From nswaminathan@... Fri Dec 14 08:19:26 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 14 Dec 2001 16:19:26 -0000
Received: (qmail 75012 invoked from network); 14 Dec 2001 16:19:25 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 14 Dec 2001 16:19:25 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 14 Dec 2001 16:19:25 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fBEGIGh28493 for ; Fri, 14 Dec 2001 08:18:16 -0800 (PST)
Message-ID: <003701c184ba$b3c80c20$a1bd1b42@...>
To:
Subject: Re: [agathiyar] maNakka maNakka
Date: Fri, 14 Dec 2001 08:16:35 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 13970

ஒரு வாரம் சிக்கிலாரின் நாதஸ்வர இசையையும், அடுத்த வாரம் அதற்கு
தில்லானா மோகனாம்பாள் ஆட்டத்தையும் சுப்புடு விவரித்து எழுதியிருந்தாரல்லவா.

கதையைச் சுவை குன்றாமல் திரைக்கதையாக அமைத்திருந்தார் ஏபி நாகராஜன்.
நடிகர் தேர்வும் கச்சிதம்.

-----Original Message-----
From: era.murugan achwin
To: agathiyar@yahoogroups.com
Date: Friday, December 14, 2001 7:08 AM
Subject: [agathiyar] maNakka maNakka


சண்முகசுந்தரமும் மோகனாவும் செல்லும் ரயில் மதுரை, வைகை ஆற்றுப் பாலத்தின்
மேல் போய்க் கொண்டிருந்தது. அது பழங்காலத்து ரயில்.

அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியே அழகாக இருந்தது. சுற்றிலும் பித்தளைக்
குழாய்களில் கிராதி அமைத்திருந்தார்கள். எதிர் எதிராக இரண்டு
படுக்கைகளும் ஒரு ஓரத்தில் இன்னொரு படுக்கையுமாக மூன்று ஆசனங்கள் இருந்தன.
அந்தப் பெட்டிக்குள்ளே இருந்த 'கோட் ஸ்டாண்டு'களில் எல்லாம், மல்லிகைப் பூ
மாலைகளும், ரோஜாப்பூ மாலைகளும் மாட்டப் பட்டிருந்தன. திருமங்கலம்
ரோஜாப்பூவும் திருப்பரங்குன்றம் மல்லிகைப்பூவும் மணம் வீசி வண்டி முழுவதும்
பரிமளம் நிரம்பியிருந்தது. நல்ல பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து
அரைத்துப் பன்னீர் விட்டுப் பிசைந்த கையரவைச் சந்தனம் ஒரு இலையில்
இருந்தது. அம்மனின் சந்தனக்காப்பு பிரசாதம் ஆதலால் பட்டர் அதைக் கட்டிக்
கொடுத்திருந்தார். அந்தச் சந்தனத்தின்வாசனையும் மலரின் வாசனையும்
இளங்காற்றின் கலந்து வீசிக் கொண்டிருந்தன. சண்முகசுந்தரத்தின் அங்கவஸ்திரம்
காற்றில் பறக்கும்போதெல்லாம் அதில் போட்டிருந்த கதம்ப அத்தர் ஜம்மென்று
வாசனையை வீசியது.

அந்த வண்டி முழுவதும் சுகந்தம் மணக்க, அவர்கள் இருவரும் கடைக்கண்ணால் ஒருவரை
ஒருவர் பார்த்த வண்ணம் வாய் பேசாது உட்கார்ந்திருந்த காட்சி புது மண இரவை
ஞாபகம் ஊட்டியது.

(கொத்தமங்கலம் சுப்பு ('கலைமணி') எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்'
நாவலில் இருந்து - வெளியான ஆண்டு 1956)

நிஜமாகவே கமகமவென்று வாசமடிக்கும் தமிழ்நடை!

அன்புடன்,
இரா.முருகன்



__________________________________________________
Do You Yahoo!?
Check out Yahoo! Shopping and Yahoo! Auctions for all of
your unique holiday gifts! Buy at http://shopping.yahoo.com
or bid at http://auctions.yahoo.com


---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/