From naga ganesan@... Sun Dec 02 06:45:51 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Dec 2001 14:45:51 -0000
Received: (qmail 69645 invoked from network); 2 Dec 2001 14:45:51 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 2 Dec 2001 14:45:51 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Dec 2001 14:45:51 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.100] by n27.groups.yahoo.com with NNFMP; 02 Dec 2001 14:45:50 -0000
Date: Sun, 02 Dec 2001 14:45:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Kedaram/Mahawangsa: Where Hinduism Fell to Islam?
Message-ID: <9udequ+e0j0@eGroups.com>
In-Reply-To: <20011202021031.69042.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5100
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.27.87
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13636

--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
>
> What could have been the reasons behind this? I till
> now thought a language evolves and the necessity to
> develop one may not exist.
>
> Did our ancestors think that the languages of those
> days - Thamizh and the vedic language were inadequate
> in any manner, to serve as the vehicle for
> communication and progress - individual and social?
>
> If so, was not enriching them a simpler solution than
> reinventing the wheel?
>
> Or, is it that the society so evolved to have
> different strata and those who came to occupy the
> highest level, thought that it is a must for them to
> have the language as the differenciator - to establish
> their supremacy over the masses and to have the
> language as the weapon for social oppression?
>
> Rgds,
> EraMurukan

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு. 1700-கி. பி. 1200க்குள்ளே
இருத்தல் வேண்டும் என்று உலகின் தலைசிறந்த வேதவியல் நிபுணர்கள்
கணிக்கிறார்கள். காரணம், மத்திய ஆசியாவில்தான் முதலில்
குதிரைச் சாரட்டுகள்(sintashta chariots) கிடைக்கின்றன (கி. மு. 2000).
இரும்பு இந்தியாவில் முதலில் 1200 கி.மு. வாக்கில் கிடைக்கிறது.
ருக்குவேதம் 100க்கு 98 விழுக்காடு ஒரு செம்புக்கால நாகரிக நூல்
(RV is a bronze age text, mostly).

சிந்து முத்திரைகளைப் பார்த்தால் குதிரையே காணோம். மேலும்
மடிவைத்த மாடே இல்லை. காளைகளையும், எருதுகளையும்
மட்டிலும் பார்க்கலாம். இருக்குவேதம் மாறாக, குதிரை சாரட்டுகளை
வெகுவாகச் சிலாகித்துப் பேசும். பசுமாடுகள் பாராட்டப்படுகின்றன.
ஆனால், சில நூற்றாண்டுக்குப் பின்னர், நந்தி வாகனம் இந்துசமயத்துக்கு
பிரதானமாகிறது. சரசுவதி நதி என்று ருக்குவேதம் சொல்லும் நதி
வறண்ட காலம் 1800-1700 கி.மு. அதன் பழைய பெயர் நாம் அறியோம்.
அது வைசம்பாள்ய என்று வேதத்தில் குறிப்பு இருக்கிறது.
இது விசும்பாள் (விசும்பு = வானம்) என்பதா? என்று சங்கிருத
அறிஞர்களைக் கேட்டிருந்தேன். (உ-ம்: வானி என்று கொங்குநாட்டு
நதி பின்னாளில் பவானி என்றானது.) இன்றும் சரசுவதி பூமியிலிருந்து
வெளிப்படும் ஊர் பவானிபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஒப்புநோக்குக: வானி ஆறு; விசும்பாள் ஆறு.
http://listserv2.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9911&L=indology&P=R1237
பவானிபுரம் பற்றி:
http://listserv2.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9910&L=indology&P=R5751

வேதத்தின் காலம் பற்றி, பேரா. மைக்கேல் விட்சல் (ஹார்வர்ட் யூனிவெர்சிட்டி):
(நான் அவருடன் வாதம்செய்தபோது)
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9912&L=indology&P=R2

பின்னாளில், நானும் சிலரும் காட்டிய காரணங்களால் வேதகாலக்
கணக்கீட்டை முன்னுக்குக் கொண்டுவந்ததைப் பார்க்கச் சுட்டி:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0011&L=indology&P=R5692

எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் வாழ்ந்த இடங்களில் (இப்போது பாகித்தான்)
வேத மொழி பேசப்பட்டது. அது திரவிட மொழிக் குடும்பங்களோடு
கலந்துபட, சங்கிருதம் தோன்றியது. இதனால் தான் நாம் சங்கிருத
இலக்கணத்திலும், வாக்கிய அமைப்பிலும், நாக்கை மடித்துச் சொல்லும்
ள, ழ, ண, ட எழுத்துக்களிலும் தமிழின் தாக்கத்தை இந்தியா முழுக்க
எல்லா மொழிகளிலும் காண்கிறோம். கி.பி. நூற்றாண்டுகள்
ஏறிச்செல்லச் செல்ல, தமிழ் கடனாகத் தரும் வார்த்தைகள்
சமற்கிருதத்தில் மிகுகின்றன. தமிழும் வடமொழியில் இருந்து வளம் பெறுகிறது.
(Please see my next message. The retroflex consonants
map in all Indian languages is given as a map by
Dr. Bertil Tikkanen, Univ. of Helsinki. The map can be
downloaded, and it clearly shows Tamil as a descendent
of the Indus valley high-culture language).

முதலில் பிராகிருத மொழியிலேயே நமக்கு இந்தியாவில் கல்வெட்டுகள்
கிடைக்கின்றன. அசோகன் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு.
ருத்ரதாமன் என்னும் சத்ராப்தான் முதலில் வடமொழிக் கல்வெட்டுகளை
வெளியிடுகிறான். ஈது, பிராமணர்களை ஊர் ஊருக்கு வைத்து
நாட்டை ஆள அவன் கண்டறிந்த வழி. குப்தர் காலத்தில்
சமஸ்கிருதம் கோலோச்சுகிறது. பல இகுழுக்கள், மொழிகள் உள்ள
பிரதேசங்களை இணைக்க பிராமணர்கள் ஒரு கருவியாக
வடநாட்டு மன்னர்களுக்கு உபயோகமாயினர்.

இந்த உத்தியை தமக்கு சாதகமாக்கத் தமிழ் நாட்டு மன்னர்களிடையே
போட்டாபோட்டி. இதை பிற்சங்க நூல்களில் காண்க.
ராசசூயம் வேட்டனர், பல்யாகம் வேட்ட முதுகுடுமிப் பெருவழுதி
ஆண்டான். நாட்டை ஒருங்கு சேர்க்கவும், தம் புகழ் பாடவும்,
இந்திய நாடு தழீய பெரும்பண்பாட்டைக் கிராமங்களுக்கும்
புதிதாகக் குடிபுகும் இநிலங்களுக்குக் கொண்டுசெல்லவும்
சமற்கிருதம் அது அறிந்தோரும் மிகவும் இந்திய நாட்டு மன்னருக்குப்
பயன்பட்டனர். இல்லையென்றால்? சிறு சிறு பகுதிக்கு ஆளுமை
பாராட்டும் சிற்றரசர்கள். பல குலங்கள். அதன் தலைவர்கள்.
குட்டித் தலைகளிடை எப்போதும் சண்டை, சச்சரவு.
இதனால் பேரரசு உருவாக, தான் பிடித்த நாடுகளை இணைக்க
சமற்கிருதம் பெரிய அரசர்களுக்குப் பயன்பட்டது.

அன்புடன்,
நா. கணேசன்