From naga ganesan@... Tue Dec 11 18:59:21 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 12 Dec 2001 02:59:21 -0000
Received: (qmail 31238 invoked from network); 12 Dec 2001 02:59:21 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 12 Dec 2001 02:59:21 -0000
Received: from unknown (HELO n23.groups.yahoo.com) (216.115.96.73) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 12 Dec 2001 02:59:21 -0000
Received: from [216.115.96.149] by n23.groups.yahoo.com with NNFMP; 12 Dec 2001 02:59:20 -0000
Date: Wed, 12 Dec 2001 02:59:19 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: A tribute to Bharathi
Message-ID: <9v6h67+osit@eGroups.com>
In-Reply-To: <9v6afo+9ldb@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1128
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.229.60
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13932
அருமையான திருப்புகழ். எளிய உடைபடாத வார்த்தைகள்!
--- In agathiyar@y..., "vanchi63" wrote:
>
>
> பாரதியின் பிறந்த நாளுக்குச் சற்றே தாமதமாக வந்த இப்பாடலை ஏற்றுக் கொள்ளும்படி
> அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்:
>
>
> தானன தானன தானன தானன
> தானன தானன ---- தனதான
>
> பாட்டினில் சீற்றமும் ஏக்கமுந் தாகமும்
> பாங்குடன் தோன்றிடுந் திறத்தோனே
> பாரத நாட்டினில் மூடர்கள் சாத்திரம்
> பார்த்ததும் போரிட எழுந்தோனே
>
> ஏட்டினி லாங்கில ஆட்சியைச் சாடிடும்
> ஏறென நாட்டினிற் றிகழ்ந்தோனே
> ஈசனின் பார்வையில் யாவரு மோரினம்
> ஈனரிங் கியாரென வெகுண்டோனே
>
> வாட்டிடும் பேரிடர் சூழ்ந்திடும் போதிலும்
> வாக்கினில் நேர்மையுந் தவறாது
> வானையுங் காற்றையும் ஊழியின் கூத்தையும்
> வாழ்த்திடும் மாண்பினை யுடையோனே
>
> வீட்டினுள் பாவையைப் பூட்டிடும் போக்கினை
> வீழ்த்திட பாடலை யிசைத்தோனே
> வீறுடன் மாந்தரை வாழ்ந்திடத் தூண்டிடும்
> வேட்கையை யூட்டிய கவிநீயே
>
> --- வாஞ்சிநாதன்