From poo@... Fri Nov 30 18:20:45 2001
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 02:20:44 -0000
Received: (qmail 58949 invoked from network); 1 Dec 2001 02:20:44 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 02:20:44 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 02:20:45 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 1 Dec 2001 05:17:34 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.53.45]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 1 Dec 2001 05:19:51 +0300
Message-Id: <4.3.0.20011130150430.00ced280@...>
X-Sender: poo/202.54.6.1@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Fri, 30 Nov 2001 15:16:28 +0300
To: tamil-ulagam@yahoogroups.com,tamil@...,agathiyar@yahoogroups.com
Subject: uRavukaL - 3
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 13577

அன்பிற்குரிய இணையத்தாருக்கு,

முடிவாக மூன்றாவது பகுதிக்கு வருவோம்.

இனி அய்யன் என்ற சொல்லே யகரம்>ஞகரம்> நகரம் என்ற போலியில் அய்யன்>அய்ஞன்>அய்நன் என்று ஆகும்.
அய்நன் மேலும் திரிந்து அய்ணன்>அண்ணன் என்று ஆகும்.

இதே போல அய்யை>அய்ஞை>அய்ங்ஙை>அங்ஙை>அங்கை>அக்கை என்று விரியும். இன்னொரு விதமாக
அய்யை>அய்ஞை>அய்நை>அந்நை>அன்னை என்றும் விரியும்.

அங்கை என்பது முதலில் தாய்க்கும் பின் அக்கைக்கும் வந்த பெயர்கள். இதன் காரணமாகவே மகன் என்பதற்கும்
அங்கன், அங்கயன், அங்கசன் என்ற பெயர்கள்ஏற்பட்டன. அங்கப் பால் என்பது தாயின் முலைப் பால்; அங்க மணி
என்பது மகளுக்குக் கொடுக்கும் சீர்ப் பொருள். அங்கலி = முலை; அங்கிகை = முலையை மூடிப் பெண்கள் அணியும்
கச்சு; (இந்தக் காலத்தில் இரவிக்கை). ஆண் மார்பை மூடி அணியும் உடைக்கு அங்கி என்று
பெயர். அங்கலிங்கம் = வீர சிவ நெறியினர் மார்பில் அணியும் இலிங்கம். அங்காரகம் என்றால்
உடம்பின் மேலே பூசும் வாசனைப் பொருள்.அங்காரகன் = உடம்பின் மேல் செவ்வண்ணம் பூசிக் கொண்ட
செவ்வாய்க் கோள். அங்கனை என்றாலே பெண் என்றுதான் பொருள். அங்கியம்>அங்கிசம் என்பது தாய்வழி வரும்
மரபு, பாகம். (கன்னன் - கர்ணன் - தாய்வழி மட்டுமே அறிந்தவன். (ராதேயன் அல்லவா;பின்னாளில்
குந்தேயனாகச் சொல்ல முடியாது இருந்தானே?) அவனுக்காகவே காட்டை அழித்து துரியன் உருவாக்கிய நாடு
அங்க நாடு.

அங்கை, தாயாக இருந்தால் தான் மேலே கூறிய பொருள்கள் எல்லாம் ஒருங்கு இருக்கும்.

அங்காத்தல் = வாய் இதழ்களை மேலே கொண்டு செல்லுதல். (அய் என்ற வேரோடு மேல் என்ற பொருள்
தொடர்புறுவதைக் காணலாம். அங்காத்தல்என்ற சொல்லோடு அண்ணாத்தல் என்ற இணைச் சொல்லைப் பார்த்தால்
இந்த அண்ணா என்பதற்கும் அங்கா என்பதற்கும் இருக்கும் ஒப்புமை புலப்படும்.

தாய், தந்தை, அண்ணன், அக்கை என உறவுகள் ஒரு காலத்தில் குழம்பிக் கிடந்தது கட்டுப்பாடற்ற நிலையில்
குமுகாயம் முதலில் எழுந்த நிலையைக் குறிக்கும். இது ஏதோ எகிப்திய அரச குடும்பம் மட்டும் செய்ததல்ல.
மாந்த வரலாறே குழம்பித்தான் தொடங்கியது. ஒன்றொன்றாகக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டன. முதலில்
ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறையோடுகூடக் கூடாது என்ற கட்டுப்பாடு; அடுத்து ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்
கூடக் கூடாது என்ற கட்டுப்பாடு. தந்தையின் அண்ணன், தம்பி மக்களோடு கூடக் கூடாதுஎன்ற கட்டுப்பாடு. இதே
போல தாயின் அக்கை, தங்கையின் மக்களோடு கூடக் கூடாது என்ற கட்டுப்பாடு.

இன்னும் ஒரு கட்டம் போய் மாமன் மக்கள், அத்தை மக்கள் ஆகியோரோடு கூடக் கூடாது என்ற கட்டுப்பாடு,
இந்தக் காலத்தில் மருத்துவக் காரணம் காட்டி ஒரு கருத்து வலியுறுத்தப் பட்டு வருகிறது. எங்கிருந்து எங்கே
வளர்ந்திருக்கிறோம் பாருங்கள்?

இனி அம்மாவின் உடன்பிறந்தான் அம்மாவன் ஆனான். அதை அம்மான் என்றும் மாமன் என்றும் திரித்து
வழங்குகிறோம். அத்தனின் உடன்பிறந்தாள் அத்தை ஆனாள்.

இன்னொரு செய்தி:, "அத்தன்" என்ற சொல் "அந்தன்" என்றும் திரிந்திருக்க வேண்டும் என்று புலவர்
இரா.இளங்குமரன் தன் "தமிழ் வளம் - சொல் " என்ற பொத்தகத்தில் எடுத்துரைப்பார். அது மிகவும் ஏற்றுக்
கொள்ளக் கூடியதே! உணர்வு வெளிப்பாட்டில் எழும் விளிச் சொல் எல்லாமே உறவு அடிப்படையிலேயே
எழுகின்றன, "அம்மாடியோ, அய்யோ, அச்சோ, அன்னோ, ஆத்தோ,அக்கக்கோ, அண்ணாவோ" என்றெல்லாம்
எழும் போது இந்த "அந்தோ" என்ற சொல் யாரைக் குறிக்க முடியும் என்று ஊகித்துப் பார்த்தால் இது அந்தை
என்ற சொல்லைத்தானே குறிக்க முடியும் என்று புரியும். இதற்கு அணையாக சாத்தந்தை, கொற்றந்தை,
கீரந்தை, எயினந்தை, ஆந்தை, பூந்தை என்ற சங்க காலப் புலவர்களின் பெயரை எடுத்துக் கூறி அவற்றைத்
தந்தையில் புணர்த்திப் பெறுவதைக் காட்டிலும் அந்தையில் இருந்து பெறுவது மிக எளிது என்று இளங்குமரன் நிறுவுவார்.

இனி தம் என்னும் தன்மைப் பொருளோடு சேர்ந்து இந்த உறவுகள் புதுவடிவம் கொள்ளும்

தம் + ஆய் > தம்மாய்> தவ்வாய்>தவ்வை (மகர,வகரப் போலி)>தய்யை (வகர, யகரப் போலி)>தாய்
தம் + அப்பன்> தமப்பன் > தகப்பன்
தம் + அந்தை தம்மந்தை>தவ்வந்தை>தய்யந்தை>தய்ந்தை>தந்தை
தம்+ அய்யன் >தமய்யன்>தமையன்
தம் + அக்கை >தமக்கை
தம்+ அங்கை > தமங்கை>தவங்கை>தய்ங்கை>தங்கை

நம் + அங்கை >நங்கை = மங்கை (நகர, மகரப் போலி; நுப்பது - முப்பது, நுனி - முனி என்ற
போலிகளை நோக்குங்கள்)

தம்+பின் >தம்பின்>தம்பி
நம்+பின்> நம்பின்>நம்பி

அம்மாவை ஒட்டி அம்மாவன் வந்தது போல, அ(ய்)த்தையை ஒட்டி வந்த சொல் அ(ய்)த்தையன். பின்னளில் அது
அய்த்தான்>அத்தான் என்றாயிற்று.

சிற்றப்பன், பெரியப்பன், சின்னம்மா, பெரியம்மா போன்றவை எழுந்த காரணம் வெள்ளிடை மலை

கொண்டவன் கொழுநன். கொள்ளுதல் கொழுதல் ஆகும். கொழுநவன் கணவன் ஆனான்.
மனையாள், இல்லாள் - நான் சொல்ல வேண்டாம்.
கொழுநனின் உடன்பிறந்தான் கொழுந்தன்
கொழுநனின் உடன்பிறந்தாள் கொழுந்தியாள்

புகுந்த இடத்தில் பெண்ணுக்குத் துணை ஆத்துணையாள் (ஆம் = அகம்)>ஞாத்துணையாள்>நாத்துணையாள்>நாத்துணாள்
(இன்னும் மச்சினன்/மைத்துனன் என்ற சொல்லை நான் ஆய்வு செய்யவில்லை)

கூட்டுக் குடும்பத்த்தலைவன் முது கிழமாகப்போன பின்னால் அவன் பட்டவன் ஆகிறான். பட்டமரம், பட்டறிவு,
பட்டுக்கிடப்பான் என்ற சொல்லாட்சிகளைப் பார்த்தால், பட்டவன் பாட்டன் ஆன கதை புலப்படும்.

தந்தை தாதையாகி அவன் தாதை தாத்தன் ஆகிறான்.

பாட்டனின் தந்தை பூட்டன். எதுகையில் வந்த சொல். பூட்டு என்பது ஒருவகை பிணிப்பு; மேலும் பொருத்திக்
கூறுதல். இங்கு உறவுப் பிணிப்பைக் குறிக்கிறதோ, என்னவோ?

அவனுக்கும் தந்தை நம் அறிவுக்குப் புலப்படாமல் சேய்மையில் இருப்பதால் அவன் சேயோன்.

மாவின் வாரிசு மான் (பெருமான்), மாள் (வேண்மாள்) பின் மேலே சொன்னது போல அவை மகன், மகள்
என்று ஒலித்திரிவு கொண்டன. நெடில் குறில் ஆகிச் சில பொழுது ககரத்தை உடன் கொண்டுவருவது
தமிழர்களின் இயற்கை. வேங்கடவன் இன்றையத் தமிழர் வாயில் வெங்கடன் என்றும் பலுக்கப் படுகிறானே;
கோடைக் கானல் கொடைக் கானல் ஆகிறதே! (இதை வேங்கடம், கோடை என்று பலுத்தால் சிறப்பாக இருக்கும்
என்பது இன்னொரு விழைவு.)

மகன், மகள் வழிப் பெருகுகிற மக்கள் சொத்தின் வெளிப்பாடாக பாட்டனின் பெயரைக் கொண்டு பெயரன்,
பெயர்த்தி ஆயினர்.

நம் சொத்துக்கு உரிமையானவன் கொள்ளுப் பெயரன். கொள்ளுதல் = உரிமை கொண்டாடுதல். இதே பொருளில்
தலைகீழாக பூட்டன் கொள்ளுப் பாட்டன் ஆனான். அதாவது அவன் சொத்துக்கு நாம் உரிமை கொண்டாடுகிறோம்.

எள்ளுப் பெயரன். அவன் நான்கு தலைமுறை தள்ளிப் போகும் போது அவனுக்குச் சொத்து எள்ளளவு கிடைத்தாலே
வியப்புத்தான். அவன் அவ்வளவு தள்ளியவன். இருந்தாலும் பெயரன். இதே போலத்தான் சேயோன் எள்ளுப் பாட்டன்
ஆகிறான்.

எல்லாமே சொத்துத் தாங்க!

ஆக

சேயோன்
பூட்டன்
பாட்டன்
தந்தை
மகன்
பெயரன்
கொள்ளுப் பெயரன்
எள்ளுப் பெயரன்

என எட்டுத் தலைமுறைகளுக்கு உறவுகள் நீளும். அதனால் தான் செல்வம் கூடியவனைப் பார்த்து, "அவனுக்கு இருக்கிற
சொத்துக்கு எட்டுத் தலைமுறைக்கு வரும் அப்பா" என்று சொல்லுகிறோம்.

பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளில் ஒருவரான ஃபிரடரிக் ஏஞ்சல்சு" குடும்பம், தனிச் சொத்து,
அரசு அகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் "தமிழர்கள் தங்களின் எட்டுத் தலைமுறை உறவுகளை குழப்பம்
இல்லாமல் விவரிக்க முடியும் நிலையில்இருக்கிறார்கள்" என்றும், "இது போல வேறு யாரும் செய்வதில்லை"
என்றும் வியந்து கூறுவார்.

இந்தத் தெளிவு ஏற்படப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதனால் தான், குமரிக் கண்டத்தையும்,
பஃறுளி ஆற்றையும் இருந்திருக்க வேண்டும்என்று நம்புகிறோம். வாழ்ந்து அழிந்த இனம் தான் இப்படி உறவுகளை
வகைப் படுத்த முடியும்.

"அவர் யாருன்னு கேக்குறீங்களா? அவர் என் சின்ன மாமனார் கொழுந்தியாவுக்கு அண்ணன் மருமகன்" இது
நமக்கு எளிது. ஆங்கிலத்தில் சொல்லிப் பாருங்களேன்?

நண்பர் ஒருவர் கேட்டார்:" உங்க அப்பாவுக்கு நீங்க எத்தனாவது மகன்?" ஆங்கிலத்தில் இதைச் சுற்றி
வளைத்துத் தான் கூறமுடியும். இதுபோல ஒவ்வொரு மொழியும் பண்பாடும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டவை.
ஒன்றில் இருந்து ஒன்றை உருமாற்றுவது என்பது கிட்டத்தட்டத்தான் முடியும்.

அப்ப வரட்டுங்களா!

அன்புடன்,
இராம.கி.