From naga ganesan@... Sun Dec 02 13:45:08 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Dec 2001 21:45:05 -0000
Received: (qmail 72230 invoked from network); 2 Dec 2001 21:45:05 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 2 Dec 2001 21:45:05 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Dec 2001 21:45:07 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.31] by n22.groups.yahoo.com with NNFMP; 02 Dec 2001 21:45:07 -0000
Date: Sun, 02 Dec 2001 21:45:03 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Ramblings and rumblings
Message-ID: <9ue7cv+i8aj@eGroups.com>
In-Reply-To: <4.3.0.20011202230649.00cf44a0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2429
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.25.41
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13645
--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
> > > சில் என்றால் தமிழில் சிறுஇ என்றே அர்த்தம். சில்லென்று பூத்த
> > > =
> >சிறிதாய்ப் பூத்த. சில்லி = சிறியது (இது cell, computer chip
> > > இரண்டுக்கும்
> >பொருந்தும்).
>
> அன்பிற்குரிய கணேசனுக்கு,
>
> "சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே" என்று தொடங்கும் கவியரசர்
கண்ணதாசன் பாட்டு
> "மாலையிட்ட மங்கை" படத்தில் வந்து, அந்தக் காலத்தில் பலர் மனத்தையும் கொள்ளை
கொண்ட பாட்டு.
>
> சில் என்ற சொல்லுக்கு இங்கே "சிறு" என்ற பொருள் கொள்ளுவது சரியாக அமையாது.
நெருஞ்சிப் பூ
> சிறியதாக இருப்பதைத்தான் சிறு நெருஞ்சி என்று கவியரசர் கூறிவிட்டாரே! பின் ஏன் கூறி
யது கூறல்?
>
> இங்கே சில் என்பது சில்லிக் கிடப்பது (அதாவது சிதறிக் கிடப்பது பற்றி) என்று எண்ணுகி
றேன்.
>
> சில்லுதல் என்பது துண்டாகும் வினை பற்றியது. (இந்த வினையால் சில்லுச் சில்லாக சிறு
பொருள்கள்
> கிடைப்பது இதன் உடன் பொருள்.)
>
> சிதறு தேங்காயில் கிடைப்பது தேங்காய்ச் சில்.
>
> சில்லுருதல் என்ற வினையில் இருந்துதான் சில்லரை>சில்லறை என்ற சொற்கள் பிறந்தன.
>
> சில்லாடுதலும் சிதறுவதுதான். அதனால் தான் சில்லாட்டு என்பதும் சில்லரை என்ற
பொருள் கொண்டது.
>
> இப்படி உடைந்து சேதப் பட்டுப் போனதால் தான், அரத்தம் வடியும் மூக்கு சில்லி மூக்கு (சி
ல்லிய முக்கு) என்று
> சொல்லப் படுகிறது.
>
> துண்டாக்கப் பட்ட கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி (அது அவ்வளவு சிறிதாக இருக்காது);
மொந்தைக்
> கருப்பட்டியில் இருந்து சில்லிய கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி. சாப்பிட்டிருக்கிறீர்களோ? அமி
ழ்தம் போன்றது.
>
> சில்லுச் சில்லாக (துண்டு துண்டாக)ச் சிதறுகிற தூறல் சில்வானம்.
>
> சில்லுகிற தொழிலால் பெறப்பட்ட உருவம் தான் சில்லை>சிலை. சில்லுதல் = உளி
கொண்டு கல்லை
> உடைத்தல்; துண்டாக்குதல், சிதறவைத்தல்.
>
> இன்னும் பார்த்தால், சில்லுதல் = சில்தல்>சிதல்>சிதர் = துண்டாகிய பொத்தை (body)
பரந்து படுதல்;
> சிதர்>சிதறு
>
> நெருஞ்சிப் பூ சிதறினாற்போல் பரந்து பூத்துக் கிடக்கும் காடு "சில்லென்று பூத்த சிறு
நெருஞ்சிக் காடு".
>
> எங்கள் வறண்ட, செம்மண் பரந்த, சிவகங்கை மாவட்டத்திற்கு வாருங்கள். இந்த உண்மை
புலப்படும்.
>
> அன்புடன்,
> இராம.கி.
>
அன்பு ராம. கி. அவர்களுக்கு,
நீங்கள் சொல்லும் சில் (ஒப்பு: சில்லி) என்பது துண்டு என்பது
பொருத்தம் தான். மிக்க நன்றி.
ஆனால், சில் > சிதறு - இந்த முன்வைப்புக்கு மாறுபடுகிறேன்.
செதுக்கு, செதிள், சிதல், சிதறு : தொடர்புடையனவாகத் தோன்றுகிறது.