From eramurug@... Tue Dec 04 15:19:38 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 4 Dec 2001 23:19:38 -0000
Received: (qmail 96699 invoked from network); 4 Dec 2001 23:19:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 4 Dec 2001 23:19:38 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 4 Dec 2001 23:19:38 -0000
Message-ID: <20011204231937.65616.qmail@...>
Received: from [210.214.131.10] by web14804.mail.yahoo.com via HTTP; Tue, 04 Dec 2001 15:19:37 PST
Date: Tue, 4 Dec 2001 15:19:37 -0800 (PST)
Subject: Re: manOnmaNiyam (Re: [agathiyar] Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள்)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011204200200.16974.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13702


> குலைகுலையாக எழுதித்தள்ளும் நீங்களே இலக்கியம் என்று நடத்திக்
> காட்டமுடியவில்லை

'குலை குலை'..'எழுதித் தள்ளுதல்' இதெல்லாம் தற்காலத்தமிழ் இலக்கியம்
பற்றியும் அதை எழுதுகிறவர்கள் பற்றியுமான கீழ்த்தரமான மதிப்பீட்டால்
வரும் வார்த்தை வீச்சுக்கள்.

நான் உருவம், உத்தி, உள்ளடக்கத்தில் புதுமை சேர்த்து என் பெயர் சொல்ல
நூற்றுக் கணக்கான துரும்புகளைக் கிள்ளிப் போட்டிருக்கிறேன். சங்க இலக்கியக்
கடலில் மூழ்கியிருந்து விட்டு அவ்வப்போது வெளியே வந்து வெற்று வார்த்தை
நாட்டாண்மை செய்து கொண்டிருக்கவில்லை.

மனோண்மனியம் முழுக்கப் படித்துவிட்டு நான் அது பற்றிக் கருத்துச்
சொல்கிறேன். நீர் தற்கால இலக்கியத்தில் எவ்வளவு படித்திருக்கிறீர்?


> மனோன்மணியத்தைக் குறை கூறுவதை இன்றுதான்
> கேட்கிறேன்.

'ஆங்கிலக் கதையை அவசரமாக விழுங்கி சரிக்காமல் சுந்தரம்பிள்ளை எடுத்த
வாந்தி' என்று ஜெயகாந்தன் சொன்னார். அவரை என்ன செய்யப் போகிறீர்?

> புதுமைப் பித்தன் திரிசொல்/திசைச்சொல்லுக்கும் கொச்சை வடிவத்திற்கும்
> வேறுபாடில்லாமல்
> எழுதி மொழியை மதியாமல் சிதைத்தபோதே படைப்புகளின் குணத்தையும்
> சிதைத்தார்.

பின்னே இல்லையா?

ஒற்றைச் சிதையில் உம் எல்லோரையும்
வைத்து எரித்தாலும் வயித்தெரிச்சல் போகாது

என்று சொன்ன மகானுபாவர் இல்லையா அவர்?

அவர் சிதையிலேயே அப்போது இருந்த தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரையும்
வைத்து எரித்திருக்கலாம. அப்புறம் பிறந்த என் போன்றோரை அடுத்த
இன்ஸ்டால்மெண்ட்களில் எரித்திருக்கலாம். வந்து படுக்க மாட்டேன் என்று
சொன்னால், எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக வைத்துக்
கொளுத்தியிருக்கலாம். டிஜிட்டைஸ் செய்து வைத்திருந்தாலும் தேடித்தேடி
அழிக்கலாம்.

அப்புறம் 'தலைவன்', 'தலைவி', 'பரத்தை' 'கற்பொழுக்கம்' என்று இன்னும்
மூவாயிரம் வருடம் ஜல்லியடிக்கலாம். (ஜல்லியடித்தல் என்ற அதியற்புத
பிரயோகத்தைக் கண்டு பிடித்த சுஜாதாவைத் தனியாகக் கழுவேற்றலாம்).
ஆமா, அதென்ன, கற்பு கற்பு என்று கதைக்க ஒரு தலைவி, உடற்பசியைத்
தணித்துக் கொண்டு 'சீ போ' என்று இகழப் பரத்தை..அப்புறம்
நாற்குணம்..மண்ணாங்கட்டி, தெருப்புழுதி என்று பேச்சு வேறு..

>உங்களால் உயர்ந்த உணர்வைத் தூண்டும் ஒரு கதையாவது எழுத முடியுமா?
>உங்களால் கற்பனையாகவாவது இக்காலச்சூழலிலும் சால்பு குன்றாமல் நடக்கமுடியும்
>என்று காட்டும் ஒரு கற்பனையை வடிக்க உங்களுக்கு வளப்பம் உண்டா?

என்னுடைய கதைகளில் எத்தனை நீர் படித்திருக்கிறீர்? உம் கேள்விகளை என்
ஆயிரக் கணக்கான ரசிகர்களிடம் கேட்டுப் பாரும். அகத்தியத்திலேயே
அவர்களில் சிலர் உண்டு. அவர்கள் பதில் சொன்னால் எனக்கு மகிழ்ச்சி.
சொல்லாவிட்டாலும் மகிழ்ச்சிதான்.

அப்துல் ரகுமான் சொன்னார்

அக்கரையில் திருவிழா நடக்கும்போது
இக்கரையில் படகைக் கழுவிக் கொண்டே
இருக்கும் படக்குக் காரர்கள்.

எல்லாக் கரைகளிலும் விழாக்கள் நடந்தபடி இருக்கின்றன. இங்கே யுகக்
கணக்காகப் படகைக் கழுவிக் கொண்டேதான் இருக்கிறோம். நமக்கு எங்கேயும்
போக வேண்டாம். போனால் படகு அழுக்காகி விடும்.

படுபாவி ஞானக்கூத்தன் சொன்னதோடு முடிக்கிறேன்-

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் பிறர் மேல் அதை
விடமாட்டேன்.

(ஞானக்கூத்தனை என்ன செய்யலாம் என்று பட்டி மன்றம் நடத்தலாம்).


தலிபான்கள் மிரட்டித்
தாடி வளராது.
மழிப்பதும் நீட்டுவதும்
அவரவர் விருப்பம்.

எல்லோருக்கும் நன்றி. வணக்கம். விடை பெறுகிறேன்.

அன்புடன்,
இரா.முருகன்




__________________________________________________
Do You Yahoo!?
Buy the perfect holiday gifts at Yahoo! Shopping.
http://shopping.yahoo.com