவும் பிடிக்கிறது. ஆனால், அவர்கள்தமிழ்---
>ஆய்வுக்கு தேர்வு செய்துவிட்டு பல iடங்கள் தடுமாறவைக்கிறது.
===================================
மேலே குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களின் கதை மாந்தர்களின் மொழி நடை பெரும்பாலும் இன்றைய நடுத்தட்டு
மக்களின் யதார்த்த மொழி நடையாகும். அங்கு தான் மொழி வாழ்கிறது. இதில் உங்களுக்கு தடுமாற்றத்திற்கு
இடம் வராது. அந்த மக்களுடன் சிறிது நாட்கள் பழகினாலே போதும்.
===================================>
>ஸார் சென்னை வந்தால் உங்கள் வகுப்பிலமர்ந்து, ஒருமணினேரமாவது உங்களிடம்
>தமிழ் படிக்கவேண்டும்(வட்டார வழக்குத்தமிழில் அவ்வளவு சம்ஸயங்கள் உண்டு.)
==================================>
சென்னை வந்தால் அவசியம் சந்திப்போம். வட்டார வழக்குமொழியை நேரில் அனுபவிக்க நகரத்தை விட்டு
தள்ளிப் போகவேண்டும். அதுவும் மதுரைப் பக்கம் சென்றால் நகரக் கலப்பில்லாத, ஆங்கிலக் கலப்பில்லாத
அப்பழுக்கற்ற அன்பின் தமிழைக் கேட்டு ரசிக்கலாம்.
என் வகுப்பில் இதற்கான விடை கிடைக்காது. நான் பெரும்பாலும் மொழியியல் வகுப்புகளையே எடுப்பதால்.
ஒரு சில வகுப்பு மாணாக்கர்களுக்கே என்றாவது சில நாட்களில் இலக்கிய வகுப்பு எடுக்கிறேன். ஆனால்
நீங்கள் இங்கே வரும்போது எங்கள் மாணாக்கர்களுக்கு " நானும் தமிழ் இலக்கியமும் ' என்பது குறித்து
உரையாற்ற வேண்டும்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
>
>>From: "Dr.P.Chandra Bose" >>Reply-To: agathiyar@yahoogroups.com
>>To: agathiyar@yahoogroups.com
>>Subject: Re: [agathiyar] ayyaa---?aaththaa--?
>>Date: Sat, 24 Nov 2001 15:30:48 +0500
>>
>>அன்பிற்குரிய கமலா தேவி அவர்களுக்கு,
>>
>>தமிழ் நாட்டில் தந்தையை அய்யா, அப்பச்சி, அப்பா, ( டாடி) என்று அழைக்கிறார்கள். இது இடத்தைப்
>>