From ganapathi s@... Tue Nov 27 10:32:27 2001
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Nov 2001 18:32:26 -0000
Received: (qmail 53210 invoked from network); 27 Nov 2001 18:32:16 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 27 Nov 2001 18:32:16 -0000
Received: from unknown (HELO mailweb16.rediffmail.com) (203.199.83.28) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Nov 2001 18:32:15 -0000
Received: (qmail 621 invoked by uid 510); 27 Nov 2001 18:32:43 -0000
Date: 27 Nov 2001 18:32:43 -0000
Message-ID: <20011127183243.620.qmail@...>
Received: from unknown (24.4.254.97) by rediffmail.com via HTTP; 27 Nov 2001 18:32:43 -0000
MIME-Version: 1.0
Reply-To: "Ganapathi S"
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Ramana Maharishi
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
X-Yahoo-Message-Num: 13514


மஹரிஷி ரமணர் -1

மஹரிஷி ரமணரைப் பற்றி எழுதவேண்டுமென்று ஒரு உந்துதல். நானும் ஹரிகிருஷ்ணனும் தமிழ் வருடப் பிறப்பை ஒட்டித் த்ருவண்ணாமலை சென்றிருந்தோம். மலைவலம் போகலாம் என்று புறப்பட்டால் மழைகொட்டத் தொடங்கிவிட்டது. அதுவும் ஒரு அனுபவம்தானே. நடந்தோம்.

சுமார் 14 கி.மீ. பாதை அது. ரமணர் மலைவலத்தை எல்லோருக்கும் வற்புறுத்துவாராம். நடந்தோம். நேரம் போவதே தெரியாமல் நடந்தோம். மழை விடுவேனா என்று பெய்துகொண்டே இருந்தது. கையில் குடையெல்லாம் கிடையாது. தொப்பலாக இருவரும் நனைந்துகொண்டே நடந்தோம். "பாஞ்சாலி சபதம் சொல்லு ஹரி" என்றேன். தனிநடிப்பாக அற்புதமாகச் சொல்லுவார் ஹரி. சொல்லத் தொடங்கினார். இன்னுமொரு மழை சேர்ந்து கொண்டது. மெய்ம்மறந்து நடந்துகொண்டே இருந்தோம். அந்த போதைகொண்ட நிலையில் எங்களால் 25 கல் தொலைவென்றாலும் நடந்திருக்க முடியும். இன்று அமெரிக்காவில் இருந்து யோசிக்கையில் அது தொலைதூரக் கனவாகத்தோன்றுகிறது.

இதோ அந்த மஹானின் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்ச்சிகள். இவை பெரும்பாலும் ஆர்தர் ஆஸ்பார்ன் எழுதிய ரமண மஹரிஷி என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன தினத்தன்று பிறந்தவர் வெங்கடராமன். பின்னால் ரமணர் என்று அழைக்கப்படப் போகிறவர். வருடம் 1879. இளவயதிலேயே தந்தையார் இறந்துவிட மதுரையிலிருந்த சித்தப்பாவிடம் அனுப்பப்பட்டார். விளையாட்டில் மிக ஆர்வம். கால்பந்து, மல்யுத்தம்நீச்சல் ஆகியவற்றில் ஈடுபட்டார். பெரிய படிப்பாளியாவதற்கான அறிகுறி ஒன்றும் இல்லை. (விவேகானந்தர்கூட மல்யுத்தம், கால்பந்து மற்றும் body building இவற்றில்நாட்டம் கொண்டிருந்தார் அல்லவோ! அவர் படிப்பிலும் சுட்டிதான்). ஒரு முறைகேட்டாலே மனத்தில் இருத்திகொண்டுவிடுகிற அதிசய ஆற்றல் இவருக்கு இருந்தது (நரேந்திரனும் அப்படித்தானே).

வெங்கடராமன் தூங்கினால் யாராலும் எழுப்பமுடியாது. ஒருமுறை திண்டுக்கல்லில் (hee..hee..என் மாமியார் ஊருங்க) பெரியப்பா வீட்டிற்குச் சென்றிருக்கிறான் சிறுவன்.அவனை வீட்டில் விட்டுவிட்டு எல்லோரும் கோவிலுக்குப் போய்விட்டார்கள். திரும்பி வந்து கதவைத் தட்டி, சன்னலைத் தட்டி..ஊகூம்...எழுப்பமுடியவே இல்லை. எதிர்த்த வீட்டிலிருந்து ஒரு சாவியை வாங்கித் திறந்துகொண்டு போனார்கள். எல்லோரும் அடித்து எழுப்ப முயற்சி செய்தார்கள். மற்றச் சிறார் திருப்தியாக இவனை அடித்துத் தீர்த்தனர். காலையில் எழுந்து மற்றவர் சொல்லித்தான் வெங்கட்டராமனுக்கு இந்த விவரமே தெரியும்!

பகவானுக்குப் பதினேழாவது வயதில் சமாதி நிலை தானாகவே வந்தது. அவர் வாயாலேயே கேட்போம்:

மதுரையை விட்டு நிரந்தரமாகப் போவதற்குச் சுமார் ஆறு வாரங்களுக்குமுன்னால்என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதுவும் திடீரென்று. என் மாமாவீட்டின் முதல் மாடியில் ஒரு அறையில் உட்கார்ந்திருந்தேன். நான் நோய்வாய்ப்படுவதென்பதே சாதாரணமாகக் கிடையாது.அன்று திடீரென்று செத்துவிடுவேனோ என்றொரு அச்சம் என்னைப் பீடித்தது. என் உடல் நிலையில் அந்த அச்சத்திற்கான ஆதாரம் எதுவும் இல்லை, நானும் காரணம் காண முற்படவில்லை."நான் சாகப்போகிறேன்" என்ற எண்ணம் வலுக்கவும், என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன். பெரியவர்களுக்குச் சொல்லவேண்டுமென்றோ, மருத்துவரிடம் செல்லவேண்டுமென்றோ எனக்குத் தோன்றவில்லை. இந்தப் பிரச்சினையை நானேதான் தீர்க்கவேண்டும், இங்கேயே, இப்போதே என்று மட்டும் தோன்றியது.

சாவின் அதிர்ச்சி என் மனத்தை உள் நோக்கி விரட்டியது. "சாவு வந்துவிட்டது, அதற்கு என்ன பொருள். எது சாகிறது? உடல்தான்" என்று என்னுள் சொல்லிக்கொண்டேன். ஆனால் இந்த வார்த்தைகளிலல்ல. ஒருசவம்போல நீட்டிநிமிர்ந்தேன். மூச்சையும் பேச்சையும் அடக்கி உடலைவிறைக்கச் செய்தேன். "நல்லது, இந்த உடல் செத்துவிட்டது. இதை மயானத்திற்குக் கொண்டுபோய் எரித்துச் சாம்பலாக்கிவிடுவார்கள். இந்த உடல் செத்தால் நான் மரித்துவிட்டேனா? இந்த உடல் நானா? இது அமைதியாய்ச் செயலிழந்து கிடந்தாலும் என்னுள்ளிருந்து 'நான்' வலுவாகக் குரலெழுப்புகிறதே. இந்த உடலை மீறிய ஆன்மாதான் 'நான்'. இந்த ஆன்மாவைச் சாவு தொடாது."

இவையெல்லாம் ஏதோ சோம்பேறிக் கற்பனைகள் அல்ல. என் மனத்தின் குறுக்கே மின்னல்போல அவை வீறிட்டுச் சென்றன.

இந்த அனுபவம் சுமார் அரைமணி நேரத்தில் நடந்தது. வெங்கடராமனை மஹரிஷியாக மாற்றும்பொருட்டுத் திருவண்ணாமலையை நோக்கி அனுப்பியது. அவருடைய திருவண்ணாமலைப் பயணம் மிகவும் சுவாரசியமானது.

நாமும் அதைப் பின்னால் தொடருவோமா?.....

அன்புடன்

மதுரபாரதி