From naga ganesan@... Sun Dec 02 06:57:36 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Dec 2001 14:57:36 -0000
Received: (qmail 58710 invoked from network); 2 Dec 2001 14:57:36 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 2 Dec 2001 14:57:36 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Dec 2001 14:57:36 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.4.66] by n1.groups.yahoo.com with NNFMP; 02 Dec 2001 14:57:35 -0000
Date: Sun, 02 Dec 2001 14:57:32 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Kedaram/Mahawangsa: Where Hinduism Fell to Islam?
Message-ID: <9udfgs+li8l@eGroups.com>
In-Reply-To: <9udequ+e0j0@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1777
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.27.87
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13638

--- In agathiyar@y..., naga_ganesan@h... wrote:
> முதலில் பிராகிருத மொழியிலேயே நமக்கு இந்தியாவில் கல்வெட்டுகள்
> கிடைக்கின்றன. அசோகன் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு.
> ருத்ரதாமன் என்னும் சத்ராப்தான் முதலில் வடமொழிக் கல்வெட்டுகளை
> வெளியிடுகிறான். ஈது, பிராமணர்களை ஊர் ஊருக்கு வைத்து
> நாட்டை ஆள அவன் கண்டறிந்த வழி. குப்தர் காலத்தில்
> சமஸ்கிருதம் கோலோச்சுகிறது. பல இகுழுக்கள், மொழிகள் உள்ள
> பிரதேசங்களை இணைக்க பிராமணர்கள் ஒரு கருவியாக
> வடநாட்டு மன்னர்களுக்கு உபயோகமாயினர்.
>

ருத்ரதாமனின் காலம் கி.பி. 150 (சொல்ல மறந்துவிட்டேன். மன்னிக்க).

பாரதத்தில் இருக்கும் சான்றுகளுக்குப் புறம்பாக, ஆரியர்
இந்தியாவில் தோன்றி உலகம் முழுக்கப் பரவினர் என்று
பல சஞ்சிகைகள் திட்டமிட்டுப் பரப்பிவருகின்றன.
அவை எவ்வாறு உண்மை ஆகா என்று ஹார்வர்ட் பல்கலைப் பேரா.
மைக்கேல் விட்ஸல் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரை:
(PDF document, 93 pages).

http://nautilus.shore.net/~india/ejvs/ejvs0703/ejvs0703article.pdf


> இந்த உத்தியை தமக்கு சாதகமாக்கத் தமிழ் நாட்டு மன்னர்களிடையே
> போட்டாபோட்டி. இதை பிற்சங்க நூல்களில் காண்க.
> ராசசூயம் வேட்டனர், பல்யாகம் வேட்ட முதுகுடுமிப் பெருவழுதி
> ஆண்டான். நாட்டை ஒருங்கு சேர்க்கவும், தம் புகழ் பாடவும்,
> இந்திய நாடு தழீய பெரும்பண்பாட்டைக் கிராமங்களுக்கும்
> புதிதாகக் குடிபுகும் இநிலங்களுக்குக் கொண்டுசெல்லவும்
> சமற்கிருதம் அது அறிந்தோரும் மிகவும் இந்திய நாட்டு மன்னருக்குப்
> பயன்பட்டனர். இல்லையென்றால்? சிறு சிறு பகுதிக்கு ஆளுமை
> பாராட்டும் சிற்றரசர்கள். பல குலங்கள். அதன் தலைவர்கள்.
> குட்டித் தலைகளிடை எப்போதும் சண்டை, சச்சரவு.
> இதனால் பேரரசு உருவாக, தான் பிடித்த நாடுகளை இணைக்க
> சமற்கிருதம் பெரிய அரசர்களுக்குப் பயன்பட்டது.
>
> அன்புடன்,
> நா. கணேசன்