From cbose@... Sat Dec 01 10:05:10 2001
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 18:05:10 -0000
Received: (qmail 36760 invoked from network); 1 Dec 2001 18:05:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 18:05:09 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 18:05:09 -0000
Received: from vsnl (unknown [203.199.242.86]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 64CE1CE3E; Sat, 1 Dec 2001 23:38:29 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011201232406.00845cb0@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 01 Dec 2001 23:24:06 +0500
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Subject: paavaanaar books
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 13606

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு,

வணக்கம். இன்று மாலை 5.-30 தொடங்கி இரவு 10 மணி வரை பாவாணர் நூல் வெளியீட்டு விழா இனிதே
நடைபெற்றது. விழா முடிந்து நண்பர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வந்து இரவு இல்லத்தில் வந்து இந்த
அஞ்சலை எழுதுகின்றேன். ஒரே நேரத்தில் 30 நூல்களை வெளியிடுவது என்பது எவ்வளவு பெரிய செயல் என்பது
அங்கு வந்து உரையாற்றிய மிகப் பெரிய பதிப்பகத்தார் பேசும்போதுதான் தெரியவந்தது. தமிழ் மொழி
வரலாற்றில் இந்த பதிப்புகள் நிச்சயமாய் ஒரு திருப்புமுனைதான். தமிழை தமிழனுக்காக அவன் மொழி
குறித்து அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் செயல்பட்டு வறுமையில் வாடி இறந்தவர்
பாவாணர். அவரின் நூற்றாண்டில் இன்று அவரின் நூல்கள் அரசுடையாக்கப்பட்டு எந்த வித லாப நோக்கமின்றி
தமிழ் மொழிக் காவலர் ஒருவரால் வெளியிடப்படுவது அவருக்கு செலுத்தும் அஞ்சலி. தமிழ் உலகின்
சந்ததிகளுக்கு ஒரு வழி காட்டும் விளக்கு.

அமைச்சர்கள் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், சட்ட மன்ற தலைவர் காளிமுத்து ஆகியோரின்
உரைகள் மிக அருமையாய் இருந்தன. வழக்கம்போல் சங்கத்திலிருந்தும் பாவாணர் நூல்களில் இருந்தும் மடை
திறந்த வெள்ளமாய் எடுத்துக் காட்டுக்களை அள்ளி வீசி அவையோரின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்
காளிமுத்து. பேசுதல் என்ற சொல்லுக்கு அவர் தமிழில் கூறிய 42 சொற்களின் பட்டியல் எடுக்க முயன்று
இயலவில்லை. ஒலி நாடாவில் பதிவு செய்திருக்கிறோம்.

நூல் தொகுதி கேட்டவர்களுக்கெல்லாம் இனி அனுப்பலாம். நான் என் பெயரில் 15 தொகுதிகளை எடுத்து வந்து
விட்டேன். நண்பர்கள் எனக்கு பணம் அனுப்பினால் உடனே இங்கு யாரிடம் சேர்க்க வேண்டுமோ சேர்த்துவிடலாம்.
அல்லது அனுப்ப நடவடிக்கை எடுக்கலாம்.

முதலில் அறிவிக்கப்பட்டது 30 நூல்களே. இருப்பினும் இன்னும் ஐந்து நூல்களையும் சேர்த்து அளித்துவிடலாம் என
பதிப்பாளர் இளவழகன் மனமுவந்து முன் வந்தார். அதில் இன்னும் இரண்டு அச்சிடப்பட்டும் உருப்படாநிலையில்
உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவையும் கிடைத்துவிடும்.

ஒவ்வொரு நூல் குறித்தும் ஒரு சிறிய குறிப்பை நாளை முதல் எழுதலாம் என்று இருக்கிறேன்.


மிக்க அன்புடன்,
பெ.சந்திர போஸ்
சென்னை