From jaybee@... Fri Dec 14 01:44:00 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 14 Dec 2001 09:43:58 -0000
Received: (qmail 54568 invoked from network); 14 Dec 2001 09:43:57 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 14 Dec 2001 09:43:57 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 14 Dec 2001 09:43:59 -0000
Received: from user (sp-103-82.tm.net.my [210.186.103.82]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GOB0021CV19OH@...> for agathiyar@yahoogroups.com; Fri, 14 Dec 2001 17:43:58 +0800 (SGT)
Date: Fri, 14 Dec 2001 17:45:59 +0800
Subject: Re: [agathiyar] 60 years ago.....A True story#3
In-reply-to: <3.0.3.32.20011208230118.01d73b54@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011214174559.0071bdf0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011207215057.0070fd70@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13964
At 11:01 PM 12/8/01 +0800, you wrote:
>At 09:50 PM 12/7/01 +0800, JayBee wrote:
>>
>>அன்பர்களே,
>>
>> இது ஒரு உண்மைக் கதை. என் வாழ்க்கையுடன் நெருக்கமாகச்
>>சம்பந்தப்பட்டது. வாழ்க்கையின் திசையை மாற்றிவிட்டது.
>> இன்று டிசம்பர் 7-ஆம் தேதி.
>> சரியாக அறுபதாண்டுகளுக்கு முன்னர் 7-12-1941-இல்
>>ஜப்பானியப் பேரரசு, மலாயாத் தீபகற்பத்தின்மீது படையெடுத்தது.
>
இந்த இடத்தில் இரண்டு உண்மைக் கதைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
பினாங்கில் பிஷப் ஸ்ட்ரீட்டில் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில்
ஒரு வழக்கறிஞர் குடும்பம் வசித்து வந்தது. அவர் மிகவும் வசதியானவர்.
B-52 குண்டு வீச்சு நடந்த சமயத்தில் அவர் தமது வீட்டில் தரைக்கடியில்
ஒரு பாதாள அறையைக் கட்டுவித்தார். ஒவ்வொரு முறை குண்டுவீச்சின்
போதும் தம் குடும்பத்துடன் அவர் அந்த நிலவறைக்குள் பத்திரமாக
இருந்துகொள்வார்.
ஆனால் அவர் வீட்டின் மீது குண்டு விழுந்தபோது, அந்த வீடு
இடிந்து, அதன் மேற்கூரை, மேல் மாடி, சுவர்கள் முதலியவை நிலவறையின்
மீது விழுந்துவிட்டன. அக்காலத்தில் கட்டிய Chinese type of
shop houses -இல் மேல் மாடி, நல்ல மரப்பலகைகளால் செய்யப்பட்டிருக்கும்.
டன் கணக்கில் மரச்சட்டங்களும் உத்தரங்களும் பலகைகளும் தீப்பிடித்துக்
கொண்டன.
அந்த வழக்கறிஞர் குடும்பம் நிலவறையிலேயே மடிந்துவிட்டது.
அதே தெருவில் இன்னொரு வீட்டில் இன்னொரு வழக்கறிஞர்
இருந்தார். இவர் அந்தக் காலத்திலேயே லண்டனில் மேற்படிப்புப்
படித்துவிட்டு வந்தவர்.
வேறொரு சமயம் நடந்த குண்டு வீச்சின்போது அவர் நீதி
மன்றத்துக்குச்சென்றிருந்தார். அந்தக் குண்டு வீச்சில் அவர் வீடு தரை
மட்டமாகியது.
அவர் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது அவருடைய
குடும்பத்தினர் அனைவருமே இறந்துவிட்டதை அறிந்தார். அந்த இடிபாடுகளின்
மீது கரிபடிந்து, சற்றுத் தீய்ந்துபோன ரோமத்துடன் அவருடைய குடும்பத்தினர்
ஆசையுடன் வளர்த்து வந்த பூனை அமர்ந்துகொண்டு பரிதாபமாகக்
கத்திக்கொண்டிருந்தது. அவரைப் பார்த்தபூனை எழுந்து வராமலேயே
உட்கார்ந்திருந்தது. இடிபாடுகளின்மீது ஏறி அந்தப் பூனையை எடுத்துக்
கொண்ட அந்த வழக்கறிஞருக்கு அப்போதேயே சித்தப்பிரமை ஏற்பட்டுவிட்டது.
உலக யுத்தத்துக்கு நான்கு ஆண்டுகளுக்குப்பின்னர் நாங்கள்
பினாங்கில் வந்து வசித்தபோது, அந்த வழக்கறிஞரைப் பார்த்திருக்கிறேன்.
மிகவும் கிழடு தட்டிப்போய், மிகவும் ஒல்லியாக, கூனலால் மடங்கிய உடலுடன்,
கந்தல் சட்டை, அரைக்கால் சட்டையை அணிந்துகொண்டு ஒரு பழைய பிய்ந்த
கூடையை இழுத்துக் கொண்டு அங்குமிங்கும் சென்று கொண்டிருப்பார்.
அவருடைய உலகச்சொத்துக்கள் முழுமையும் அந்த கூடையில் இருக்கும்.
அவருடைய கூடை, முதுகு, தலை, தோள்கள் அனைத்தின் மீதும் பூனைகள்
அமர்ந்து கொண்டிருக்கும். அவரைச் சுற்றிலும் பல பூனைகள் இருந்தன.
பிஷப் ஸ்ட்ரீட்டில் ஒரு சந்துக்குள் இருந்த சீனர் கோயில் ஒன்றின் தாழ்வாரத்தில்
அவர் இருப்பார்.
ஏழெட்டு ஆண்டுகள் அவரை அப்படிப்பட்ட நிலையில் பார்த்திருக்கிறேன்.
அன்புடன்
ஜெயபாரதி
> இப்படியாக 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிங்கப்பூரையும்
>கைப்பற்றிக்கொண்டனர்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>===========================