From vanchi@... Tue Dec 11 17:04:59 2001
Return-Path:
X-Sender: vanchi@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 12 Dec 2001 01:05:02 -0000
Received: (qmail 84801 invoked from network); 12 Dec 2001 01:05:01 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 12 Dec 2001 01:05:01 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 12 Dec 2001 01:04:59 -0000
Received: from [216.115.96.132] by n29.groups.yahoo.com with NNFMP; 12 Dec 2001 01:04:59 -0000
Date: Wed, 12 Dec 2001 01:04:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: A tribute to Bharathi
Message-ID: <9v6afo+9ldb@eGroups.com>
In-Reply-To: <007801c18262$958f7fe0$6cf0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 913
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vanchi63"
X-Originating-IP: 203.197.129.44
X-Yahoo-Group-Post: member; u=25020646
X-Yahoo-Profile: vanchi63
X-Yahoo-Message-Num: 13930



பாரதியின் பிறந்த நாளுக்குச் சற்றே தாமதமாக வந்த இப்பாடலை ஏற்றுக் கொள்ளும்படி
அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்:


தானன தானன தானன தானன
தானன தானன ---- தனதான

பாட்டினில் சீற்றமும் ஏக்கமுந் தாகமும்
பாங்குடன் தோன்றிடுந் திறத்தோனே
பாரத நாட்டினில் மூடர்கள் சாத்திரம்
பார்த்ததும் போரிட எழுந்தோனே

ஏட்டினி லாங்கில ஆட்சியைச் சாடிடும்
ஏறென நாட்டினிற் றிகழ்ந்தோனே
ஈசனின் பார்வையில் யாவரு மோரினம்
ஈனரிங் கியாரென வெகுண்டோனே

வாட்டிடும் பேரிடர் சூழ்ந்திடும் போதிலும்
வாக்கினில் நேர்மையுந் தவறாது
வானையுங் காற்றையும் ஊழியின் கூத்தையும்
வாழ்த்திடும் மாண்பினை யுடையோனே

வீட்டினுள் பாவையைப் பூட்டிடும் போக்கினை
வீழ்த்திட பாடலை யிசைத்தோனே
வீறுடன் மாந்தரை வாழ்ந்திடத் தூண்டிடும்
வேட்கையை யூட்டிய கவிநீயே

--- வாஞ்சிநாதன்