From kisna@... Wed Dec 12 15:11:56 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 12 Dec 2001 23:11:56 -0000
Received: (qmail 60238 invoked from network); 12 Dec 2001 23:11:56 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 12 Dec 2001 23:11:56 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 12 Dec 2001 23:11:55 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by sombre.pacific.net.sg with ESMTP id fBCNBKK06160; Thu, 13 Dec 2001 07:11:20 +0800
Received: from kisna (mcns18.docsis28.singa.pore.net [202.156.28.18]) by smtp1.pacific.net.sg with SMTP id fBCNBKN11926; Thu, 13 Dec 2001 07:11:20 +0800
Message-Id: <3.0.6.32.20011213070859.008498c0@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 13 Dec 2001 07:08:59 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Tamil Vaza.../தமிழ் வாழ வந்தவர்கள் # 26
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 13947
தமிழ் வாழ வாழ்ந்தவர்கள் # 2
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எஸ். வையாபுரிப்பிள்ளை (1891 -1956)
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் ஆராய்ச்சித் துறையில் தனியிடம் பெற்று விள்ங்கும் பேராசிரியர்
வையாபுரிப் பிள்ளை தமிழிலும் சைவத்திலும் ஆழ்ந்த பயிற்சி
உடையவர். சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் தமிழ்த்
தொண்டு ஆற்றப் புகுந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆராய்ச்சி
நூல்கள் பலவற்றை இவரிற்றியுள்ளார். சென்னைப் பலகலைக்கழகம்
வெளியிட்ட தமிழ் பேரகராதியின் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று
அதைச் சிறந்த முறையில் பதிப்பித்துவர்!
''... துயிலுணர்ந்தவுடன் நீராடுதல், இக்காலத்து கிராமாந்தரங்கல் போலவே,
பண்டைக்காலத்தும் வழக்கமாக இருந்தது. மணலினால் செய்த பாவைக்குப்
பூக்களை அணிந்து, நீராடுகின்ற பெண்களோடு தானும் கைகோர்த்து அவர்கள்
சேர்ந்து நின்ற இடத்தே தானும் அசைந்து நின்று கபடமற்ற மனத்தராகிய
அப்பெண்களின் கூட்டத்தோடு நீர்த் துறையிலே, நீரோடு நெருங்கித் தாழ்ந்துள்ள
மருதமரக்கிளைகளில் ஏறி, கரையில் உள்ளவர் திகைக்க, தண்ணீர் சிதர்ந்து பரவ,
ஆழந்த் குளத்தில் ஒருவன் துடும் எனப்பாய்ந்து குளித்த செய்தி ஒன்று புறநானூற்றிலே [243]
அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தெழுந்த பாவை நோன்பு
அதிகாலையில் நிகழ்ந்த இந்நீராட்டினை அடிப்படையாக் கொண்டதே...''