From sakthia@... Tue Dec 04 08:59:59 2001
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 4 Dec 2001 16:59:59 -0000
Received: (qmail 75497 invoked from network); 4 Dec 2001 15:22:34 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 4 Dec 2001 15:22:34 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.26) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Dec 2001 15:22:33 -0000
Received: from sakthia ([202.9.181.218] unverified) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2172.1); Tue, 4 Dec 2001 17:57:02 +0530
Message-ID: <000a01c17cbe$53db5c80$dab509ca@sakthia>
To: Cc: "pas" , "ananth" , "harikrishnan" , , "ramasamis" References: <003201c17c8c$eb7a21c0$a1bd1b42@...>
Subject: Re: Nammai-Thigaikkavaiththa Ezuththaalar Thi.Ja.Ra...
Date: Tue, 4 Dec 2001 17:50:13 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 04 Dec 2001 12:27:02.0593 (UTC) FILETIME=[FA2C6B10:01C17CBE]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 13691
திகைக்கவைத்த எழுத்துதந்த தி.f.ர.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
யிந்த 2001-ஆம் ஆண்டு எழுத்தாளர் தி.f.ர.வின் நூற்றாண்டு.யிவரது
விழாவை யிலக்கிய பீடமும், பாரதி கலைக்கழகமும் 2-12-01 அன்று(ஞாயிறு)-
'பாவாணர் நூலகத்தில்' கொண்டாடி மகிழ்ந்தது.'மூத்த எழுத்தாளர் 'ஆர்வி'
தலைமையில்...பிரபல எழுத்தாளர் "ராfரங்கன்' அவ்விழாவை அட்டகாசமாகக்
கொண்டாட தகுந்த ஏற்பாடு செய்திருந்தார்.
தி.f.ர. வுடன் நெருங்கிப் பழகிய அமுதசுரபி 'ஆசிரியர் விக்ரமன்'
(அவரது யிந்த 74 வது வயதிலும்)- தமது அனுபவங்களை மிக ருசிகரமாக ,
அனைவரும் மூக்கில் விரல்வைத்துக் கேட்கும் வண்ணம் ஒரு 'உணர்ச்சிப்'
பரவசத்துடன் சொன்னார்.
திங்களூர் fகத்ரட்சக ஐயங்கார் ரங்கனாதன்-செல்லமாய்
தி.f.ர. என மூன்று எழுத்துக்களால் குறிக்கப்படும் மூதறிஞர்,
பல துறைகளில் முன்னோடியாக விளங்கிய தமிழ் எழுத்தாளர் :
பிறந்தது1901-ஏப்ரல் மாதம்.:மறைந்தது 1974 அக்டோபர் மாதம்.
யிந்த ஆண்டு நூற்றாண்டு விழாக்காணும் அவர் தமது-73- ஆண்டு வாழ்க்கையில்
புரிந்த சாதனைகள்தாம் எத்தனை?எத்தனை!
காவிரி அன்னையின் மடியில் வளர்ந்த யித்தவப் புதல்வர்,தஞ்சாவூர்க்காரர்,
பள்ளிப்படிப்பில் நான்காம் வகுப்பைத்தாண்ட வில்லை.ஆனால் தம் முயற்சியால்,
அயராத உழைப்பால், எத்தனை எத்தனை நூல்களை எழுதிஎழுதிக் குவித்துவிட்டார்!
'லூயி பி"ர் எழுதிய 'காந்தி வாழ்க்கை, வெண்டல் வில்கியின்'ஒரே உலகம்',
'fம் கார்பெட்டின்'குமாவூன் புலிகள்',?ரீந்த்ர நாத் சட்டோபாத்யாயாவின்'கூண்டுக்கிளி'நாடகம்,லெனின்
கதைகள்,லூயி காரலின்'
அலீS'கதைகளைத் தழுவிய'அலமுவின் அதிசய உலகம்','ராff'யின்
'அபேதவாதம்' போன்ற-11- மிகச் சிறந்தநூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்துத்
தந்தவர்.
தமிழில் ருசிகரமாக,அனைவரும் சுவைத்துப் படிக்கும்படி கட்டுரை எழுதும்
சாமர்த்யம் உடையவர்.
'எப்படி எழுதினேன்', யோசிக்கும் வேளையில்?,எழுத்தும் எழுத்தாளரும்,
'மொழிப்பெயர்ச்சி', முதலிய யிவரது -9- கட்டுரைத் தொகுதிகள் நம் அறிவுக்கு
விருந்தாக அமைபவை.
" தமிழில் விஞ்ஞானக்கட்டுரை, வேதாந்தக் கட்டுரை எல்லாம் முதலில்
'அல்வா'போலப் படிக்கத் தூண்டிய முதல் எழுத்தாளர் தி.f.ர தான் எனச்
சொல்லலாம்.கனமான வி"யங்களையும் லேசாக ஒரு தனி லாகவத்துடன்
கையாண்டு1940, 1950, 60 களில் முதற் புகழ் பெற்றவர் யிவரே."--
யிதை நான் சொல்லவில்லை. அறிஞர் க. நா. சு வே அடித்துச்
சொல்லியிருக்கிறார்.
குழந்தை யிலக்கியத்திலும் அவர் ஒரு முன்னோடி சக்தியாக விளங்கினார்.
கோவிந்தன் நடத்திய "பாப்பா" யிதழின் ஆசிரியராக அவர் நாற்பதுகளில்
செய்த பணி அட்டகாசமானது.குழந்தை எழுத்தாளர் சங்கம் அவருக்கு 1959-இல்
'கேடயம்' வழங்கிக் கௌரவித்தது.
'பாப்பாவுக்கு பாரதி, பாப்பாவுக்கு காந்தி,பாப்பாவுக்குக் காந்திகதைகள்,
போன்ற நூல்கள் மூலம் முதன் முதலில் குழந்தைகட்கு நம் தேசீயத்தலைவர்களை அறிமுகப்படுத்தினார்.
சொந்த வாழ்க்கையில் யிவர் தீவிர காந்தி பக்தர்; தீவிர தேசீயவாதி;
கதர் அபிமானி;வ.ரா. வின் அத்யந்த சீடர்.அம்முறையில் யிவர் ஒரு சமூக
சீர்திருத்தவாதி,ஆனால் 'சத்தம்'போட்டு முழங்காமல், தம் எழுத்தின் மூலம்
அதைச் செய்து காட்டியவர்,அடக்கமாகப் பணி செய்தவர் என்பது அவரது எழுத்தைப்
படித்தவர்களுக்குத் தெரியும்.
அற்புதமான சிறுகதை எழுத்தாளர் யிவர்."நொண்டிக்கிளி" என்ற யிவரது
சிறுகதைத்தொகுதி மாநிலப்பரிசைப் பெற்றது.யிவருடைய மற்ற தொகுதிகளான
"சந்தனக் காவடி",'காளி தரிசனம்", விசை வாத்து" மஞ்சள் துணி' ஆகியவற்றில்
அக்கால நடைமுறை அனுபவம் பளிச்சிடும்,நகைச்சுவை மிளிரும், மனோதத்துவமும்,
மனித நேயமும் யிழையோடும்.
நேரு, பாரதி,தீனபந்து ஆண்ட்ரூS போன்றவர்களின் வாழ்க்கை
வரலாறுகளைத்தந்தவர் யிவர்.
பத்திரிகையாளராக தம் 23-ஆவது வயதில் 'சமரச போதினி' என்ற
தஞ்சைத் தமிழ் யிதழில் உள்ளே நுழைந்தவர் 'ஊழியன்',நவசக்தி',சுதந்த்ரச் சங்கு'
தமிழ்நாடு', போன்ற பல ஏடுகளில் பணி புரிந்திருக்கிறார்.
நவமணி ஏட்டின் ஆசிரியராகவும் யிருந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழில் ஒரே"டைfSட்" ஆன "மஞ்சரி"
யிதழில் 1947-லிருந்து தம் வாழ்நாள் யிறுதிவரை(1974)- ஆசிரியராக உழைத்தவர்,
அதில் பல பெரும் சாதனை படைத்தவர் என்பதுதான் யிவருக்கு பெரும்புகழ்
வாங்கித்தந்தது.
அப்பெயர் தம்மைக்கவர்ந்ததால்தான் தம் யிளைய மகளுக்கு அதே'மஞ்சரி'
என்ற பேரைச் சூட்டி மகிழ்ந்தார்.
'கணிதம்',மற்றும் "அறிவியல் துறையில்" பெரும் ஈர்ப்புகொண்டு தானே ஒரு
'ரேடியோ' அமைத்த அளவுக்கு சாதனை படைத்தவர்.சோதனை ஆர்வம் மிக்கவர்:
ஓயாது எழுத்துக்காக உழைத்தவர்;ரொம்ப எளியவர். யாரும் யிவரை யிவர்
அலுவலகத்தில் சந்தித்து நன்கு அளவளாவலாம். 'பந்தா' காட்டும் "குணம்'யிவர்
அறிந்திராத ஒன்று. நம் அகத்யர் நண்பர்களில் சில பேருக்காகவாவது யிவருடன்
பழகிய வாய்ப்புக் கிட்டியிருக்கலாம்.
அவர்கள் தத்தம் அனுபவத்தை யிங்கே சொல்லிப் பகிர்ந்துகொண்டால்
நாம் யிவரது நூற்றாண்டில் நாம் அனைவரும் கலந்து கொண்டஒரு பெருமிதத்தை
அடையலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை, மனிதத்வத்தை, தமிழை சிறுவரிடமும்
கொண்டுபோக வேண்டும் என்ற அளவுக்கு உழைத்துத் தமிழை நேசித்த தி.f.
ர. வை யின்றைய யிளம் எழுத்தாளர்கள்நிச்சயம் மறக்கலாகாது.தி.f.ர பெயர்
தமிழ் உலகம் உள்ளளவும் வாழும்!நிச்சயம் 'அவரைப்'படித்த நெஞ்சங்களில் வாழும்!
யிதில் என்ன சந்தேகம்?--
(கவியோகி வேதம்)---(விவரம் யாவும் தொகுத்துத் தந்தவர்
நண்பர் எழுத்தாளர் திரு.ராசரங்கன் அவர்கள்')-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^