From kisna@... Sat Dec 01 19:46:18 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Dec 2001 03:46:19 -0000
Received: (qmail 45729 invoked from network); 2 Dec 2001 03:46:18 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 2 Dec 2001 03:46:18 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Dec 2001 03:46:17 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by sombre.pacific.net.sg with ESMTP id fB23jlK15907; Sun, 2 Dec 2001 11:45:47 +0800
Received: from kisna (mcns124.docsis25.singa.pore.net [202.156.25.124]) by smtp1.pacific.net.sg with SMTP id fB23jlc20443; Sun, 2 Dec 2001 11:45:47 +0800
Message-Id: <3.0.6.32.20011202114401.007a6bc0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 02 Dec 2001 11:44:01 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 19
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 13622
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் #19.
-------------------------------------
ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் ( 1882 - 1954)
=========================================
'ரசிகமணி' என்ற பட்டம் டி.கே. சிதம்ப்ரநாத முதலியார் த்மிழ் இலக்கியத்தைச்
சுவைத்துப் படித்ததோடன்றித் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென்ற
வகையில் பாநலத்தை விளக்கும் நாநலம் பெற்று விளங்கினார். பாட்டாவது
சொல்லன்று; எழுதன்று;யாப்பன்று; அஃது அநுவநுகர்ச்சி. இது டி.கே.சி யின்
கருத்து. கம்பனின் கவி நயத்தில் மூழ்கித்திளைத்த இவர் கம்பராமாயணத்தைப்
புதிய முறையில் பதிப்பித்துள்ளார்.
'... ஒரு கதை, புராதனமான கதைதான். கம்பர் ஒரு ஊருக்குப் போயிருந்தார்.
ஒரு பிரபுவுடன் தங்கியிருந்தார். சாயங்காலம் ஆனதும், 'யாரோ ஒரு புலவர் கோயில்'யில்
கம்பராமாயணப் பிரசங்கம் செய்கிறார்கள். நாமும் போய்க் கேட்டு வரலாமே
என்றார் பிரபு. இருவரும் பிரசங்கத்திற்கு முன் உட்கார்ந்து இருந்தனர்.பிரசங்கம்
முடிந்தது. பிரசங்கியிடம் கம்பர் இன்னார் என்று பிரபு அறிமுகப்படுத்தினார்.
பிரசங்கிக்கு அளவில்லாத சந்தோஷம்உண்டாகி, ' அடடா! பாடல்கள்
எல்லாம் எவ்வளவு அருமை! தங்களைக் கவிச்சக்ரவர்த்தி என்று சொல்லாமல்
வேறு என்ன சொல்லுகிறது.?' என்று கமபரைப் பார்த்து வியந்த வண்ணமாய்ச்
சொன்னார். ஆனால் கம்பரோ, ' தாங்கள் வாசித்த இராமாயணத்தில்
என்னுடைய ஒன்றிரண்டு சேர்ந்திருக்கிறது போலத் தெரிகிறது' என்று அமையாய்
சொல்லி நிறுத்தினார்.'
(- கம்பர் யார் ?)