From vijay r@... Fri Nov 30 05:29:19 2001
Return-Path:
X-Sender: vijay r@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 30 Nov 2001 13:29:19 -0000
Received: (qmail 38200 invoked from network); 30 Nov 2001 13:29:19 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 30 Nov 2001 13:29:19 -0000
Received: from unknown (HELO bosvwl01) (216.52.49.35) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Nov 2001 13:29:18 -0000
Received: from 192.168.200.83 by bosvwl01 (InterScan E-Mail VirusWall NT); Fri, 30 Nov 2001 08:19:05 -0500
Received: from BLRKECIMR01.ad.infosys.com ([192.168.200.58]) by INDHUBBHS03.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Fri, 30 Nov 2001 18:57:07 +0530
Received: from kecmsg05.ad.infosys.com ([192.168.117.11]) by BLRKECIMR01.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Fri, 30 Nov 2001 18:57:07 +0530
X-MimeOLE: Produced By Microsoft Exchange V6.0.4712.0
content-class: urn:content-classes:message
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
Subject: Greatest Poets--1(Kahlil Gibran)
Date: Fri, 30 Nov 2001 18:57:07 +0530
Message-ID: <9DB6357440BAD411A6A00050BA8CA56B021F5132@...>
X-MS-Has-Attach:
X-MS-TNEF-Correlator:
Thread-Topic: [agathiyar] Hype cycle and ALavandhAn
Thread-Index: AcF5m/VKj8eJjYswT7qnWIj4XfLlZgABVe6g
X-Priority: 1
Priority: Urgent
Importance: high
To:
Return-Path: vijay r@...
X-OriginalArrivalTime: 30 Nov 2001 13:27:07.0229 (UTC) FILETIME=[B50D38D0:01C179A2]
From: "vijay r"
X-Yahoo-Profile: vijaygct
X-Yahoo-Message-Num: 13563

அன்புள்ள அகத்தியர்களுக்கு வணக்கம்.

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
என்று சொன்னான் பாரதி.

அதனைச் செய்ய அடியேன் வைத்துள்ள முதல் அடி இதுதான்.இங்கு பிறநாட்டு கவிஞர்களைப்
பற்றியும் -அவர்களது படைப்புகளைப் பற்றியும் -அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் உங்களுக்கு எழுத
ஆரம்பித்து உள்ளேன்.

அகத்தியர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் முதல் படியில் கால்
வைக்கிறேன்.

கலீல் fப்ரான்(kahlil gibran)

"பெய்ரூத் நகர இளைஞர்களே
என் சல்மா கராமியின் கல்லறையைக் கடக்கும் போது
உங்கள் காலணியின் ஓசை படாமல் நடங்கள்...
அவள் அமைதியாய் உறங்கட்டும்" ("The Broken Wings)
போன்ற வரிகளால் உலகையே கவர்ந்தவர் தான் கலீல் fப்ரான்.சிதைந்த
சிறகுகளைக் கொண்டு உயரே பறந்தவர்."The Prophet" மூலம் உலகத்தையே தன் வசம்
ஈர்த்தவர்.லெபனான்-அமெரிக்க எழுத்தாளர்.

காலம் 1883--1931

தந்தை--கலீல் fப்ரான் தாயார்--கமீலா ர?மி

பிறந்த இடம்:பெசேரி(Bsharri),பாம் அல்-மிசாப்(Near Mount Fam al-Mizab,ceda
grove),லெபனான்(வடக்கு)
லெபனானில் அப்போது வாழ்ந்தவர்களைபோனிசியர்கள் என்பார்கள்...எழுத்துருக்களைக்
கண்டுபிடித்த பெருமை இந்த போனிசியரையேச் சாரும்.ஆரம்பத்தில் லெபனான் சிரியாவுடன் தான்
இணைந்திருந்தது.இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் அது தனி நாடாக மலர்ந்தது.

குடும்பம்:fப்ரானின் தாயார் தன் முதல் கணவனின் மறைவுக்குப் பின் இரண்டாவது மணம் செய்து
கொண்டார்.அவருக்குப் பிறந்த குழந்தை தான் fப்ரான் கலீல் fப்ரான்.இரண்டு
சகோதரிகள்(மரியன்னா,சுல்தானா).ஒரு அண்ணன் புட்ரோS(இவர் முதல் கணவனுக்குப்
பிறந்தவர்.....கலீலின் half-brother).

1888 ல் கலீல் முதன் முதலில் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர்
அரபு,சிரியா எழுத்துக்களைக் கற்றார்.1894 ஆம் ஆண்டு கலீலின் அண்ணன் புட்ரோS தொழிலின்
பொருட்டு குடும்பத்துடன் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச்(போSடன்) குடிபெயர்ந்தார்.அப்போது
புட்ரோS ஒரு சிறிய கடையினை நடத்தி வந்தார்.அது தான் குடும்பத்தின் ஒரே வருமானமாக இருந்து
வந்தது.கலீல் fப்ரானின் தாத்தா பெயர்fப்ரான்.அரபு வழக்கப்படி தாத்தா பெயரையே இவருக்கு
இட்டனர்.(fப்ரான் என்று..)ஆகவே இவர் பெயர் fப்ரான் கலீல் fப்ரான் (தந்தையின் பெயரையும்
சேர்த்து)...பின்னாளில் இவர் அமெரிக்கா சென்ற பிறகு தன் கையெழுத்தை கலீல் fப்ரான் என்றே
போட்டுக் கொண்டார்.

அமெரிக்கா சென்ற கலீல் 1898-1901 ல் மீண்டும் லெபனான் சென்றார்.அங்கு பெய்ரூத்
நகரில் அரேபிய மற்றும் பிரெஞ்சு இலக்கியம் படித்தார்.பின் போSடன் திரும்பினார். 1902ல்
மீண்டும் ஒருமுறை லெபனான் சென்றார்....சில நாட்களில் அவரது தங்கை சுல்தானா
காசநோய்(டி.பி.)யால் இறந்துவிட்டார் எனவே அதே வருடமே போSடன் திரும்பிவிட்டார்.1903ம்
வருடம் கலீலின் வாழ்க்கையின் மறக்க முடியாத வருடம். அவரது அண்ணன் புட்ரோS டி.பி.யிலும் அவரது
தாயார் புற்றுநோயாலும் இறந்துவிட்டனர்.கலீல் சோகத்தில் மூழ்கினார்.

தனது வாழ்க்கைப் பயணத்தை கலைப் பயணமாக மாற்றிக்கொண்ட கலீல் 1906ல் al-musiqa
என்ற இசை சம்பந்தப்பட்ட ஒரு படைப்பை நியூயார்க் நகரில் வெளியிட்டர்.பின்தொடர்ந்து தன்
படைப்புகளை உலகத்துக்கு வழங்கலானார்.

கலீல் fர்மானிய சிந்தனையாளர் பிரட்ரிக் நீட்சே ன் சிந்தனைகளால் மிகவும்
ஈர்க்கப்பட்டார்.பிரான்சு கவிஞன் அகSடி ரோடினாலும் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் ன்
வரிகளும் கலீலை மிகவும் தாக்கியவை.நீட்சேவின் "Thus Spokezarathusora" ல் வரும்
கதாநாயகனைப் போன்றே தம் படைப்பான் "The prophet" ல் உள்ள அல்முSதபா ஐப் படைத்தான்.

1960 ம் வருடம் அமெரிக்கத் தலைவர் fன் எப் கென்னடி சொன்ன
"Ask not what your country
can do for u
But ask what u
can do for your country"

என்ற வாசகங்கள் கலீல் fப்ரானின் "The Newfrontier" என்ற
கட்டுரைத்தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவையே.இதோ அந்த வாசகங்கள்
"Are you a politician asking what your country can do for you or a
zealous one asking what you can do for your country? If you are the
first, then you are a parasite; if the second, then you are an oasis in
a desert. Are you a merchant utilizing the need of society for the
necessities of life, for monopoly and exorbitant profit? Or a sincere,
hard-working and diligent man facilitating the exchange between the
weaver and the farmer? Are you charging a reasonable profit as a
middleman between supply and demand? If you are the first; then you are
a criminal whether you live in a palace or a prison. If you are the
second, then you are a charitable man whether you are thanked or
denounced by the people."

கலீல் சிறந்த ஓவியரும் கூட...அவருடைய ஓவியங்கள் இன்றும் Fogg
Museum(Cambridge) ல் உள்ளன.1919ல் அவரது சிறந்த இருபது ஓவியங்கள் நியூயார்க் நகரில்
வெளியிடப்பட்டது.சிற்பக்கலையிலும் இவர் தேர்ச்சி பெற்றவராகவே விளங்கினார்.

கலீல் 1931 ல் நியூயார்க் ல் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில்
இறந்தார்.மருத்துவர்கள் இவரது நுரையீரல் காச நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக
சொன்னார்கள்..காசநோய் கலீலின் குடும்பத்தையே சீரழித்துவிட்டது.அவரது உடல் லெபனானுக்கு
எடுத்துச் செல்லப்பட்டு அவரது ஊரிலே புதைக்கப்பட்டது.அவர் சமாதியில் "Here lies our Prophet
Gibran" என்று எழுதப்பட்டிருந்தது.பின்னர் அது "Here lies among us Gibran" என்று
மாற்றப்பட்டது.

கலீல் தன் வாழ்நாளில் 1.The prophet(மனிதனுக்கும் மனிதனுக்குமிடையேயான உறவைப்
பற்றிச் சொல்வது) 2.The Garden of the Prophet(இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான
உறவைப் பற்றிச் சொல்வது) The Death of the Prophet(மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான
உறவைப் பற்றிச் சொல்வது) ஆகிய மூன்று புத்தகங்களையும் எழுதி முடிக்க வேண்டும் என முடிவு
செய்திருந்தார்...ஆனால் அவர் "The prophet" மட்டுமே முழுமையாக எழுத முடிந்தது.The Garden
of the Prophet பாதியை அவர் முடித்திருந்தார்..மீதியை மற்றொரு பேனா தொடர்ந்து எழுதி
முடித்து வெளியிட்டது.

கலீலின் படைப்புகளில் "The prophet" தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது.அதில்
அவர் "அல்முSதபா" என்ற பாத்திரத்தின் மூலம் வாழ்வியல் கருத்துகளை உலகுக்கு சொல்லியுள்ளார்.இதில்
26 கட்டுரைகள் கவிதை நடையில் அமைந்துஉள்ளன.இது 20க்கும் மேற்பட்ட மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டது.இது ஒரு மதகுருவின் பயணம் குறித்தது.ஒரு மதகுரு 12 வருட வெளிநாட்டு
அனுபவத்திற்கு பின் கப்பலில் வீடு திரும்பும் போது பல்வேறு வகையான மக்களைச் சந்தித்து
வாழ்க்கையின் தத்துவங்களைக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

கலீலின் "The Broken Wings" கதைச்சுருக்கத்தை(ஆங்கிலத்தில்) விரைவில்
அகத்திய்த்தில் எதிர்பார்க்கலாம்.

"The Prophet" ஐக் கீழ்கண்ட வலைத் தளத்தில் அகத்தியர்கள் படித்து மகிழலாம்.
http://www.library.cornell.edu/colldev/mideast/propht.htm#Coming

Selected works of kahlil:

ARA'IS AL MURUDJ, 1906
STONEFOLDS, 1907
ON THE THRESHOLD, 1907
AL-ARWAH AL-MUTAMARRIDA, 1908
DAILY BREAD, 1910
FIRES, 1912
AL-AJNIHA AL-MUTAKASSIRAH [The broken wings], 1912
DAM'AH WA-IBTISAMAH [A Tear and a Smile], 1914
THE MADMAN, 1918
AL-MAWAKIB [The Procession], 1919
THE FORERUNNER, 1920
SPIRITS REBELLIOUS, 1920
THE PROPHET, 1923
SAND AND FOAM, 1926
JESUS, THE SON OF MAN, 1928
THE EARTH GODS, 1931
GARDEN OF THE PROPHET, 1933
THE DEATH OF THE PROPHET, 1933
TEARS AND LAUGHTER, 1947
NYMPHS OF THE VALLEY, 1948

(மேற்கண்டவற்றில் ஏதேனும் திருத்தங்களோ,சேர்க்கைகளோ தேவைப்பட்டால் எனது மின்னஞ்சலுக்கு
கருத்துகளை அனுப்புங்கள்.)

அன்புடன்,
கேஆர்வி

பெங்களூர்.