From kisna@... Thu Nov 29 01:15:14 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 29 Nov 2001 09:15:13 -0000
Received: (qmail 79563 invoked from network); 29 Nov 2001 09:15:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 29 Nov 2001 09:15:13 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Nov 2001 09:15:13 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by spade.pacific.net.sg with ESMTP id fAT9Eg021153; Thu, 29 Nov 2001 17:14:42 +0800
Received: from kisna (mcns226.docsis223.singa.pore.net [202.156.223.226]) by smtp1.pacific.net.sg with SMTP id fAT9Eec04827; Thu, 29 Nov 2001 17:14:40 +0800
Message-Id: <3.0.6.32.20011129171310.007ef6c0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 29 Nov 2001 17:13:10 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Kartheekai Tepam.
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 13532
மற்ற சமயங்களில் இல்லாத ஒரு சிறப்பு நமது சமயத்திலுண்டு.
ஆண்டு முழுவதும் நமக்கு திருநாளாக அமைந்துள்ளது சிறப்புதான் அது.
சித்திரையில் பெளர்ணமி
வைகாசியில் விசாகம்.
ஆனியில் திருமஞ்சனம்
ஆவணியில் ஓணம்
புரட்டாசியில் நவராத்திரி
ஐப்பசியில் தீபாவளி
கார்த்திகையில் தீபம்
மார்கழியில் மங்கையர் நோன்பு.
தையில் பொங்கல்
மாசியில் மகம்
வைகாசியில் விசாக நட்சத்திரம் புத்தர் பெருமான் திருவிழாவும்
சேர்த்துக்கொள்வதால் விசேஷமாக சேர்த்துக்கொள்ளலாம்.
திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.
பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே
இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம்ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.
தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.
சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்
தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.
இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் ,
தெற்கே தீபவழிபாடு ' கார்த்திகை தீபம் ' என்றும் கொண்டாடப்படுகிறது.
தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.
தீபவழிபாட்டில் சிறப்பானது '' கார்த்திகை தீபம் '' ஆகும்.
இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமிதிதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.
தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத்
தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்முன்றையும்தான் தமிழர்கள்
வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.
'' அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்ற்னேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான் ''
-- என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிப்பட வேண்டும்.
இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து
பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும்
முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றசங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி
முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
'' கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்
கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்
சிறப்பாக குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில்
இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று,அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு
அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.
திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்துபெற்றான்.
மாணிக்கவாசகர், '' சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே '' என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார்.
குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும்.
ஐந்து முகங்களையும் பெண்களின் மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை,
அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.
நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றி
வைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.
அகல், எண்ணெய், திரிம் சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ' விளக்கு ' என்று அழைக்கப்படுகிறது.
இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.
இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.
இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.
முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர்.
அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார்.
இதன் காரணமாக ' பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது.
வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்றுகருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.
அப்பர் பெருமான் ' நமசிவாய ' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.
ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.
கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல்,
அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்தவேண்டும் என்கிறார்.
திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில் :--
'' விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
-- என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
'' நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''
-- என்று கார்நாற்பது கூறுகிறது.
நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல்
தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.
இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீபஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின்
கதை மூலம் அறியலாம். முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது.
தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது,
திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப்
பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால்
அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன்
மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம்
எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.
அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்
பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.
தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் '' மகரஜோதி '' தரிசனம் கேரளத்தில் மிகவும்
பிரசித்தம்.
ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.
ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக
திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே '' லிங்கோத்பவ மூர்த்தி '' ஆகும்.
திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப்
போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி த்ரும் தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில்
தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வ்ழிபடப்படுகிறது.
கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும்,
சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.
இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார்
சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து
கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன்
மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.
அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும்தீப ஒளியை தரிசனம் செயவர்.
திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.
'' கார்த்திகை விளக்கிட்டனன் '' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால்
சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
'' சொக்கப்பானையை வணங்வது சொக்கப் பனையாகும் '' சொக்கப்பனாகிய
சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.
தொல்காப்பியம் '' வேலியின் நோக்கிய விளக்கு நிலையும் '' என்று கார்த்திகையில்
ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.
கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழா ஆகும்.
பிறவிப்பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெற, கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான்
அடிக் கமலம் சென்று தொழுது, முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கி நன்மை அடைவோம்.
திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு
திருநாவுக்கரசர் திருவண்ணாமலையில் பாடிய பதிகம்.
````````````````````````````````````````````````````````````````````````
நான்காம் திருமுறை. பதிகம்63.திருவண்ணாமலை : திருநேரிசை
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
திருச்சிற்றம்பலம்