From kisna@... Fri Dec 14 16:57:39 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 2); 15 Dec 2001 00:57:37 -0000
Received: (qmail 97713 invoked from network); 15 Dec 2001 00:57:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 00:57:37 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 00:57:38 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by spade.pacific.net.sg with ESMTP id fBF0v6027926; Sat, 15 Dec 2001 08:57:06 +0800
Received: from kisna (mcns18.docsis28.singa.pore.net [202.156.28.18]) by smtp2.pacific.net.sg with SMTP id fBF0v5N06503; Sat, 15 Dec 2001 08:57:05 +0800
Message-Id: <3.0.6.32.20011215085442.00858100@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 15 Dec 2001 08:54:42 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Ainnum Ezuththum .# 2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 13978



எண்களும் ,எழுத்தும்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''

பிறந்த எண் :-- 2. சந்திரன் [2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ]
````````````````````````````````````````````````````````````````````````````
``````````````````
சிருஷ்டியில் ஒன்றாக இருந்து சலனமடைந்து இரண்டாயிற்று. சலனமடைந்து உண்டான்படியால்
நீர் தத்துவமாயிற்று. இதிலிருந்து உண்டானது மனம். இது சந்திரனால் ஆளப்படுகிறது.
மனதின் தீவிர குணங்களான பாவனை, கற்பனை, சந்தேகம், ஆராயச்சி இவைகள் எல்லாம் இவர்களிடம்
காணப்படும்.சலன மனதால் இவர்கள் நம்பிக்கையற்றவர்கள். தைரியமாக்த் தன்னையும் நம்பமாட்டார்கள்.
பிறரையும் நம்பமாட்டார்கள்.எதையும் தானே செய்தால்தான் திருப்தி ஏற்படும். இவர்களுக்கு சாமர்த்தியம்
போதாது.
இவர்கள் வாழ்க்கை ஒரு விசித்திரம் நிறைந்தது. பொறுத்துக் கொள்ள முடியாததை பொறுத்துக் கொள்ளவேண்டிய
நிலையும், ஜீரணிக்க முடியாத ஒரு விஷயத்தை ஜீரணிப்பதுதான் உங்கள் தலை விதி.

அன்னை கூட அன்பு காட்டவில்லையே என்கிற ஆதங்கள் உண்டு.
எல்லையில்லா இந்த மனித வாழ்வில் உறவு என்று சொல்லிக் கொள்ள உருப்படியான ஓர் உறவு இல்லை.
வாழ்க்கை வாழ்வதற்கு எவ்வளவோ ஆசைகள். அதற்கு எத்தனை தடைகள்.
கரை சேர்வோமா? மூழ்கிப் போவோமா? என்கிற சந்தேகம்.
தனிமையில் விடுபட்ட மாதிரி ஒரு பிரமை. யாரிடம் சொல்வது, நம் சொல்வது நமது குறைகளை,
ஆறுதல் சொல்ல ஒரு ஜீவன் கூட இல்லாமல் போயிற்று என்ற ஏக்கம். என்னால் எவ்வள்வோ பயன் அடைந்து
உள்ளனர், என்னை உதாசீனப்படுத்திய போதும் பொறுமையாக இருக்கிறேன்.
எவ்வளவு பேர்கள் எத்தனை கெடுதல் செய்த போதும் யாருக்கும், எந்த உயிருக்கும் நான் துன்பம்
செய்ததில்லை. தீங்கு செய்தது இல்லை, அப்படி இருக்க எனக்கு ஏன் இத்தனை தடைகள்,துனபங்கள்
என்று நீங்கள் இறைவனிடம் கேட்பது, முறையிடுவது சரிதான்.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மனிதர்களிடம் மதிப்பு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், இறைவனிடம் மதிப்பு இருக்கலாம். மற்ற எந்த கிரகங்களுக்கு இல்லாத ஓர்அபூர்வ சிறப்பு
சந்திரன் ஒன்றுக்கே உண்டு.

சிவபெருமான் தலையில் இருக்ககூடிய கிரகம் சந்திரன் ஒன்றுதான். யாரையாவது நாம் புகழும் போது
அவரை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறார் என்று சொல்லுவதுண்டு. தான் பெற்ற குழந்தையை
தந்தை தலை மீது வைத்து அன்பு காட்டுவது,அளவு கடந்த அன்பின் வெளிபாடு. அதுபோல் சந்திரனை
சிவபெருமான் தலையில் வைத்து ஆடுகிறார் என்றால் இத்ற்கு வார்த்தையே இல்லை. இந்த் எண்ணின்
சிறப்பை சொல்ல இந்த விள்க்கம் ஓர் உதாரணம்.

கடந்த பின் வாழ்க்கை புரிகிறது. சொந்த, பந்தங்களை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆரம்பத்தில் இதை புரிந்து இருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்என்று ஆதங்கள்
படாதீர்கள்.உங்கள் வாழ்க்கை சரிவில்இருந்து உயர்வில் முடிய வேண்டிய விதி சங்கடத்தில்
இருந்து சந்தோஷ்ம், மகிழ்ச்சி. சஞ்சலத்தில் இருந்து சரித்திரம் துவக்கம்.
உங்கள் வாழ்க்கையின் வினோதத்தை உங்களாலே புரிந்துகொள்ள முடியாது.

இருந்து இருந்தாற் போல் ஒரு வேலை செய்வீர்கள். தீடீர் என வருமானம் வரும்.
உடன் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை தீரும். உங்கள் வாழ்க்கை பல விசித்திரமான
மாற்றங்களை கொண்டது.

குறிப்பு:--
சந்தேக சுபாவம் உள்ளவர்களாக இருப்பதால் உள்ளன்புடன் நேசிப்பவர்கள் கூட இவர்களுடன்
சேர்ந்து வாழ்வதை விரும்புவதில்லை.
சதா குற்றம் கண்டுப் பிடித்தலையும், விதண்டாவாதம் செய்யவதையும் குறைத்துக்கொண்டு
வந்தால் மேன்மையான குணங்கள் சீக்கிரமே பிரகாசிக்கும். சாந்தமாகவும், நேர்மையாகவும்
மற்றவர்களோடு பழகினால் சீக்கிரமே இவர்கள் எல்லோருரையும் வசீகரிப்பர்...., வாழ்வார்.

நோய்:-- ஜீரண் குறைவு, மூத்திரக் காய்கள் சம்பந்தமான் நோய்கள் விரைவாக ஏற்படும்.
நீரிழிவு [Diabetes] போன்ற நோய்கள் பற்றும். கண்ணில் நீர் வடிந்து கண் நோய் ஏற்படுவது
கூட உண்டு. அதிக நீர் பருகுதல் நலம்.

==============================================