From harikris@... Tue Dec 11 17:55:48 2001
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 12 Dec 2001 01:55:48 -0000
Received: (qmail 11436 invoked from network); 12 Dec 2001 01:55:47 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 12 Dec 2001 01:55:47 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Dec 2001 01:55:47 -0000
Received: from harikris ([203.199.240.143]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GO7K0U03.EH9 for ; Wed, 12 Dec 2001 07:25:42 +0530
Message-ID: <002401c182de$45a24ea0$8ff0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" References: <9v5jff+bt3j@eGroups.com>
Subject: Re: [agathiyar] Re: Bharathikkup pallandu!
Date: Wed, 12 Dec 2001 07:26:07 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13931
அன்புள்ள கணேசன்,
தாங்கள் சொல்வது உண்மையே. "தோகைமேல் உலவும் கந்தன்" என்று ஒற்றைக் கண்ணியாகக் கருதப்பட்டதை நான்கடிகளில் கடைசி இரண்டடிகனின் மேற்கோள் என்று எடுத்துக் காட்டியவர் பேராசிரியர் குருசாமி. செவ்வந்திப் புராணம்தான். சைவ எல்லப்ப நாயகர் இயற்றியது என்றும் அவர் சொல்கிறார்.
ஓகையால் திரைமுன் னாளில்
உழக்கும்மா வினையும் வாட்டும்
வேகவெவ் வரையி னெல்லை
பிடித்திடும் iமையோர் போற்றத்
தோகைமேல் உலவும் கந்தன்
சுடர்க் கரத்திருக்கும் வெற்றி
வாகையே சூடும் வேலை
வணங்குவ தெமக்கு வேலை
என்ற பாடலில் பாரதி பின்னிரண்டடிகளை மேற்கோளாகக் காட்டியிருந்தார். "செய்கை" என்ற கதையில். "அந்தக் காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் வருமாறு" என்று எழுதியே அதை மேற்கோள் காட்டியிருந்தார். நம் பதிப்பாளர்கள் பிடிவாதமாக பாரதி பாடல்தான் என்று ன்னும் பதிப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பேராசிரியர் 1987ல் வெளிவந்த தஞ்சைப் பல்கலைக் கழகப் பதிப்பில் எடுத்துக் காட்டிவிட்டார். அதற்கு முன்னால் 1981ல் வெளிவந்த 'வித்தகர் வாழ்க்கை' என்ற கட்டுரைத் தொகுதியிலும் சொல்லியிருக்கிறார் என்பதை அடிக்குறிப்பு சொல்கிறது. ஆறேழு மாதங்களுக்கு முன் ஒரு வினாவுக்கு விடையளிக்கையில் மன்ற மையத்தில் இதனைச் எடுத்துக் காட்டியிருக்கிறேன்இஇஇஇஇஇஇ.
ஆனால் நான் என் அஞ்சலில் சொல்லியிருப்பதும் அவர் சொன்னதுதான். குறள் வெண்பா என்பதும், பாரதியின் எழுத்து என்று சொல்லியிருப்பதும் அவர்தான். நானும் மேற்கோள்தான் காட்டியிருக்கிறேன். ;-) (பாரதி பாடல்கள், ஆய்வுப் பதிப்பு, தஞ்சைப் பல்கலைக் கழக வெளியீடு, பக்கம் 1140-1141.) இந்தக் குறிப்பைப் பார்க்குமுன் ஒரு வெண்பாவின் பிற்பகுதியை மேற்கோள் காட்டியிருக்கிறார் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சொற்களில் பாரதியின் வாசனை இல்லை என்பதால்.
தாங்கள் சொல்லும் நூல் இனிமேல் கிடைக்குமா தெரியாது. மூர்மார்க்கெட் கூட தீக்கிரையாகிப் பல வருடங்கள் ஆகின்றன. திருவல்லிக்கேணி நடைபாதைக் கடைகளில் கிடைத்தால் உண்டு. மைலாப்பூர் ஆழ்வார் கடை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அண்மையில் அந்தப் பக்கம் போனபோது பார்த்த நினைவில்லை.
அன்புள்ள,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: naga_ganesan
To: agathiyar@yahoogroups.com
Sent: Tuesday, December 11, 2001 6:32 PM
Subject: [agathiyar] Re: Bharathikkup pallandu!
கவிஞரே,
எனக்கு பேரா. குருசாமி அய்யாவை நன்கு தெரியும்.
அவர்தான் பாரதியர் செய்த விருத்தம் என்று அச்சுப்போட்டதை
புராணப் பாடல் எனக் காட்டியவர். (செவ்வந்திப் புராணம் என்று நினைவு).
சாற்றுவதும் காமகலை என்னும் வெண்பாவைக் கொக்கோகத்தில் காண்க.
அதையே பாரதி சொல்லுகிறார். ஒருசீரை எடுத்துவிட்டு.
அன்புடன்,
நா. கணேசன்
[Non-text portions of this message have been removed]