From ramasamis@... Fri Nov 30 22:57:48 2001
Return-Path: X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 06:57:46 -0000
Received: (qmail 41320 invoked from network); 1 Dec 2001 06:57:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 06:57:45 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.84) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 06:57:47 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 30 Nov 2001 22:57:47 -0800
Received: from 66.87.104.223 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Sat, 01 Dec 2001 06:57:47 GMT
X-Originating-IP: [66.87.104.223]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] George Harrison - one more Beatle is gone
Date: Sat, 01 Dec 2001 00:57:47 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 01 Dec 2001 06:57:47.0906 (UTC) FILETIME=[7C392620:01C17A35]
From: "Ramasami Subbaier" X-Yahoo-Profile: subbaierramasami
X-Yahoo-Message-Num: 13581
dear murugan,
now the time is 1 o'clock in the night. I have done the translation half
awake.
நமக்குமுன், மாயை யின்பின்
நகர்ந்திடும் மனிதர் கூட்டம்
தமையெலாம் பேசிப் பேசித்
தள்ளினோம்,உண்மை காணோம்
அமைந்ததைக் காணு முன்னே
அவர்களும் மறைந்து போவார்
சுமந்திடத் தேவை யில்லை
சொந்தமாய் அன்பைக் கொண்டால்.
பகிர்ந்திடும் அன்பு பற்றிப்
பலப்பல பேசி விட்டோம்
உகந்ததைப் பற்றி விட்டால்
உலகையே காக்கக் கூடும்
அகத்திலே இருப்ப தன்பு
அதனை நீ உணர வேண்டும்
இகத்திலே உன்னை மாற்ற
இலைவேறு நின்னை யன்றி!
சிறிதினும் சிறியன் என்றே
தெரிந்துஇகொள், இந்த வாழ்வை
அறிந்துகொள், அஃதுன் னுள்ளும்
அடுத்துனை விடுத்தும் ஓடும்
நிறைவுள அன்பை விட்டு
நீநிலம் வெற்றி கொண்டு
துறைகொளும் ஆன்மா தன்னைத்
தொலைத்தவர் என்ன கண்டார்?
தன்னையே காணா அந்தச்
சழக்கருள் ஒருவனாநீ?
உன்னிலும் உயர்ந்து பார்நீ
உண்மையில் சாந்தி கிட்டும்
ஒன்றிடும் அன்பால் யாரும்
ஒன்றெனும் எண்ணம் சேரும்
அன்பனே உன்றன் வாழ்க்கை
அகத்துளும்,புறத்தும் ஓடும்!
_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp