From aysh@... Mon Dec 03 08:36:20 2001
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 3 Dec 2001 16:36:18 -0000
Received: (qmail 79260 invoked from network); 3 Dec 2001 16:36:18 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 3 Dec 2001 16:36:18 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 3 Dec 2001 16:36:18 -0000
Received: (qmail 13647 invoked from network); 3 Dec 2001 21:56:58 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.154) by 0 with SMTP; 3 Dec 2001 21:56:58 +0530
To:
Subject: RE: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வந்த வர்கள்
Date: Mon, 3 Dec 2001 22:07:45 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <3.0.6.32.20011203193928.008067c0@...>
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin"
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13658

அன்புள்ள திரு.சிங்கை கிருட்டிணன்,

பாவாணர் பற்றியோ மறைமலை அடிகள் பற்றியோ நீங்கள் சொல்வது மிகச் சரியானது தான்.

ஆனால் சுந்தரம் பிள்ளை?

ஆங்கிலத்தில் வெளியான ஒரு மூன்றாம்தரக் கதையை தமிழில் அவர் மொழிபெயர்த்த

'மனோன்மணியம்' 'நீராடும் கடலுடுத்த' வை ஒதுக்கி விட்டால் எந்த வகையில் இலக்கியம்?

தமிழின் முதல் நாடகம் அது என்று எத்தனை வருடமாக நம் தமிழாசிரியர்கள் பிள்ளைகளை

ஏமாற்றி வருகிறார்கள்!


anbudan,
EraMurukan

-----Original Message-----
From: Krishnan/ கிருஷ்ணா [mailto:kisna@...]
Sent: Monday, December 03, 2001 5:09 PM
To: tamil-ulagam@yahoogroups.com; agathiyar@yahoogroups.com;
tamil@...
Subject: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள்




தேவநேயப் பாவாணர்
````````````````````````````

உலக மொழிகட்கெல்லாம் தாயும் தந்தையுமாய் விளங்கும் தமிழ் மொழிக்கு இடுக்கன்
வரும்போதெல்லாம் அதன் இன்னல் களைந்திட, அதன் வளர்ச்சிகுத் தடையாய் இருக்கின்ற
தளைகளை நீக்கிடவும் பேராற்றல் மிக்க தமிழ் அறிஞர்கள் காலந்தோறும் தோன்றுகின்றனர்.

அவ்வாறே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் 'கம்பன்' தோன்றி கன்னித் தமிழுக்கு எருவானான்.
சென்ற இருபதாம் நூற்றாண்டில் மனோன்மணீயம் பாடிய மீனாட்சி சுந்தரனார் தோன்றி
செந்தமிழை தழைக்க செய்தார். அவரைத் தொடர்ந்து மறைமலையடிகளார் 'தனித்தமிழ் இயக்கம்'
தோற்றுவித்து செந்தமிழை அயல் மொழிகளின் கலப்பிலிருந்து காப்பாற்றினார்.
கடந்த இருபதாம் நூற்றாண்டின் இடைவெளியில் வட மொழியே உலக மொழிகட்கெல்லாம்
தாய் என்று கூறியபோது அரிமா என எழுந்து அக்கருத்தை முற்றிலும் மறுத்து
'' தமிழ் மொழியே உலக மொழிகட்கெல்லாம் தாய்;
என்று தம் வேர்ச்சொல் ஆய்வினை உலக அறிஞர்கள் முன் வைத்தார்
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

பாவாணர் நெல்லை மாவட்டத்தில் சங்கரன் நயினர் கோவில் என்ற குக்கிராமாத்தில்
1902 -ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 7-ம் நாள் பிறந்தார். ஞானமுத்து - பரிபூரணம் தம்பதிகளுக்கு
பத்தாவது பிள்ளையாக பிறந்தார்.

5 அகவை நிறைவுறும் போது தாயும் தந்தையும் இயற்கை எய்தினர். அதன் பின் தனதுமூத்த
தமக்கை ஆதரவில் 'ஆம்பூர்' என்ற கிராமத்தில் வளர்ந்தார். அங்கேயே ஆறாம் வகுப்பு வரை
கல்வி கற்றார். அதன் பின் ''யங்'' என்ற விடையூழியர் ஒருவரின் ஆதரவில் படிப்பைத் தொடர்ந்தார்.

1919 - ஆம் ஆண்டு சீயோன் மலை உயர்நிலைப் பள்ளியில் தன் 19 ஆம் அகவையில்
ஒரு தமிழ் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். தம் கல்விக்காகப் பட்ட கடனை
அடைக்கவே அச்சிறு வயதில் தொழில் மேற்கொள்ளக் காரணமாகியது.

ஆசிரியர் பணியைச் செய்துகொண்டே சென்னை பல்கலைக் கழகத்தில் மொழி
ஆய்வியல் துறையில் BA, BOL,MA,MOL போன்ற பட்டங்களைப் பெற்றார். மதுரைத் தமிழ்ச்சங்கப்
புலவர் தேர்வில் பலர் அமர்ந்தனர். இவர் ஒருவரே முதல் மாணாக்கராய்த் தேறினார்.
தேவ நேயர் பாடல்கள் இயற்றுவதிலும் மீட்டுவதிலும் வல்லவர். இவரின் 'தமிழ் இசைக் கலம்பகம்'
என்ற நூலே இவரின் இசைப் புலமைக்குச் சான்றாகும்.
ஆகவேதான் அறிஞர்கள் இவரை 'பாவாணர்' என்று அழைத்தனர்.

தேவநேயப் பாவாணர் பல உலக மொழிகளில் பயின்று, அம்மொழிகலில் புலமைக்குச் சான்றாகும்.
அவர் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, பிரெஞ்சு, ஜெர்மன்,லத்தின், ஸ்பெயின் ஹிப்புரு,ரஷ்யா,
கிரேக்கம், அரபு, மெண்டரின்,கெண்டனீஸ், ஜப்பான், உருது, துளுவு, சமஸ்கிருதம் இந்தி, மலாய்
போன்ற மொழிகளில் புலமையும், இன்னும் இந்திய பூர்வகுடிகள் பேசுகின்ற பல மொழிகளில்
பேசும் ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார். நீலகிரி மலைச்சாரலில் வாழும் 'தோடர்' என்ற
இனத்தவர் பேசும் மொழியையும் அப்பகுதிக்குச் சென்று அவர் கற்று வந்தார்.
இம்மொழிகளை எல்லாம் அவர் கற்றதற்குக் காரணம் தாம் நிறைய சம்பாதிக்க வேண்டும்
என்ற நோக்கமோ அல்லது பட்டங்களையும் புகழையும் அடைய வேண்டும் என்ற எண்ணமோ அல்ல.
தமிழ் மொழியை இம்மொழிகளோடு ஒப்பு நோக்கிடவும் மற்றும் தமிழ் மொழி எவ்வாறு இம்மொழிகளை
வளர்ச்சியடையச் செய்திருக்கிறது அல்லது அம்மொழிகள் வளர் உதவியிருக்கிறது என்பதை உலக
அரங்கில் எடுத்துரைக்கவும் வேண்டியே அவர் முனைந்து இந்த மொழிகளை எல்லாம் கற்றார்.

தன் வீட்டில் இருந்த ஏழு நிலைப் பேழைகளிலும் உலகில் வழக்கில் இருக்கும் அனைத்தும்
பெரிய மொழிகளின் அகர முதலிகளையும், பேரகாதிகளையும் வாங்கி வைத்து தமது மொழி
ஆய்வுக்குப் பயன் படுத்தி இருக்கிறார்.

மொழி ஆய்வில் நுண்மாண் நுழைபுலம் மிக்கரவாய்த் திகழ்ந்ததால் அறிஞர்கள் அவரை 'மொழி ஞாயிறு'
என்றும் அழைத்தனர்.தேவநேயர் பல் துறைகளில் ஆய்வுகளைத் செய்திருந்தாலும் அவை யாவிலும்
''வேர்ச்சொல் ஆய்வே'' முதன்மையானதாகும். தமிழ் மொழியின் ஆணி வேர்ச் சொல் என்ன
என்பதைக் காண்வே இவ்வாய்வினை அவர் மேற்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
மொழியல் துறயில் 'வேர்சொல்' ஆய்வு எனப்து முற்றிலும் புதிய துறையாகும்.

இப்புதிய ஆய்வுத் துறையை உலகில் அறிமுகம் செய்தவரே தேவநேயப்பாவாணர்தான்.
தமிழ் மொழி அயற் கலப்பில்லாது தூயமொழியாக செந்தமிழாக உலக அரங்கில் சிறப்பிடம்
பெற வேண்டும் என்றால் அதற்கு சரியான, முறையான 'அகரமுதலி' இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
தமது அரை நூற்றாண்டு கால மொழி ஆய்வுப் பட்டறிவைக் கொண்டு இதனை செப்பமாகச்
செய்து விடலாம் என நம்பினார்.ஆகவே, ' செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி'
என்னும் பேரகரமுதலி தாயாரிக்கும் முயற்சியில் தீவீரமாக முனைந்தார். தமிழக அரசு ஆதரவுடன்
பேரகரமுதலி திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று செயற்கருஞ் செயலில் இறங்கினார்.
தமது வாழ்நாள் பணிகளில் மணிமுடியாய்த் நிகழ் விருப்பது இத்திட்டமே எனப்தால் பேரகரமுதலியை
பன்னிரெண்டு மடல்களாக இயற்ற திட்டமிட்டு முதல் மடலத்தில் ' அ, ஆ, இ, ' என மூன்றுப்
பகுதிகளை மட்டுமே அவரால் நிறைவு செய்ய முடிந்தது.

பேரகரமுதலியை உருவாக்கும் காலத்தில் தமிழ்ப் பகைவராலும், போலி தமிழ்ப்
பற்றாளர்களாலும் பல இன்னலுக்குள்ளானார். ' தனக்குச் செய்யும் தீங்கு தமிழுக்கு செய்யும் தீங்காகும்'
எனப் பலமுறை அவர் எடுத்துச் சொல்லியும் தொடர்ந்து இடையூறு செய்தவண்ணமிருந்தார்கள்.
ஆயினும் பாவாணர் மனந் தளராது, தம் இறுதி மூச்சு உள்ளவரை போராடினார்.

தேவநேயப் பாவாணர் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகவும், தமிழர் இன வளர்சசிக்காவும்
செய்த சேவைகள் அளப்பரியன. இவர் தமிழ் மொழியின் ஒப்பற்ற உயர்வை தம்
ஆய்வின் முடிவில் தெரிவித்தார்.
'' உலக முதன்மொழி தமிழ்
உலக முதல் மாந்தர் தமிழன்
தமிழ் திராவிட மொழிகளுக்குக் தாய்
வட மொழிகளுக்கு மூலம்
தமிழும் தமிழனும் பிறந்தது குமரிக் கண்டத்தில்
குமரிக் கண்டமே உலகின் தோன்றுவாய்
எனப்து அரவது ஆய்வின் முடிவு ஆகும்.

இக்கருத்தை உலக அறிஞர்கள் முன் துணிந்து வைத்தார். துணிந்து இக்கருத்தினை தக்க
சான்றுகளுடன் அறிஞர்கள் முன் வைத்ததால் அறிஞர் உலகம் அதனை ஏற்றுக்கொண்டது.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் இணையற்ற தனித்தமிழ் பற்றாளர்.இவர் மறை மலையடிகளாரின்
தனித்தமிழ் இயக்கத்தின் மீது அதிக ஏற்ப்ட்டதாலும் பாவாணர் தானும் அவர் போல் தூய தமிழ்க்
கொள்கையாளரானார்.

மறைமலையடிகளார் செந்தமிழை முதலை வாயில் பட்ட மான் கன்றை மீட்டெடுத்தார் என்றால்,
பாவாணர் அம்மான் கன்று பட்ட காயத்திற்கு மருந்திட்ட பெரும் மருத்துவர் எனலாம்.
பாவாணர் எப்போதும் தூய தமிழ்லேயே பேசியும் எழுதியும் வந்தார். அவ்வாறு நல்ல தமிழில் யார்
உரையாடினாலும், எழுதினாலும் அவர்களை அதிகம் போற்றுவார்.

''பெருமையெனப் புன்செறுக்கிற பிரிந்து வாழ்ந்து
பிறருக்கென் றீயாத புல்லரேனும்
எருமையோடு குரங்கரவம் தவளை தின்பார்
இரப்பெடுப்பார் தீயதொழு நோயரேணும்
கருமைமுகும் ஆப்பிரிக்க ர் முண்ட மெய்யர்
காடுறையும் விலங்காட மாந்ரேணும்
அருமையுறும் தனித்தமிழை விரும்பு வாரேல்
அவரன்றோ தலையாயா தமிழர் கண்டீர்
என்று தனித் தமிழ்ப் பற்றாளர்களை அவர் அதிகம் வாழ்த்தினார்.
நல்ல தமிழ் மொழியில் உரையாடுபவரே உண்மையான தமிழர் என்பார்.

நேசமணி என்ற அம்மையாரை துணைவியாக கொண்டார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.
குடும்பத்தின் மீதும் அதிக அன்பு பூண்டிருந்தார்.
முப்பதிற்கும் மேற்பட்ட நூலகளை எழுதியுள்ளார்.
தமிழ் மொழியின் மூலத்தைக் கண்டு பிடித்த இந்த மொழியியல் அரிமா தம் என்பதாம்
வயதில் 1982 -ஆம் ஆண்டு சென்னையில் மறைந்தார்.

தேவநேயப் பாவாணர் 35 -க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
ஒப்பியன்,தமிழ் வரலாறு, தமிழ் தாய், வடமொழி வரலாறு என்று சில.
இதில் திருக்குறள் தமிழ் மரபை என்ற நூல் அவரின் நுண்மான் நுழைபுலத்திற்கு தக்க சான்றாகும்

'' தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உங்களை விட்டுப் பிரிகிறேன்;
தமிழை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு''

இது அவர் இறுதியாகச் சொன்ன சொற்களாகும்.


--------------------------------------------------------------------------
-------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
--------------------------------------------------------------------------
-------






Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]